Baakiyalakshmi serial: நன்றி சொன்ன பாக்கியா.. கைகொடுத்த கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த தொடரில் அடுத்தடுத்து தன்னுடைய மகன்களான எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் பாக்கியா காணப்படுகிறார். அவர் மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அனைவரும் தற்போது கவலையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து குடும்பத்தினர் யாரும் மீளாமல் உள்ளனர். இந்நிலையில் தற்போது அடுஈத்ததாக எழில் வாழ்க்கையில் கணேஷ் மூலமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய மனைவி அமிர்தா மற்றும் மகள் நிலாவை யாருக்காகவும் எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் என்பதில் கணேஷ் உறுதியாக காணப்படுகிறார். கோயிலில் அமிர்தா மற்றும் எழிலை சந்தித்து அதிர்ச்சிக் கொடுக்கும் கணேஷ், அவர்களை தொடர்ந்து வீட்டிற்கும் வந்து கோபத்துடன் அமிர்தாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சண்டையிடுகிறார். எழில் அமிர்தாவை தொடக்கூடாது என்றும் கூறுகிறார். இதையடுத்து இரு குடும்பத்தினர் இடையே சண்டை ஏற்படுகிறது. அமிர்தாவின் அம்மாவும் தன்னுடைய மகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமல் கணேஷ் ஒதுங்கிக் கொள்ள அறிவுறுத்துகிறார். ஆனால் இதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் தன்னுடைய அமிர்தா மற்றும் மகளை அழைத்து செல்வதிலேயே குறியாக காணப்படுகிறார் கணேஷ்.

பாக்கியலட்சுமி தொடர்: பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது முக்கியமான கட்டம் ஏற்பட்டுள்ளது. இறந்துவிட்டதாக நினைக்கப்பட்ட கணேஷ் மீண்டும் திரும்பி வந்த நிலையில், அமிர்தா மற்றும் தன்னுடைய மகள் நிலாவை நினைத்து ஏங்குகிறார். அவர்களை தன்னுடைய ஊருக்கு அழைத்துப் போகும் மனநிலை அவருக்கு காணப்படுகிறது. இதற்காக பாக்கியாவிற்கு ஒரு மாதகாலமும் கொடுத்து காத்திருக்கிறார். இந்நிலையில் கொடுத்த காலகெடு நிறைவடைய கோயில் அமிர்தா மற்றும் எழிலை சந்தித்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
கணேஷ் என்ட்ரி: தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கும் வந்து அமிர்தாவையும் நிலாவையும் தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறார். ஆனால் கணேஷ் இறந்துபோனதாக நினைத்து எழிலை திருமணம் செய்துக் கொண்டு ஒரு ஆண்டுகாலம் புதிய வாழ்க்கைக்கு பழகிய அமிர்தாவிற்கு கணேஷின் வருகை அதிர்ச்சியை கொடுக்கிறது. அமிர்தாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டு அவரது மகளான நிலாவையும் தன்னுடைய மகளாக ஏற்றுப் பழகிய எழிலுக்கும் கணேஷின் வருகை அதிர்ச்சையை கொடுத்த நிலையில், நிலாவும் கணேஷிடம் வர பயப்படுகிறார்.
பாக்கியா குடும்பத்தினர் போர்க்கொடி: இந்நிலையில் கணேஷை எதிர்த்து, அவரது வருகையை எதிர்த்து எழில் குடும்பத்தினர் அனைவரும் போர்க்கொடி தூக்குகின்றனர். குழந்தை பிறந்ததே தெரியாமல் இரண்டு வருடங்களுக்கும் மேல் இல்லாமல் தற்போது திடீரென வந்தது குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தன்னுடைய மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதை நினைத்து செய்வதறியாமல் பாக்கியா திகைத்து நிற்க, கணேஷிடம் ஆத்திரத்துடன் பேசுகிறார். அமிர்தா தன்னுடைய மருமகள் என்றும் நிலா தன்னுடைய பேத்தி என்றும் உறுதியாக கூறுகிறார்.
குடும்பத்தினரை கவர்ந்த கோபி: அவரது இந்த செய்கை குடும்பத்தினர் இடையே மிகப்பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தன்னுடைய தந்தையை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருந்த எழிலும் கோபியின் தோள்களில் சாய்ந்து அழுகிறார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிரமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் இக்கட்டான சூழ்நிலையில் சரியாக நடந்துக் கொண்ட கோபிக்கு பாக்கியா நன்றி கூறுகிறார். தொடர்ந்து பேசும் கோபி, இந்த சூழ்நிலையில் அனைவரும் இணைந்து செயல்படலாம் என்று கூறுவதாக தற்போதைய பிரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











