பாக்கியலட்சுமி சீரியல்: தாத்தாவின் அஸ்தியை வாங்கிய பாக்கியா குடும்பத்தினர்.. கோபியும் போய் தனியா வாங்குறாரே!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஏராளமான ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. பாக்கியாவிற்கு மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அனைவரையும் காக்கும்வகையில் தொடர்ந்து ஆலமரமாக இருந்து வந்த ராமமூர்த்தியின் மறைவு அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது.

இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் மறைவையொட்டிய காட்சிகள் காணப்பட்டன. இதனிடையே, பாக்கியா வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த ஜெனியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் அவரை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறுகின்றனர். அவர் இரண்டாவதாக கர்ப்பமாக உள்ள நிலையில் அவர்கள் பாக்கியாவிடமும் இதற்காக சம்மதம் வாங்குகின்றனர்.

baakiyalakshmi serial vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்குவதாக அமைந்திருந்தது. பாக்கியாவிற்கு மட்டுமில்லாமல் எழில், செழியன், ஈஸ்வரி என அனைவருக்கும் ஆலமரமாக இருந்து பாதுகாத்து வந்த ராமமூர்த்தி காலமான நிலையில் அவரது இறுதிச்சடங்குகளை குடுமபத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சீரியல்களில் ஒரு இறப்புக்காட்சியை காட்டும்போது சிலரது அழுகை உள்ளிட்டவற்றை மட்டுமே காட்சிப்படுததுவார்கள். ஆனால் இந்த சீரியலில் ராமமூர்த்தியின் இறுதிச்சடங்குகள் ஒவ்வொன்றையும் ஒளிபரப்பினர்.

சோகத்தை அதிகரித்த பாடல்: இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் மறைவையொட்டி குடும்பத்தினர் அனைவரும் தொடர்ந்து தூங்காமல் அழுதுக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. எழில் மற்றும் செழியன், இனியா, ஈஸ்வரி, பாக்கியா என குடும்பத்தினர் மட்டுமில்லாமல் செல்வியும் ராமமூர்த்தியின் மறைவால் மிகப்பெரிய துக்கத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது. தனியாக தூங்க யாருக்கும் மனமில்லாத நிலையில் அனைவரும் ஹாலிலேயே தூங்கிய நிலையில், எழில் மற்றும் செழியன் தொடர்ந்து கண்ணீர் சிந்தியதையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களின் சோகத்தையும் அதிகரிக்கும் வகையில் பாடல் ஒன்றையும் சீரியல் டீம் ஒலிபரப்பியதை பார்க்க முடிந்தது.

கதறி அழுத பாக்கியா: இந்நிலையில் ஒருவழியாக அனைவரும் தூங்குகின்றனர். மறுநாள் காலையில் எழுந்துவரும் பாக்கியாவிற்கு தன்னுடைய மாமனார், வழக்கமாக அமரும் சேரில் இருந்தபடி கூப்பிடுவதாக தோன்றுகிறது. இதையடுத்து பரிதவிக்கும் அவர், உண்மையை விளங்கிக் கொள்ளவே சிறிது நேரம் பிடிக்கிறது. தொடர்ந்து அவருடைய சேரின் அருகில் சென்று பாக்கியா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இதையடுத்து வீட்டிற்கு வரும் ஜெனியின் அப்பா மற்றும் அம்மா, இந்த நேரத்தில் ஜெனியை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் தங்களது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறுகின்றனர்.

அப்பாவிற்கு நோ சொன்ன ஜெனி: ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நிலைகுலைந்திருக்கும் இந்த தருணத்தில் தான் அப்பா வீட்டிற்கு சென்றாலும் குடும்பத்தினரை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பேன் என்று கூறும் ஜெனி, அவர்களுடன் செல்ல மறுக்கிறார். இதனிடையே, மறுநாள் பால் ஊற்றும் நிகழ்வை மேற்கொள்ளும் எழில் மற்றும் செழியன், அஸ்தியை வாங்கிக் கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து அங்கு வரும் கோபி மற்றும் ராதிகாவும் ராமமூர்த்தியின் அஸ்தியை தாங்களும் வாங்கிச் செல்கின்றனர். வீட்டிற்கு அதை கொண்டு சென்று அனைவரும் வணங்கிவிட்டு அதை கொண்டுவந்து கரைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X