Baakiyalakshmi serial: பாக்யா ஹோட்டல் திறப்பு விழா.. சதித்திட்டம் தீட்டிய கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இடம்பெற்று மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் தன்னுடைய ஹோட்டல் திறப்பு விழாவிற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் பாக்யா. ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ஜெனி தன்னுடைய குழந்தையுடன் வருகை தந்துள்ள நிலையில் அமைச்சரின் வருகைக்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர். ஆனால் தன்னை அவமானப்படுத்திய பாக்யாவின் கடை திறப்பு விழாவை குலைக்க சதித்திட்டம் தீட்டுகிறார் கோபி.

அமைச்சரின் உதவியாளர் மூலமாக அமைச்சரை இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வரவிடாமல் தடுக்கிறார். இவ்வாறு இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து கடைசி திறப்பு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்து அடுத்தடுத்த நாட்களில் பார்க்கலாம். முன்னதாக தன்னுடைய சொந்த தொழிலை சரியாக கவனிக்காமல் கோட்டை விடுகிறார் கோபி. இதனால் தன்னுடைய ரெஸ்டாரெண்ட்டில் மேனேஜர் வேலையை ஏற்றுக் கொள்வாரா என்று பாக்யா. கோபியிடம் கேட்கிறார். இதை அவமானமாக எடுத்துக் கொள்ளும் கோபி, பாக்கியாவின் இந்த ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவை குலைக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial this week promo 03 03 2024

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இடம்பெற்று மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியாவின் படிப்படியான முன்னேற்றம் மற்றும் கோபியின் தோல்வி இவற்றை ரசிகர்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர். குடும்ப தலைவியாக கணவனை அவனது சொந்தங்களை மகன்களை மட்டுமே சார்ந்து இருந்த பாக்யா ஒரு கட்டத்தில் மசாலா பிசினஸை ஆரம்பித்து அடுத்தடுத்து கேன்டீன் கான்ட்ராக்ட். சமையல் கான்ட்ராக்ட், ஆங்கில வகுப்பு, கல்லூரி படிப்பு என தன்னுடைய எல்லைகளை விரிவு படுத்துகிறார்.

பாக்கியா ரெஸ்டாரெண்ட் திறப்பு: தொடர்ந்து பெரிய அளவிலான சமையல் கான்டிராக்ட்களை மேற்கொள்ளும் பாக்யா, அதன் மூலம் தன்னம்பிக்கை பெற்று தற்போது ரெஸ்டாரன்டையும் துவங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த ரெஸ்டாரன்ட் திறப்பிற்கு அமைச்சரும் வருவதாக உறுதியளித்த நிலையில் அவரது பெயரை வைத்து அழைப்பிதழ் அடித்து அனைவருக்கும் கொடுக்கிறார். இதனிடையே கோபியின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அவரது பிசினஸ் தோல்வியில் முடிகிறது. அவர் தன்னுடைய நிறுவனத்தை இழுத்து மூடுகிறார். இந்த விஷயம் தெரிந்து குடும்பத்தினர் அனைவரும் மனவருத்தம் கொள்கின்றனர்.

Vijay TV s Baakiyalakshmi serial this week promo 03 03 2024

கோபியில் தோல்வி: இதையடுத்து தன்னுடைய நகைகளை தன்னுடைய மாமியார் மூலமாக கொடுத்து கோபிக்கு உதவ நினைக்கிறார் பாக்யா. ஆனால் ராதிகா அதை ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய கணவனுக்கு தான் உதவுவேன் என்று கூறுகிறார். இந்நிலையில் கோபி தொடர்ந்து மன வருத்தத்துடன் உள்ள நிலையில் அவர் தன்னுடைய ரெஸ்டாரண்டிற்கு மேனேஜர் வேலையில் இணைவாரா என்று பாக்யா கேட்கிறார். உதவும் நோக்கத்துடன் அவர் கேட்கும் நிலையில் இதை தனக்கான அவமானமாக நினைக்கும் கோபி அவரை திட்டி தீர்க்கிறார். தொடர்ந்து அங்கு வரும் ராதிகாவும் பாக்யாவின் இந்த வார்த்தைகளை தவறு என்று கூறி ஆத்திரத்துடன் பேசுகிறார்.

கோபியின் பழிவாங்கும் சூழ்ச்சி: இந்நிலையில் தன்னை மேனேஜர் வேலைக்கு வர சொல்லும் பாக்யாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க தயாராகிறார் கோபி. ஒருபுறம் தன்னுடைய ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அமைச்சரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த பாக்கியா அமைச்சரின் வருகைக்காக காத்திருப்பதாக இந்த வார பிரமோவின் காணப்படுகிறது ஆனால் அமைச்சரின் உதவியாளர் மூலமாக அவரை இந்த நிகழ்ச்சிக்கு வரவிடாமல் சதி செய்கிறார் கோபி. முன்னதாக செழியனிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி தன்னுடைய குழந்தையுடன் இந்த ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வருவதாகவும் இந்த வார பிரமோவின் காணப்பட்டுள்ளது.

கேள்விக்குறியான ஹோட்டல் திறப்பு: கோபியின் சூழ்ச்சியால் தற்போது ஹோட்டல் திறப்பு விழா கேள்விக்குறியாகியுள்ளது. இதிலிருந்து பாக்யா எப்படி மீண்டு வெளியில் வருவார் என்பது குறித்து வரும் வாரங்களில் காணலாம். தன்னுடைய பிசினசை சரியாக கவனிக்காமல், பாக்கியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலேயே தொடர்ந்து நடந்து வந்தார் கோபி. தன்னுடைய பிசினசையே மூடும் அளவிற்கு வந்தபோதிலும் தற்போதும் அதையே தொடர்கிறார். தொடர்ந்து அவர் எந்த இழிவு நிலைக்கு செல்வார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X