Baakiyalakshmi: கோபி வீட்டுக்கு வந்தா நான் வெளியே போயிடுவேன்.. ஈஸ்வரிக்கு செக் வைக்கும் பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்கள் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்து பல வாரங்களாக 2வது இடத்தில் உள்ளது பாக்கியலட்சுமி. முன்னதாக பல மாதங்களாக முதலிடத்தில் நிலை கொண்டிருந்தது.

இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை இணைத்து சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறார் தொடரின் இயக்குநர்.

Vijay TVs Baakiyalakshmi serial this week promo released

பாக்கியலட்சுமி தொடரின் இந்த வார ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர், ஒரேமாதிரியான காட்சிகள் போன்றவற்றால், தற்போது இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. ஆனாலும் சுதாரித்துக் கொண்டுள்ள இயக்குநர், அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார். தற்போது தொடர்ந்து பல வாரங்களாக இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி தொடர் நிலைபெற்றுள்ளது.

ராதிகாவால் தன்னுடைய கேன்டீன் கான்டிராக்டை இழந்த பாக்கியலட்சுமி, லோன், ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை நகைகளை வைத்து சமாளிக்கிறார். பழனிச்சாமி உதவ முன்வந்த நிலையில், அதை நிராகரிக்கிறார். தன்னுடைய பிரச்சினைகளை தானே சமாளிக்க முயல்வதாக கூறுகிறார். கேரியரில் அடிவாங்கியுள்ள பாக்கியா, தொடர்ந்து குடும்பத்திலும் அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

மூத்த மகன் செழியன் -மாலினி குறித்து பாக்கியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, ஜெனியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பாமல் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார். இரவு நேரங்களில் அவர் வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்கிறார். இதேபோல இரண்டாவது மகன் எழில் வாழ்க்கையில் பெரும் புயல் வீசப்போவதை அவர் அறிகிறார். எழில் மனைவியின் முன்னாள் கணவர், உயிருடன் திரும்ப வந்துள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial this week promo released

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார ப்ரமோவில் அடுத்த பிரச்சினை பாக்கியாவிற்கு லைன் கட்டி வருகிறது. திடீரென கோபிக்கு ஹார்ட் பிரச்சினை ஏற்படுகிறது. இதை கேள்விப்படும் ஈஸ்வரி, அவரது வீட்டிற்கு சென்று அவரை நலம் விசாரிக்கிறார். மேலும் ராதிகாவுடன் அவர் திருமணம் செய்துக கொண்டதால்தான் அவருக்கு அடுத்தடுத்து இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறி ராதிகாவை நோகடிக்கிறார். தொடர்ந்து தங்களது வீட்டிற்கு வந்துவிடும்படி கூறுகிறார்.

இதுகுறித்து குடும்பத்தினரிடையே பேசுகிறார் ஈஸ்வரி. கோபியை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக திட்டவட்டமாக கூறுகிறார். இதற்கு எழில முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார். என்ன நடந்தாலும் அவரை வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது என்று அவர் கூறுகிறார். ஆனால் தான் கண்டிப்பாக கோபியை அழைத்து வருவேன் என்று ஈஸ்வரி கூற, கோபி வீட்டிற்குள் காலெடுத்து வைக்கும் அடுத்த நிமிஷம், தான் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என்று பாக்கியா தீர்மானமாக கூறுவதாக இந்த வார ப்ரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X