Baakiyalakshmi serial: மல்லுக்கட்டிய ஈஸ்வரி.. நச்சென்று பதிலடி கொடுத்த ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஒட்டி கதைக்களம் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது, செழியன் மற்றும் எழில் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பாக்யா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதில் எழிலின் வாழ்க்கையில் கணேசால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அவர் தற்போது சிறையில் உள்ளார். இன்னிலையில் செழியன் மற்றும் ஜெனி விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் ஜெனி தற்போது தன்னுடைய குழந்தையுடன் தனது அப்பா வீட்டில் இருக்கிறார்.

அவரது அப்பாவின் வற்புறுத்தலால் விவாகரத்திற்கும் அப்ளை செய்திருக்கிறார் ஜெனி. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே மசாலா பிசினஸை துவங்கி வெற்றி நடை போட்டு வந்த பாக்கியா அடுத்தடுத்து கேன்டீன் கான்ட்ராக்ட், சமையல் காண்ட்ராக்ட் என முன்னேற்றம் கண்ட நிலையில் தற்போது அவர் ரெஸ்டாரெண்ட் ஓப்பனிங் செய்து முடித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்ட அமைச்சர், கோபி மற்றும் அமைச்சரின் பிஏவால் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே கடைசி நேரத்தில் இதுகுறித்து அறிந்த அமைச்சர் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

Vijay TV s Baakiyalakshmi serial this week promo 10 03 2024

பாக்கியலட்சுமி சீரியல்: பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து பல மாதங்களாக பல வருடங்களாக இடம்பெற்று வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய கணவனால் நிராகரிக்கப்பட்டு விவாகரத்து பெற்ற பாக்கியா, தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தினரையும் அடைகாத்து தன்னுடைய பிசினஸ் வளர்ச்சியையும் மேம்படுத்தி தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கும் வகையில் தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார். இதனிடையே பாக்கியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத கோபி தொடர்ந்து வார்த்தைகளாலும் செயல்களாலும் அவருக்கு இடையூறு கொடுத்து வருகிறார்.

ரெஸ்டாரெண்ட் திறப்பு: பாக்கியாவை விட்டுவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்த போதிலும் அவரால் பாக்கியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தன்னுடைய பிசினசையும் சரியாக பார்த்துக் கொள்ளாமல் அதையும் கோட்டை விட்டு தற்போது பிசினஸ் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து மறைத்த அவர் ஒரு கட்டத்தில் ராதிகாவிடம் கையும் களவுமாக பிடிப்படுகிறார். கோபியின் பிசினஸ் மூடப்பட்டதை கேள்விப்படும் குடும்பத்தினர் அனைவரும் வேதனைப்படுகின்றனர். பாக்யாவும் தன்னுடைய ரெஸ்டாரெண்டில் மேனேஜர் வேலையில் சேர்ந்து கொள்கிறாரா என்று கோபியிடம் கேட்கிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial this week promo 10 03 2024

சதித்திட்டத்தில் கோபி: இதனை அவமானமாக கோபி மட்டும் இல்லாமல் ராதிகாவும் நினைத்து பாக்யாவிடம் சண்டையிடுகின்றனர். தொடர்ந்து பாக்யாவின் ரெஸ்டாரெண்ட் திறப்பில் கோபி இடையூறு செய்கிறார். அமைச்சரின் பிஏ வை வைத்து திறப்பு விழாவிற்கு அமைச்சர் வராமல் பணம் கொடுத்து சரி செய்கிறார். ஆனால் இந்த விவகாரம் கடைசி நேரத்தில் அமைச்சருக்கு தெரிய வந்த நிலையில் அவர் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவில் பங்கேற்று குடும்பத்தினர் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறார். இதனால் பாக்யாவின் ரெஸ்டாரெண்ட் மிக அதிக அளவிலான கவனத்தை பெற்றுள்ளது.

ராதிகாவிடம் அடிஉதை படும் கோபி: இந்த ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு தான் செல்லவில்லை என்று ராதிகாவிடம் கூறிய கோபி ஒரு கட்டத்தில் மீண்டும் பிடிபடுகிறார், ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவின் புகைப்படங்களை பார்த்த ராதிகா, அதில் கோபி இருப்பதை பார்த்து அவரிடம் சண்டையிட்டு அடிக்கிறார், இதை பார்க்கும் இனியா தன்னுடைய பாட்டி உள்ளிட்டவர்களிடம் கூறுவதாகவும் கோபியிடம் ஏன் சண்டை பிடிக்கிறாய் என்று ஈஸ்வரி கோபத்துடன் ராதிகாவிடம் கேட்பதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் ராதிகா ஈஸ்வரி தன்னுடைய மாமனாரிடம் சண்டையிடுவதை காட்டிலும் தான் குறைவாகவே கோபியிடம் சண்டை இடுவதாக கூறுகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஈஸ்வரி முழிப்பதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X