Baakiyalakshmi: 18 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பாக்கியா.. கோபி-ராதிகாவை வெளியேற்றி அதிரடி!

சென்னை: விஜய் டிவியின் முதன்மை மற்றும் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து இருந்து வருகிறது.

Urban categoryயிலும் கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் தொடர்ந்து சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் இந்தத் தொடரின் இந்த வார ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial this week promo released and makes fans shocking

பாக்கியலட்சுமி தொடரின் அதிரடி ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் பெருமைக்கு காரணமான தொடர்களில் முதலிடத்தில் உள்ளது பாக்கியலட்சுமி தொடர். தொடர்ந்து சேனலின் முதன்மை இடத்தில் நிலை கொண்டுள்ள இந்தத் தொடர், கடந்த சில வாரங்களாக Urban Categoryயிலும் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. சன் டிவியின் எதிர்நீச்சல் உள்ளிட்ட தொடர்கள் முதலிடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் தொடரை தொடர்ந்து முன்னணியில் வைத்துள்ளது.

குறைவான கேரக்டர்களை கொண்டு வெளியாகிவரும் இந்தத் தொடர், சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு தினந்தோறும் சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. சீரியலின் லீட் கேரக்டர்களான பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்டவர்களின் சிறப்பான பங்களிப்பு இந்தத் தொடரின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அமைதியான பாக்கியா, ஆர்ப்பாட்டமான ராதிகா, இருதலைக் கொள்ளி எறும்பாக மாறியுள்ள கோபி ஆகியோரது நடிப்பு சீரியலுக்கு உறுதுணையாக உள்ளது.

கடந்த வாரங்களில் இந்தத் தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் வெளியாகின. குடும்பத்தில் ஒரு பிரச்சினையின்போது தன்னுடைய மாமியார் என்றும் பார்க்காமல் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா, ஈஸ்வரியை ஒருமையில் பேசுகிறார். விஷயத்தை சரியாகக்கூட கேட்காமல் தன்னுடைய மனைவிக்கு கோபி சப்போர்ட் செய்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினையில், கோபிக்கு வீட்டிற்காக கொடுக்க வேண்டிய மீதி பணம் 18 லட்சம் ரூபாயை கொடுத்தால் அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாக்கியா கூறுகிறார்.

மேலும் ஒருமாத காலத்திற்குள் தான் அந்த 18 லட்சத்தை கொடுப்பதாகவும் சவால் விடுகிறார். தன்னுடைய சவாலில் ஜெயிக்கும் வகையில் அவர் பிரம்மாண்டமான கல்யாண ஆர்டரை எடுக்கிறார். அதன்மூலம் அவருக்கு ஒரு தொகை கிடைக்க, பல்வேறு முயற்சிகளில் உரிய நேரத்தில் 18 லட்சத்தை அவர் பெறுகிறார். இந்நிலையில், ஒருமாத காலம் நிறைவடைந்ததாகவும் வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கோபி, ராதிகாவிடம் கூறுகிறார்.

இதையடுத்து அவரது வார்த்தைகளுக்கு ரியாக்ட் செய்யாத பாக்கியா, தன்னிடம் இருந்த 18 லட்சம் ரூபாயை அவரிடம் விட்டெறியாத குறையாக கொடுக்கிறார். இதையடுத்து அங்கேயே தங்கும் நோக்கத்தில் கோபி பேச, இடையில் நுழையும் ராதிகா, தாங்கள் அங்கிருந்து செல்வதுதான் சரியாக இருக்கும் என்று கூற, அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதையடுத்து கேட்டிற்கு வரும் பாக்கியா, இழுத்து சாத்துடா கேட்டை என்று கூறுவதாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது. புள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்றா நான் கண்டேன் என்பது போல அதிர்ச்சியுடன் கோபி திரும்புகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X