Baakiyalakshmi serial: பாக்கியாதான் என் மருமகள்.. உறுதியாக முடிவெடுக்கும் பழனிச்சாமி அம்மா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்துள்ளது பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக தொடர்ந்து அதகளம் செய்து வருகிறது. கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து பெற்ற படிப்பறிவு அதிகமாக இல்லாத பெண் எப்படி தனக்கு தெரிந்த சமையல் தொழிலை வைத்து முன்னேறுகிறார் என்பதாக இந்த சீரியல் கதைக்களம் காணப்படுகின்றன.
இந்த சீரியல் மிக விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. அதையொட்டி பல விஷயங்கள் இந்த சீரியலில் காணப்படுகிறது. எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் செய்து வைக்கும் முடிவிற்கு பழனிசாமியின் அம்மா வருவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இது எப்படி நடக்கும் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக கெத்து காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களில் இந்த சீரியலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சீரியலில் சுவாரஸ்யத்திற்கு பங்காற்றி வருகின்றனர் சுசித்ரா, சதீஷ் உள்ளிட்ட நடிகர்கள். தன்னுடைய கணவர் தன்னை கைவிட்ட சூழலில் அடுத்ததாக தனக்கு மிகவும் தெரிந்த சமையலையே தன்னுடைய கேரியராக மேற்கொண்டு வருகிறார் பாக்கியா.
பழனிச்சாமி பிறந்தநாள்: மசாலா பிசினஸில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து சமையல் கான்ட்ராக்ட், கேன்டீன் கான்டிராக்ட் என வளர்ந்து தற்போது தனியாக ரெஸ்டாரெண்டை ஓபன் செய்து நடந்து வருகிறார் பாக்கியா. இது மட்டுமில்லாமல் ஏழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்ட அடுத்தடுத்த பிரச்சனைகள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பாக்கியாவின் நெருங்கிய நண்பராக பழனிச்சாமி இருந்து வருகிறார். பாக்கியா வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கேரியரில் ஏற்படும் குழப்பங்களை அவர் தீர்த்து வைக்க தொடர்ந்து உதவி செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு 45வது பிறந்த நாளை கொண்டாட அவரது அம்மா தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.
பழனிச்சாமி வீட்டில் பாக்கியா குடும்பத்தினர்: இந்த பிறந்தநாளில் பாக்கியா சமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் பாக்கியா. இந்நிலையில் இன்றைய தினம் பழனிச்சாமி தன்னுடைய அம்மாவிடம் பிறந்த நாளை ஒட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வதாக காணப்படுகிறது. தொடர்ந்து அவரது அக்கா, தங்கை மற்றும் அக்கா மகன் என அனைவரும் பழனிச்சாமி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வருகின்றனர். இதனிடையே பாக்கியா மற்றும் குடும்பத்தினரும் பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி அங்கு வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து அறிமுகப்படலம் நடந்து முடிகிறது.
பழனிச்சாமி -பாக்கியா திருமணம்?: இதனிடையே தன்னுடைய மகள்களிடம் பேசும் பழனிச்சாமியின் அம்மா, பாக்கியா குறித்து அவர்களிடம் ஆலோசிக்கிறார். மூத்த மகள் இதற்கு ஒப்புதல் அளிக்கிறார். ஆனால் இளைய மகளுக்கு பாக்கியாவின் மகன்கள் திருமணமாகி மூத்த மகனுக்கு குழந்தை இருப்பது நெருடலாக இருக்கிறது. இதை அவர் தன்னுடைய அம்மாவிடமே நேரடியாக கூறுகிறார். ஆனால் இதை மறுக்கும் பழனிச்சாமியின் அம்மா, பாக்கியா தான் தன்னுடைய மருமகள் என்று தான் தீர்மானித்து விட்டதாக கூறுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோடு காணப்பட்டது.
மனஉளைச்சலில் செழியன்: இதனிடையே, தன்னுடைய கணவனின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கிறார் ஜெனி. இதனால் செழியன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தன்னுடைய தம்பி எழிலிடம் இது குறித்து குறைக்கொட்டிக் கொள்கிறார் இதற்கு பதிலளிக்கும் எழில், ஒரு காலகட்டத்தில் செழியன், ஜெனி தன் மீது அக்கறை கொள்வதில்லை என்று கூறியதாகவும் தற்போது அவர் அதிகமான அக்கறை காட்டுவது குறித்து குறை கொட்டிக் கொள்வதாகவும் எடுத்துரைக்கிறார். சிறிது காலங்கள் இப்படித்தான் இருக்கும் என்றும் விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் அவர் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











