Baakiyalakshmi serial: ராதிகா வீட்டில் மீண்டும் ஈஸ்வரி என்ட்ரி.. அதிர்ச்சியில் கமலா -ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையொட்டிய காட்சிகளை ஒளிபரப்பின. மயங்கி விழுந்த ஈஸ்வரிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உடல்நிலை தேறுகிறார்.

இதையடுத்து அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ராமமூர்த்தி பாக்கியாவிடம் கூற, அவரும் தலையசைக்கிறார். ஆனால் கோபி இதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில் மீண்டும் தன்னுடனேயே ஈஸ்வரியை ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்வதாக காணப்பட்டது. இதனால் மீண்டும் ஈஸ்வரி மற்றும் கமலாவிற்கு இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று தெரிய வருகிறது.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் ஈஸ்வரி. முன்னதாக ஈஸ்வரிக்கும் கமலாவிற்கும் வீட்டில் சண்டை ஏற்பட அந்த சண்டையை ராதிகா ஆத்திரத்துடன் சுட்டிக்காட்டியதால் மனவருத்தம் கொண்ட ஈஸ்வரி, சாப்பிடாமல் தொடர்ந்து தன்னுடைய அறையிலேயே முடங்குகிறார். இதனால் அவருக்கு லோ சுகர் ஏற்பட்டு மயக்கம் அடைகிறார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோபி வருத்தம்: இதற்கு தான் தான் காரணம் என்ற மன உளைச்சல் கோபிக்கு ஏற்படுகிறது. இதனிடையே விஷயம் கேள்விப்பட்டு அங்கே பாக்கியா, ராமமூர்த்தி மற்றும் எழில், செழியன் ஆகியோரும் தொடர்ந்து இருக்கின்றனர். ஈஸ்வரிக்கு என்ன ஆகுமோ என்று பரிதவிப்புடன் அனைவரும் காத்திருக்க, மருத்துவர் அவரது உடல்நிலை தேறி இருப்பதாகவும் மறுநாள் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இந்நிலையில் ஈஸ்வரியை தங்களுடன் அழைத்துச் செல்வதாக ராமமூர்த்தி கோபத்துடன் கோபியிடம் கூறுகிறார். இதையடுத்து கோபி மிகுந்த வருத்தத்துடன் அம்மாவின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்றும் இனி சரியாக பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.

ஈஸ்வரியின் முடிவு: ஆனாலும் ராமமூர்த்தி சண்டையிடுகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மாவிடம் சென்று கோபி, அவர் பாக்கியா வீட்டிற்கு சென்றால் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு தான்தான் காரணம் என்ற மன உளைச்சல் தனக்கு தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் பலவாறாக கூறுகிறார். இதையடுத்து கோபியுடனேயே செல்லும் முடிவை எடுக்கிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தி எவ்வளவோ எடுத்துக் கூறியும் தான் தற்போது அவர்களுடன் சென்றால் கோபி மனம் உடைந்து போவான் என்று ஈஸ்வரி விளக்கம் கூறுகிறார்.

கமலாவின் தப்புக்கணக்கு: முன்னதாக மருத்துவமனைக்கு ஈஸ்வரியை பார்க்க வந்த ராதிகாவிடம் கோபி சத்தமிடுகிறார். தன்னுடைய அம்மாவின் நிலைமைக்கு ராதிகா தான் காரணம் என்று கோபி கூறுவதாக அமைந்தது. இதுகுறித்து வீட்டில் தன்னுடைய அம்மாவிடம் ராதிகா புலம்புகிறார். தான் கோபியை திருமணம் செய்தது தவறு என்று யோசிப்பதாகவும் தனிமையாகவே இருந்து மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதாகவும் ராதிகா கமலாவிடம் புலம்ப, தற்போது ஈஸ்வரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும் நல்லதுக்கு தான் என்று கமலா கூறுகிறார். அவரை பாக்கியா குடும்பத்தினர் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்கள் என்றும் ராதிகாவும் கோபியும் சந்தோஷமாக இருக்கலாம் என்றும் கமலா கூறுகிறார்.

அதிர்ச்சியில் கமலா -ராதிகா: உடனடியாக காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து சென்று கமலா பார்க்கிறார். ஆனால் அங்கே ஈஸ்வரியும் கோபியும் நிற்பதை பார்த்து கமலா மட்டுமில்லாமல் ராதிகாவும் அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து கமலா மற்றும் ஈஸ்வரி இருவரும் சண்டையிட்டு வந்த நிலையில் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஈஸ்வரி பாக்கியா வீட்டிற்கு சென்று விடுவார் என்று கமலா தப்பு கணக்கு போட்டிருந்தார். ஆனால் கோபி மீண்டும் தன்னுடைய அம்மாவை ராதிகா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது மீண்டும் கமலா மற்றும் ஈஸ்வரிக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X