Baakiyalakshmi serial: தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.. அலப்பறையை கூட்டும் கோபி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த பிரமோவில் ராதிகாவிடம் சண்டையிடும் கோபி, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி பாக்கியாவின் வீட்டிற்கு சென்று வெளியில் இருந்தபடி அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை ஏக்கத்துடன் பார்க்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் பெங்காலி தொடரில் இருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான எந்தவித சாயலும் தற்போது தமிழ் சீரியலில் காணப்படவில்லை. தமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சீரியலை சிறப்பாக கொடுத்து வருகிறார் இயக்குனர். அந்த வகையில் தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து சேனலின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக காணப்படுகிறது பாக்கியலட்சுமி தொடர்.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. வழக்கம் போல இந்த வாரமும் கோபியின் அலப்பறைகளையே அதிகமாக காண முடிகிறது. இந்த வார பிரமோவில் ராதிகாவிடம் வழக்கம் போல சண்டையிடும் கோபி, தன்னுடைய வாழ்க்கையில் ராதிகா வந்த பிறகு தான் தன்னுடைய நிம்மதி பறிபோய் விட்டதாக கூறுகிறார். இதைக் கேட்டு ஆத்திரமடையும் ராதிகா, அப்படி என்றால் தன்னை டைவர்ஸ் செய்து விட்டு அவருடைய முன்னாள் குடும்பத்தினருடனேயே சென்று சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே என்று கேட்கிறார்.

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு: இதையடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகும் கோபி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வெளியிலிருந்து பார்க்கிறார். அங்கு பாக்கியா, ஈஸ்வரி, செழியன், ஜெனி மற்றும் நிலா என அனைவரும் சந்தோஷமாக இருப்பதை ஏக்கமாக பார்க்கிறார். இதையடுத்து வீட்டிற்கு குடித்து விட்டு வரும் கோபி, தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்ற பழைய பாடலை பாடியபடி தொடர்ந்து குடிக்கிறார். அவரது இந்த பாடல் சத்தத்தை கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் ராதிகா வெளியில் வந்து பார்ப்பதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. தன்னுடைய அம்மா, அப்பா, மனைவி பாக்கியா, மகன்கள் செழியன், எழில் மற்றும் மகள் இனியா என கட்டுக்கோப்பான குடும்பத்தை மெயின்டெயின் செய்து வந்த கோபியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Television Baakiyalakshmi serial Vijay TV

கோபி வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்: அவரது வாழ்க்கையில் முன்னாள் காதலியான ராதிகாவை பார்க்கிறார். இதையடுத்து தான் பாக்கியாவுடன் விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறி ராதிகாவை மறுமணம் செய்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். தொடர்ந்து பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து செய்ய நினைக்கும் கோபிக்கு தானே முன்வந்து விவாகரத்தை கொடுக்கிறார் பாக்கியா. தொடர்ந்து அவரை வீட்டை விட்டும் வெளியேற்றுகிறார். இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் தான் மிகப்பெரிய மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்த கோபிக்கு உள்ளதும் போனது என்ற கதையாக அடுத்தடுத்த பிரச்சினைகள் மட்டுமே வாழ்க்கையாக மாறியுள்ளது.

Television Baakiyalakshmi serial Vijay TV

கோபியை வெறுக்கும் குடும்பத்தினர்: நிம்மதி, சந்தோஷம் என எதுவுமே இல்லாமல் தான் வெற்றிகரமாக செய்து வந்த பிசினசும் நஷ்டப்பட்டு தற்போது மீண்டும் தனக்கு சிறிதும் தொடர்பில்லாத கிளவுட் கிட்சன் தொழிலை துவங்கியுள்ளார் கோபி. ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக அந்த தொழில் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது. சென்னையின் அடையாளம் என்ற ஷோவில் பாக்கியாவுடன் மோதிய கோபி, அதில் சூழ்நிலை காரணமாக வெற்றி பெறுவதாக காணப்பட்டது. இந்நிலையில் கோபியின் குடும்பத்தினர் அனைவரும் அவரை வெறுக்கும் படியான சூழ்நிலைகளில் அவர் அடுத்தடுத்து தள்ளப்படுகிறார். ராதிகாவும் அவரை வெறுக்கும் சூழலில் தொடர்ந்து குடித்து வருகிறார் கோபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X