Baakiyalakshmi: முதல் நாள் கல்லூரி.. அலப்பறையை கிளப்பிய பாக்கியா.. கடுப்பான இனியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சீரியலில் தற்போது காமெடி கலாட்டாக்கள் அரங்கேறி வருகின்றன. இனியா மற்றும் பாக்கியா இருவரும் ஒரே நாளில் கல்லூரிக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே பாக்கியலட்சுமி தொடரின் இந்தவார ப்ரமோ வெளியாகியுள்ளது.
கல்லூரிக்கு போன இனியா -பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் தனி ஒருவராக தன்னுடைய குடும்பத்தினரின் அடுத்தடுத்த தேவைகளை செய்து வருகிறார் பாக்கியா. அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்த போதிலும் தொடர்ந்து பாக்கியாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவருக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார் கோபி.
பாண்டிச்சேரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தை எடுத்து 5000 பேருக்கு மேல் சமைத்து தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார் பாக்கியா. இந்த திருமணத்திற்கு ராதிகாவுடன் வந்திருந்த கோபி, தொடர்ந்து வார்த்தைகளால் மட்டுமில்லாமல் செயல்களாலும் பாக்கியாவிற்கு இடைஞ்சல் கொடுத்துவந்தார். இதனால் பாதிக்கப்பட்டாலும் அந்த திருமணத்தில் அனைவரும் பாராட்டும்படி சமையல் செய்து அசத்தினார் பாக்கியா.
காபி முதல் இனிப்புகள், மற்ற டிஷ்கள் என பாக்கியாவின் கைப்பக்குவத்தை திருமணத்திற்கு வந்த அனைவரும் பாராட்டினர். ஆனால் இந்த விஷயத்தில் கோபி மட்டுமே கடுப்பானார். மாறாக பழனிச்சாமி, பாக்கியாவிற்கு கைக்கொடுத்து கூடவே இருந்து உதவினார். இந்த செயல்களும் கோபிக்கு கடுப்பை ஏற்படுத்தின. இதையடுத்து கோபி பெயரில் இருந்த வீட்டை மீட்கும்வகையில் 18 லட்சம் ரூபாயை கொடுத்து, ரிஜிஸ்டரும் செய்தார் பாக்கியா.
இதையடுத்து பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் பழகும் விதத்தை தவறாக புரிந்துக்கொண்டு, அவர்கள் இருவரிடமும் சண்டை இடும் கோபி, பழனிச்சாமி வீட்டிற்கே சென்று, அவரது அம்மாவிடமும் இதுகுறித்து பேசுகிறார். இதனால் அவர் கடுப்பாவார் என்று கோபி எதிர்பார்க்கிறார். ஆனால் பழனிச்சாமிக்கு எந்தப் பெண்ணை பிடித்திருந்தாலும் உடனடியாக திருமண ஏற்பாடுகளை தான் செய்வேன் என்று அவர் கூறுகிறார். ஆனால், தனக்கும் பாக்கியாவிற்கும் இடையில் நல்ல நட்புதான் உள்ளது என்று தன்னுடைய அம்மாவிற்கு பழனிச்சாமி தெளிவுப்படுத்துகிறார்.
இதனிடையே, இனியா மற்றும் பாக்கியா இருவரும் கல்லூரிக்கு முதல் நாள் செல்வது குறித்த இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. கல்லூரிக்கு வரும் பாக்கியா, தன்னுடைய கல்லூரி கனவு நிறைவேறியுள்ளதாக தன்னுடைய மகன் எழிலிடம் சிலிர்ப்பை வெளிப்படுத்துகிறார். மேலும் இனியாவின் தோழிகளிடமும் தான் இனியாவின் அம்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, இனியா அங்கிருந்து நழுவுவதாக தற்போதைய ப்ரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











