Baakiyalakshmi: கத்தி முனையில் அமிர்தாவையும் குழந்தையையும் கடத்தும் கணேஷ்.. திகைப்பில் பாக்யா!

சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவி சீரியல்கள் அதிகமான டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாவது இடங்களை பிடித்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் நீண்ட காலங்களாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக முதல் இரண்டு இடங்களில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உடன் இணைந்து சங்கமம் எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பெற்றிருந்தது. மீண்டும் இயல்புக்கு திரும்பி உள்ள பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை தன் வசப்படுத்தும் முயற்சியில் அவரது முன்னாள் கணவர் கணேஷ் ஈடுபட்டுள்ளதாக காட்சிகள் அமைந்து வருகின்றன.

தன்னுடைய அப்பா சாகக்கிடப்பதாக தன்னுடைய அம்மா மூலம் பாக்கியாவிற்கு அடுத்தடுத்து போன் செய்ய வைக்கிறார் கணேஷ். இதை உண்மை என்று நம்பி தன்னுடைய மருமகன் அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை கணேஷ் வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்கியா. அங்கு எதிர்பாராத விதமாக அவர்களை அட்டாக் செய்யும் கணேஷ் அமிர்தாவை கத்தி முனையில் வைத்து அவரையும் நிலாவையும் கடத்துகிறார். இதனால் பாக்கியா மட்டுமில்லாமல் கணேஷின் பெற்றோரும் செய்வதறியாமல் திகைக்கின்றனர். முன்னதாக அவர்களை கணேஷ் வீட்டிற்கு அழைத்து செல்ல ஈஸ்வரி மற்றும் கோபி மறுத்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial this week promo released

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க கொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோடுகளை கொடுத்து வந்த பாக்கியலட்சுமி சீரியல், தற்போது மீண்டும் இயல்பிற்கு திரும்பியுள்ளது. அந்த வகையில் தற்போது அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை தன் வசப்படுத்தும் முயற்சியில் அவரது முன்னாள் கணவர் கணேஷ் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக அவர் அமிர்தாவையும் குழந்தையும் தன்னுடன் அனுப்பும்படி மல்லுக்கு நின்றார்.

கணேஷின் சூழ்ச்சி: அப்போது கோபி, செழியன் உள்ளிட்டவர்கள் அவரை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். சிறிது காலங்கள் அவர் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன்னுடைய அம்மாவை வைத்து பாக்யாவிற்கு ஃபோன் மூலம் தன்னுடைய அப்பா சாக கிடப்பதாக கூற வைக்கிறார். இதனால் இதையடுத்து அவர் சாகக்கிடக்கும் நிலையில் தன்னுடைய மருமகள் அமிர்தா மற்றும் பேத்தி நிலாவை பார்க்க ஆசைப்படுவதாகவும் அம்மாவை வைத்து கூற வைக்கிறார். அவரது அடுத்தடுத்த ஃபோன் கால்களால் பரிதவிக்கும் பாக்யா தன்னுடைய குடும்பத்தினரை சமாதானப்படுத்தி அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை அழைத்துக் கொண்டு கணேஷ் வீட்டிற்கு செல்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial this week promo released

கணேஷ் ஆத்திரம்: அங்கு அவர்கள் வரும்போது கணேஷ் இருக்க மாட்டார் என்று முன்னதாக அவரது அம்மா உறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் நம்பிக்கையுடன் பாக்யா சாகக்கிடக்கும் கணேஷின் அப்பாவை பார்ப்பதற்காக அமிர்தாவையும் நிலாவையும் அழைத்து செல்கிறார். ஆனால் அங்கு அவர்களை வழிமறிக்கும் கணேஷ், அமிர்தா மற்றும் நிலாவை அங்கேயே விட்டுவிட்டு செல்லுமாறு ஆத்திரத்துடன் பாக்கியாவிடம் கூறுகிறார். ஆனால் இதை சற்றும் எதிர்பார்க்காத பாக்கியா, அவர்கள் இருவரையும் விட முடியாது என்று கோபத்துடன் கூறுவதுடன் அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்லவும் முற்படுகிறார்.

அமிர்தா -நிலாவை கடத்திய கணேஷ்: ஆனால் அமிர்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் கணேஷ், அமிர்தா மற்றும் குழந்தையை கத்தி முனையில் காரில் கடத்தி செல்கிறார். அவர்களை பின் தொடர்ந்து ஓடிவரும் வாக்கியா செய்வதறியாமல் திகைப்பதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. முன்னதாக அமிர்தா மற்றும் குழந்தையை கணேஷ் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று ஈஸ்வரி, கோபி உள்ளிட்டவர்கள் கூறிய நிலையில் அவர்களை சமாதானப்படுத்தி பாக்கியா இருவரையும் அழைத்துக் கொண்டு கணேஷ் வீடடிற்கு வந்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவரும் கடத்தப்பட்டுள்ளது பாக்கியாவை மிகப்பெரிய சிக்கலில் சிக்க வைத்துள்ளது. இதனால் ஈஸ்வரி மற்றும் கோபி இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு அவர் சிக்கித்தவிக்க நேரிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X