Baakiyalakshmi serial: பெண்களால்தான் பிரச்சினை.. எழில் -செழியனையும் தண்ணி வண்டியாக மாற்றும் கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முன்னதாக சேனலின் முதலிடத்தில் தொடர்ந்து இருந்துவந்த இந்த சீரியல் தற்போது சிறகடிக்க ஆசை தொடரிடம் தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆயினும் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள்மூலம் முதலிடத்தை மீண்டும் பெறும் முயற்சியில் சீரியல் தற்போது முனைப்பாக உள்ளது.
எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருவதால், தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்த முடியாமல் பாக்கியா தவித்து வருகிறார். தன்னடைய அருமை மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் அவர் மனம் உடைந்து காணப்படுகிறார். தீர்க்கும் வழிதெரியாமல் முழி பிதுங்கியுள்ளார். இருந்தபோதிலும் அனைத்தும் மாறும் என்ற எண்ணம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. சமீபத்தில் பொருட்காட்சியில் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் கேன்டீன் கான்டிராக்டை அனைவரின் பாராட்டுக்களுக்கிடையில் நடத்தி முடித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக அடுத்தடுத்த எபிசோட்கள்மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய கணவன் கோபியுடனான விவாகரத்திற்கு பிறகு தன்முனைப்புடன் மசாலா பிசினஸ், கேன்டீன் கான்டிராக்ட் மற்றும் சமையல் கான்டிராக்ட் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னேறுகிறார் பாக்கியா. கோபி கொடுக்கும் பலவிதமான டார்ச்சர்களையும் சமாளித்து, அவரது பெற்றோர் மற்றும் தன்னுடைய மகன்களின் மருமகள்களின் வாழ்க்கையையும் சிறப்பாக்க முயல்கிறார்.
கேள்விக்குறியாகும் எழில் -செழியன் வாழ்க்கை: தன்னுடைய மகன் எழில் விரும்பியபடி அமிர்தாவை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதனால் தன்னுடைய மாமியாரின் அதிருப்தியையும் பெறுகிறார். எல்லாம் சிறப்பாக நடந்துவரும் நிலையில், தற்போது எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் குடும்பத்தினர் அனைவரும் தவிப்பில் உள்ளனர். மாலினியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஜெனியை பிரியும் சூழல் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்ததாக கருதப்பட்ட அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் திரும்ப வந்ததால் எழில் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.

மனநெருக்கடியில் குடும்பத்தினர்: இந்தப் பிரச்சினைகளால் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளனர். மனநெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அமிர்தா விவகாரத்தால் கதிகலங்கி நின்றாலும் நிதானமான போக்கை கடைப்பிடித்து வருகிறார் எழில். இதனிடையே, ஜெனியையும் தன்னுடைய மகளையும் பிரிய முடியாமல் கண்கலங்கி கதறும் செழியன், ஜெனி வீட்டிற்கு சென்று அடுத்தடுத்த அவமானங்களை சந்தித்து வருகிறார். அவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் தான் புதிதாக ரெஸ்டாரெண்ட் துவங்கவுள்ள விஷயத்தை ஜெனியை நேரில் சென்று சந்தித்து கூறுகிறார் பாக்கியா. ஜெனியின் பெற்றோர் அவரை அவமானப்படுத்தினாலும் ஜெனி, பாக்கியாவிடம் அன்புடன் நடந்துக் கொள்கிறார்.
கைநழுவிய பிசினஸ்: இந்நிலையில் தன்னுடைய பிசினஸ் கைநழுவிப் போனதை ராதிகா மற்றும் குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார் கோபி. அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையில், அதுகுறித்து கேள்வி எழுப்பும் ராதிகாவிடம் வழக்கம்போல சமாளிக்கிறார். இதனிடையே மாலை அவருடைய அலுவலகத்திற்கு வந்து தான் ஃபங்க்ஷன் ஒன்றிற்காக அவரை பிக்கப் செய்வதாக ராதிகா கூறுகிறார். இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கோபி முழிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. முன்தினம் குடித்துவிட்டு கோபி வந்த நிலையில், இனிமேல் அப்படி நடக்காது என்று சத்தியம் செய்கிறார்.

மகன்களுடன் குடிக்கும் கோபி: தனிடையே தற்போது வெளியாகியுள்ள புதிய பிரமோவில் கோபி தான் குடிப்பதுடன் சோகத்தில் இருக்கும் தன்னுடைய மகன்கள் செழியன் மற்றும் எழிலையும் கூட்டு வைத்துக் கொண்டு குடிப்பதாக காட்டப்பட்டுள்ளது. மேலும் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பெண்கள்தான் காரணங்களாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனிடையே அவர்களை தேடிக்கொண்டு ராதிகா மற்றும் பாக்கியா வருகிறார்கள். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் கோபி, எழில் மற்றும் செழியன் எப்படி தப்புகிறார்கள் என்பதாக தற்போதைய பிரமோவில் காட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











