Baakiyalakshmi: நல்ல நண்பர்களாகவே இருந்துட்டு போறோம்.. அம்மாவிடம் உறுதியாக சொன்ன பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

ஆனாலும் கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரின் எபிசோட்களில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது பாக்கியலட்சுமி.

Vijay TVs Baakiyalakshmi serial this week promo impresses fans a lot

இதனிடையே தொடரின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. பாக்கியாவை திருமணம் செய்துக் கொள்வாரா என பழனிச்சாமியிடம் அவரது அம்மா கேட்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த இந்த வார பாக்கியலட்சுமி ப்ரமோ: விஜய் டிவியின் முன்னணி தொடராக கடந்த சில மாதங்களாக முதலிடத்தில் இருந்தது பாக்கியலட்சுமி. கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து பெறும் ஒரு பெண், அவரது பெற்றோருடன், தன்னுடைய குழந்தைகளுக்கும் சிறப்பான வாழ்க்கையை கொடுப்பது இந்தத் தொடரின் முக்கியமான கதைக்களமாக ஒளிபரப்பாகி வந்தது. இந்தத் தொடர் ஸ்ரீமோயி என்ற பெங்காலித் தொடரின் ரீமேக்காக இருந்தபோதிலும் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் இதன் எபிசோட்கள் காணப்படுகின்றன.

சீரியலில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களை கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் வெளியாகிவருகின்றன. இவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்கும் கேரக்டர்களும் சிறப்பு கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் குறைவான கேரக்டர்களுடன் இந்தத் தொடர் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. குறிப்பாக ஆன்டி ஹீரோவாக நடித்திருந்தாலும் தொடரில் கோபி கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

கோபியின் காட்சிகள் அதிகமாக இருக்கும் எபிசோட்கள் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெறுவதை பார்க்க முடிகிறது. கடந்த சில தினங்களாக, கோபி கேரக்டருக்கு சிறப்பு கவனம் இல்லாமல், பாக்கியா கல்லூரியில் சேர்ந்த கதைக்களத்தை கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் வெளியாகின. இதனால் சீரியலின் டிஆர்பி இறங்கியுள்ளது. தொடர்ந்து Urban கேட்டகரியில் முன்னிலை பெற்றுவந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது தன்னுடைய முதலிடத்தை சேனலின் சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது கோபியின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவர் தன்னுடைய முன்னாள் மனைவி பாக்கியா கல்லூரியில் சேர்ந்தது குறித்து ஈஸ்வரியிடம் கோபமாக பேசுகிறார். ஆனால் அவரோ பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்த நிலையில், மொக்கை வாங்குகிறார் கோபி. இதனால் அவர் ஆத்திரமடைகிறார். இடியட் பாக்கியா எப்படி தன்னுடைய அம்மாவையும் வளைத்து விட்டாளே என்று குழம்புகிறார்.

இதனிடையே, கோபி சந்தேகத்திற்குள்ளான பழனிச்சாமி மற்றும் பாக்கியா உறவு குறித்து, தற்போது பழனிச்சாமியின் அம்மாவும் அவரிடம் கேட்கிறார். தன்னுடைய காலத்திற்கு பிறகு பழனிச்சாமியின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று கூறும் அவர், பாக்கியா வீட்டில் அவர்களது திருமணம் குறித்து பேசட்டுமா என்று பழனியிடம் கேட்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் பழனிச்சாமி, அவர்களிடம் அதுபோல எல்லாம் கேட்க வேண்டாம் என்றும் தானும் பாக்கியாவும் நல்ல நண்பர்கள், தொடர்ந்து அப்படியே இருந்துவிட்டுப் போகிறோம் என்றும் கூறுவதாக இந்த வார ப்ரமோ அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X