Baakiyalakshmi serial: ஜெனி கர்ப்பமான மகிழ்ச்சி.. அமிர்தாவை நிற்க வைத்து கேள்வி கேட்ட ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனியின் கர்ப்பம் உறுதியாவதாக காணப்பட்டது. இந்த சீரியலில் அவருக்கு முதல் குழந்தையாக யாழினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாக அவர் கர்ப்பம் தரித்துள்ளார்.
அமிர்தாவை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு தொடர்ந்து ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இதுகுறித்து எழிலையும் தொடர்ந்து திட்டி வருகிறார். சினிமா கனவை தூக்கிப் போட்டுவிட்டு, விரைவில் வாழ்க்கையில் செட்டில் ஆகுமாறும் உரிய வேலையை தேடிக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் எழிலிடம் தொடர்ந்து கடுமையாக பேசி வருவதை பார்க்க முடிகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனியின் கர்ப்பம் உறுதியாவதாக காணப்படுகிறது. ஜெனிக்கு தொடர்ந்து வாமிட் மற்றும் மயக்கம் வந்த சூழலில் தனக்கு நாள் தள்ளிப் போயுள்ளதாக செழியனிடம் கூறுகிறார். இதனால் அவரை கர்ப்பத்தை பரிசோதிக்கும் கிட்டை வாங்கி வரும்படி கூறுகிறார் ஜெனி. இதனிடையே, இதுகுறித்து அவர் பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். மிகவும் ஸ்பீடாக இருக்கிறாயே என்று செல்வி ஜெனியை கலாய்ப்பதாகவும் காணப்பட்டது.
செழியனை கலாய்த்த எழில்: இதனிடையே, பிரக்னன்சி கிட்டை செழியன் வாங்கிவர, அதில் பாசிட்டிவ் என வருகிறது. இதனால் ஈஸ்வரி, பாக்கியா, அமிர்தா உள்ளிட்ட அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் ஜெனியை கட்டி அணைக்கின்றனர். விஷயத்தை கேள்விப்பட்டு வரும் ராமமூர்த்தி மற்றும் எழில் என அனைவரும் வாழ்த்துக்களை பகிர்வதுடன் செழியனை ஓட்டுகின்றனர். இருவரும் எலியும் பூனையுமாக இருந்ததெல்லாம் மற்றவர் முன்னிலையில் தானா என்று எழில் கேள்வி எழுப்ப, செழியன் பதில் சொல்ல முடியாமல் திகைத்து தன்னுடைய அறைக்கு ஓடி விடுகிறார். ராமமூர்த்தியும் செழியனை கலாய்ப்பதாக இன்றைய எபிசோடில் காட்சிகள் அமைந்திருந்தன.
வீட்டிற்கு வந்த ஜெனியின் பெற்றோர்: இதனிடையே, ஜெனியின் அம்மாவிற்கு ஈஸ்வரி விஷயத்தை கூறுகிறார். அருமையான மகளை பெற்று தங்களுக்கு கொடுத்துள்ளதாக ஈஸ்வரி ஜெனி குறித்து பெருமையுடன் பேசுகிறார். இதையடுத்து ஜெனியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் ஜெனியை பார்க்க பாக்கியா வீட்டிற்கு வருகின்றனர். அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும்போது, இந்த முறை ஜெனியை கண்டிப்பாக அவரது அம்மா வீட்டிற்கு அனுப்ப மாட்டோம் என்று ஈஸ்வரி கூறுகிறார். இதனால் அவர்கள் முகம் மாறுகிறது. அது எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு இன்னும் மாதங்கள் உள்ளன என ராமமூர்த்தி அந்த சூழலை சமாளிக்கிறார்.
அமிர்தாவை கேள்வி கேட்ட ஈஸ்வரி: இதனிடையே, ஜெனியின் கர்ப்பம் குறித்து தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஈஸ்வரி, தனது அடுத்த அஸ்திரத்தை அமிர்தா மீது பிரயோகிக்கிறார். காலாகாலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் அவர், எழிலை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று அமிர்தா தான் தடுக்கிறாரா என்று நேரடியாக கேட்கிறார். தொடர்ந்து, முன்பு வந்தது போல அமிர்தாவின் முன்னாள் கணவன், திடீரென மீண்டும் வந்து உரிமையுடன் அவர்களை தன்னுடன் வர அழைத்தால் என்ன செய்வாய், அதற்குதான் எழிலையும் அமிர்தாவையும் குழந்தை பெற்றுக் கொள்ள வற்புறுத்துவதாகவும் ஈஸ்வரி கூறுவதாக இன்றைய எபிசோடில் காட்சிகள் காணப்பட்டன.


Click it and Unblock the Notifications











