Baakiyalakshmi: என்னது தெரியாம தப்பு செஞ்சிட்டாரா..கோபி குறித்து பேசிய ஈஸ்வரிக்கு செல்வி பதிலடி!
சென்னை: விஜய் டிவி முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பம் அடைந்துள்ள நிலையில், செழியன் மூலமாக தாத்தாவாகியுள்ள கோபி, இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்.
ஆனால் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை உடனடியாக கூறிவிட்டு, அங்கிருந்து தங்கள் வீட்டிற்கு சென்று விடலாம் என்று ராதிகா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரை சமாளிக்கும் வழி தெரியாமல் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை கூறவும் முடியாமல் கோபி தொடர்ந்து தவித்து வருகிறார். இன்றைய தினம் கண்டிப்பாக தான் கூறி விடுவேன் என்று கோபி ராதிகாவிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆவதாக எபிசோடு காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்யும் வகையில் அமைந்திருந்தது. தன்னுடைய கர்ப்பம் குறித்து குடும்பத்தினர் அனைவரிடம் கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராதிகா தொடர்ந்து கோபியை வலியுறுத்தி வருகிறார். ஆனால் குடும்பத்தினரிடம் எப்படி இந்த விஷயத்தை கூறுவது என்று தெரியாமல் அவமானமாக உணர்கிறார் கோபி. இந்நிலையில் வாக்கிங் போய்விட்டு வரும் அவர், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.
ராதிகா கர்ப்பம்: தொடர்ந்து இதுதான் சரியான நேரம் என்று யோசித்து அனைவரிடமும் ராதிகாவின் கர்ப்பம் குறித்து பேச முற்படுகிறார் கோபி. ஆனால் இதை பார்க்கும் ஈஸ்வரி கண்களால் ஜாடை காட்டி அங்கிருந்து போகுமாறு அவரை எச்சரிக்கிறார். அந்த விஷயத்தை கூற வேண்டாம் என்று ஈஸ்வரி ஜாடை காட்டிய நிலையில், என்ன மாதிரி முடிவெடுப்பது என்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறி தன்னுடைய அறைக்கு செல்கிறார் கோபி. இதனிடையே, ஏன் இன்னும் தன்னுடைய கர்ப்பம் குறித்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார் என்று ராதிகா கோபியிடம் கோபத்துடன் கேட்கிறார்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற ராதிகா: இதற்கு பதிலளிக்கும் கோபி, குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர்களின் மகிழ்ச்சியை தான் குலைக்க விரும்பவில்லை என்றும் கூறுகிறார். இதைக் கேட்கும் ராதிகா கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். தன்னுடைய கர்ப்பம் அவர்களின் மகிழ்ச்சியை எப்படி பாதிக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தன்னுடைய கர்ப்பம் குறித்து கூறினால், தன்னுடைய மகன்களின் சந்தோஷம் பாதிக்கும் என்று யோசிக்கும் கோபியை அவர் திட்டி தீர்க்கிறார். தன்னுடைய மகன்களின் மகிழ்ச்சியை பற்றி மட்டுமே கோபி யோசிப்பதாகவும் தன்னையும் தன்னுடைய கர்ப்பத்தையும் அவர் யோசிக்கவில்லை என்றும் ராதிகா சுட்டி காட்டுகிறார்.
ராதிகா கவலை: மேலும் இதுதான் தன்னுடைய கவலை என்றும் நாளையே இனியாவிற்காக இந்த வீட்டிற்கு வந்து விடுமாறு ஈஸ்வரி கூறினால், உடனடியாக அவர் தன்னை விட்டுவிட்டு பாக்கியா வீட்டோடு வந்துவிடுவார் என்றும் அதனால் தான் இந்த குழந்தையை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் ராதிகா தொடர்ந்து கோபியுடன் சண்டை போடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக காலையில் எழுந்து வரும் ஈஸ்வரி பாக்கியாவின் மனநிலையை தான் புரிந்து வைத்துள்ளதாகவும் ராதிகாவின் கர்ப்பம் அவரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று தான் யோசிப்பதாகவும் ஆனால் இந்த விஷயத்தில் கோபி தெரியாமல் தவறிழைத்து விட்டதாகவும் ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதாகவும் ஈஸ்வரி அடுத்தடுத்து அடுக்குகிறார்.
தட்டிக்கழிக்கும் பாக்கியா: இதைக் கேட்கும் பாக்கியா, தனக்கு தன்னுடைய வேலைகளே அதிகமாக இருக்கும் சூழலில் மற்றவர்களின் விவகாரம் தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்டு தடாலடியாக அங்கிருந்து கிளம்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து ஈஸ்வரி, தற்போதும் தன்னுடைய மகன் கோபிக்கே சப்போர்ட் செய்வதாக செல்வி, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். தன்னுடைய மகன், தெரியாமல் தவறிழைத்து விட்டதாக ஈஸ்வரி கூறுவதையும் செல்வி கோபத்துடன் பாக்கியாவிடம் சுட்டிக் காட்டுகிறார்.


Click it and Unblock the Notifications











