Baakiyalakshmi: பாக்கியா புருஷன்.. ராதிகா ஹஸ்பண்ட்.. எப்புட்றா!

சென்னை: விஜய் டிவியின் மாஸ் சீரியலாக முதன்மை இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.

சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருப்பதோடு, கடந்த இரு வாரங்களாக Urban categoryயிலும் சன் டிவியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

வீட்டை மீட்க தன்னுடைய கணவனிடம் போட்ட சவாலுக்காக தற்போது பாக்கியா, தன்னுடைய சக்திக்கு மீறிய பெரிய கல்யாண ஆர்டரை கையில் எடுத்துள்ளார்.

 Vijay TVs Baakiyalakshmi serial this week promo released

களைகட்டும் புதுச்சேரி கல்யாணம்: விஜய் டிவி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற சேனல்களின் ரசிகர்களையும் பாக்கியலட்சுமி தொடர் ஈர்த்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் இந்தத் தொடர் தற்போது Urban Categoryயில் சன் டிவி சீரியல்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடித்து விஜய் டிவிக்கு பெருமை சேர்த்துள்ளது. சேனலின் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது பாக்கியலட்சுமி தொடர். குறைவான கேரக்டர்களை வைத்து நிறைவான எபிசோட்களை இந்தத் தொடர் கொடுத்து வருவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களது உறவினர்கள் என குறைவான கேரக்டர்களே காணப்படுகின்றனர். சமீபத்தில் இந்தத் தொடரில் பழனிச்சாமி என்ற கேரக்டர் சேர்க்கப்பட்டு, அந்தக் கேரக்டர் பாக்கியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக காட்டப்பட்டு வருகிறது. கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவிற்கும் கோபியின் அம்மா ஈஸ்வரிக்கும் ஏற்படும் சண்டையொன்றில் ராதிகா, ஈஸ்வரியை மரியாதைக்குறைவாக பேசுகிறார்.

ராதிகாவிற்கு கோபியும் சப்போர்ட் செய்ய, தற்போது கோபியின் பெயரில் இருக்கும் வீட்டிற்கு தர வேண்டிய மீதமுள்ள 18 லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் திருப்பி தருவதாகவும், அப்படி தந்துவிட்டால், அவர் தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் சவால் விடுகிறார் பாக்கியா. இந்த சவாலை ஏற்கிறார் கோபி. அவளால் எப்படி ஒரு மாதத்தில் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியும் என்று அலட்சியம் காட்டுகிறார்.

இந்நிலையில், தான் விடுத்த சவாலுக்காக தன்னுடைய சக்திக்கு மீறிய கல்யாண ஆர்டரை கையில் எடுக்கிறார் பாக்கியா. பழனிச்சாமி மூலமாக இந்த ஆர்டர் அவருக்கு கிடைக்கிறது. இதற்காக புதுச்சேரிக்கு தன்னுடைய டீமுடன் செல்கிறார் பாக்கியா. அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனத்துடன் பார்த்து பார்த்து செய்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெறுகிறார். இதனிடையே அந்த திருமணத்திற்கு தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வருகிறார் கோபி.

அங்கு பாக்கியாவையும் பழனிச்சாமியை ஒருசேர பார்க்கும் அவருக்கு சந்தேகத்தீ பற்றிக் கொள்கிறது. இதையடுத்து பழனிச்சாமியை நேரில் பார்த்து தன்னுடைய மனைவி செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர் ஏன் வருகிறார் என்று சண்டை பிடிக்கிறார். இதையடுத்து, அவரது நண்பரும் மணப்பெண்ணின் தந்தையுமாக நடித்துவரும் தாடி பாலாஜி அதிர்ச்சியடைகிறார். கோபி ஏன் பழனிச்சாமியிடம் சண்டையிடுகிறார் என்று கேட்க, அங்கே இருக்கும் செல்வி, கோபிதான் பாக்கியாவின் புருஷன் என்று கூறுகிறார்.

இதனிடையே, மற்றொரு சமயத்தில் ராதிகாவின் ஹஸ்பண்ட் என்றும் கோபி அறிமுகப்படுத்தப்படுகிறார். இதனால் தாடி பாலாஜி மிகவும் குழப்பத்திற்கு உள்ளாவதாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது. இந்தத் தொடரில் மூன்று நாட்கள் நடைபெறும் திருமணத்தில் பாக்கியா சமைப்பதற்கான பெரிய டாஸ்கை கையில் எடுத்துள்ளார். இந்தத் திருமணத்திற்கு ராதிகா மற்றும் கோபி விருந்தினர்களாக வந்துள்ள நிலையில், பாக்கியாவின் சமையல் டாஸ்கில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என்பதே ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X