Baakiyalakshmi: அமிர்தாவை சந்தித்து அதிர்ச்சி கொடுக்கும் கணேஷ்.. எழில் -அமிர்தா வாழ்க்கை என்னவாகும்?

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த பிரமோக்கள் மற்றும் அதையொட்டிய எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த சீரியலில் கேள்விக்குறியான தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க பாக்கியா போராடி வருகிறார். ஆனாலும் ஜெனி சார்பில் செழியனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையொட்டி ஜெனி வீட்டிற்கு பாக்கியா மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்கப்போக, அதனால் பிரச்சினை ஏற்படுகிறது. ஜெனிக்கு தெரியாமல் இந்த விவாகரத்து நோட்டீசை அவரது அப்பா செழியனுக்கு அனுப்பியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் வந்துள்ள விஷயத்தை குடும்பத்தினரிடம் கூற முற்பட்டு தோல்வியடைகிறார் பாக்கியா. இந்த நேரத்தில்தான் செழியனுக்கு அனுப்பப்பட்ட விவாகரத்து நோட்டீஸ் வந்து, குடும்பத்தினர் அனைவரும் குழப்பமடைகின்றனர். இதனிடையே பாக்கியாவிற்கு கொடுத்த 30 நாட்கள் கெடுவை அவ்வப்போது அவரிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்துவந்த கணேஷ், தற்போது அடுத்ததாக என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial this week promo 24-12-2023

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் தற்போது இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகின்றன. தன்னுடைய வாழ்க்கை பறிபோன சூழலில், தன்னுடைய கேரியரில் அடுத்தடுத்த மூவ்களை எடுத்து வருகிறார் பாக்கியா. கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என அவருக்கு நம்பிக்கை கொடுத்துவந்த பிசினஸ் அவரை விட்டு கைநழுவிய நிலையில் தற்போது பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட்: நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை எடுத்து நடத்தி அதை சக்சஸ் ஆக்கியுள்ளார் பாக்கியா. இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளையும் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் பழனிச்சாமி உதவியுடன் முறியடித்து வெற்றி பெறுகிறார். அமைச்சரே வந்து பாக்கியாவிற்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கும்வகையில் கேன்டீன் கான்டிராக்ட்டை சச்சஸாக நிறைவு செய்கிறார். தொடர்ந்து கோபியுடன் இணைந்து பாக்கியாவை திட்டிக் கொண்டிருந்த ஈஸ்வரியும் இதனால் மகிழ்ச்சியடைந்து ஆனந்த கண்ணீர் வடிப்பதாகவும் பாக்கியாவை பாராட்டுவதாகவும் காட்சிகள் அமைந்தன.

செழியனுக்கு விவாகரத்து நோட்டீஸ்: இதனிடையே அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ், உயிருடன் வந்ததை குடும்பத்தினரிடையே கூற முற்படுகிறார் பாக்கியா. ஆனால் அந்த சூழ்நிலையில் செழியனுக்கு ஜெனி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் வந்ததால் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் கணேஷ் விவகாரத்தை கூற முடியாமல் அவர் அமைதியாகிறார். தொடர்ந்து செழியன் விவகாரத்தில் பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் சென்று ஜெனி வீட்டில் பேசப் போகின்றனர். ஆனால் அந்த முயற்சி சொதப்பி, மேலும் சிக்கலாகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறியவுடன், தன்னை கேட்காமல் தன்னுடைய தந்தை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது குறித்து ஜெனி கேள்வி கேட்கிறார்.

அமிர்தா -எழிலுக்கு அதிர்ச்சி கொடுத்த கணேஷ்: இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கோயிலுக்கு அமிர்தா, நிலா மற்றும் எழில் வருகின்றனர். தனியாக வேண்டுதலை நிறைவேற்ற அமிர்தா சென்ற நிலையில், அவரை தனியாக சென்று பார்க்கிறார் கணேஷ். இதனால் அதிகமான பதற்றம், பயமடையும் அமிர்தா, ஓடிவந்து எழிலிடம் கணேஷ் குறித்து கூற முற்படுகிறார். ஆனால் அதை கூற முடியாமல் மயக்கமடைவதாக பிரமோவில் காணப்படுகிறது. அவரை தாங்கிக் பிடிக்கும் எழில், அவரை எழுப்ப முயல, அவரை தடுக்கிறார் கணேஷ். இதனால் குழப்பத்துடன் எழில் பார்ப்பதாக தற்போதைய பிரமோவில் காணப்படுகிறது. தற்போது கணேஷ் குறித்து எழில் மற்றும் அமிர்தாவிற்கு தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் அடுத்ததாக என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்தள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X