Baakiyalakshmi serial: வீட்டை விட்டு வெளியே போங்க.. கோபியிடம் காட்டமாக பேசிய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் தற்போது கனமழை காரணமாக பாக்கியா எடுத்த பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் ஆறுதல் கூறவந்த பழனிச்சாமியையும் பாக்கியாவையும் இணைத்து கோபி பேசியதால் பாக்கியா ஆத்திரமடைகிறார்.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி இந்த வார டிஆர்பியிலும் சிறப்பான புள்ளிகளை பெற்றுள்ளது. முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரை காட்டிலும் இரு புள்ளிகளே குறைந்துள்ளது. இதனால் அடுத்தடுத்த வாரங்களில் இந்தத் தொடர் முதலிடத்தை பிடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் மீண்டும் பழையபடி பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
மீண்டும் பூக்கும் நட்பு: பாக்கியா வீட்டில் மீண்டும் கோபி மற்றும் ராதிகா வந்து தங்கியுள்ளனர். இதனால் கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரியுடன் இணைந்து தொடர்ந்து பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தற்போது பாக்கியாவிற்கு ஆதரவாக ராதிகா இருப்பதை காண முடிகிறது. கோபி பாக்கியாவிற்கு எதிராக செயல்படும் வேளைகளில் ராதிகா அவரை அதட்டி அடக்கி வைக்கிறார். கோபியால் தகர்ந்த அவர்களது நட்பு மீண்டும் சேரும் நிலை காணப்பட்டுள்ளது.
பொருட்காட்சி சமையல் கான்டிராக்ட்: கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என அடுத்தடுத்து தன்னுடைய பிசினஸ்களை இழந்து தவித்த பாக்கியாவிற்கு பொருட்காட்சியில் கேன்டீன் அமைக்கும் கான்டிராக்ட் கிடைக்கிறது. இந்த கான்டிராக்ட் கிடைப்பதற்கு பழனிச்சாமி உதவியாக இருக்கிறார். பொருட்காட்சி கேன்டீனுக்கான பணிகளை பாக்கியா மேற்கொண்ட நிலையில் கனமழை காரணமாக பொருட்காட்சி நடைபெறாமல் போகிறது.
பாக்கியாவிற்கு பழனிச்சாமி ஆறுதல்: முன்னதாக மழை காரணமாக பாக்கியா மிகுந்த மனஉளைச்சலில் இருந்த நிலையில், அவரை கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் இணைந்து வறுத்தெடுக்கின்றனர். இதனிடையே பாக்கியாவின் நிலைக்காக ஆறுதல் கூறும்வகையில் பழனிச்சாமி அவரது வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சூழல் காணப்படுகிறது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு கோபி வருகிறார்.
பாக்கியா ஆத்திரம்: இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், வயதுவந்த பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கொண்டு பாக்கியா கூத்தடிப்பதாக கோபி ஆத்திரத்துடன் கூறுகிறார். பழனிச்சாமியுடன் லூட்டியடிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். நேரடியாக பழனிச்சாமியையும் அவர் அவதூறாக பேச அவரது முகம் மாறுகிறது. இதனால் பாக்கியா கோபியிடம் ஆத்திரத்துடன் தன்னை கேள்வி கேட்க அவர் யார் என்று கேட்கிறார். தன்னுடைய வீட்டில் இப்படி நடந்தால் தான் கேள்வி கேட்பேன் என்று கோபி கூறுகிறார்.
கோபியை வீட்டைவிட்டு போக கூறிய பாக்கியா: இதனால் பாக்கியாவின் ஆத்திரம் அதிகரிக்கிறது. இது தன்னுடைய வீடு என்றும் அங்கு யார் இருக்க வேண்டும் என்பதை தான்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கோபியை பார்த்து பாக்கியா கூறுகிறார். தொடர்ந்து வெளியே போங்க, வீட்டை விட்டு வெளியில் போங்க என்று ஆத்திரத்துடன் பாக்கியா கூறுவதை தற்போதைய ப்ரமோவில் பார்க்க முடிகிறது. இதனால் செய்வதறியாது கோபி திகைப்பதாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











