Baakiyalakshmi serial: அம்மாவை ஈஸ்வரி பாட்டி கீழே தள்ளிவிடவில்லை.. ஷாக் கொடுத்த மயூ ஸ்டேட்மெண்ட்!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கைதாகி நீதிமன்ற காவலில் இருக்கும் ஈஸ்வரியை சுற்றியே கதைக்களம் காணப்பட்டது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையில் பாக்கியாவின் சாட்சியம் எந்தவகையிலும் உபயோகப்படாத நிலையில் ராதிகாவின் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

மேலும் கோபியின் சாட்சியும் இந்த வழக்கில் முக்கியமானதாக கருதப்பட்டு ஈஸ்வரிக்கு நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிடுகிறார். இதனால் ராமமூர்த்தி, பாக்கியா உள்ளிட்ட குடுமபத்தினர் அனைவரும் நிலைகுலைகின்றனர். எழில், செழியன், ராமமூர்த்தி அனைவரும் கோபியின் நடவடிக்கையை குற்றம் சாட்டி அவரை ஒதுக்குகின்றனர்.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் மிகச்சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக கமலா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். அங்கு அவரிடம் வழக்கறிஞர் அடுத்தடுத்த கேள்விகளை கேட்க, ராதிகா -கோபி திருமணம் தனக்கு பிடிக்கவில்லை என்றபோதிலும் ஒரு குழந்தையை கொல்லும் அளவிற்கு தான் கெட்டவள் இல்லை என்பதை நிரூபிக்க ஈஸ்வரி தொடர்ந்து முயல்கிறார். ஆனால் அவரது வாதம் அங்கு எடுபடாமல் போகிறது.

சாட்சிகள் விசாரணை: இதையடுத்து பாக்கியா, ராதிகா என அடுத்தடுத்த சாட்சிகள் விசாரிக்கப்படுகின்றனர். தன்னுடைய மாமியார் கொலை செய்யும் அளவிற்கு மோசமானவர் இல்லை என பாக்கியா கூற, கோபியை விவாகரத்து செய்த நிலையிலும் பாக்கியா மற்றும் ஈஸ்வரி இடையிலான பந்தம் சிறப்பாக இருப்பதாகவும் பாக்கியாவிற்காகவே ராதிகாவை கொலை செய்ய ஈஸ்வரி முயன்றதாகவும் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தை முன் வைக்கிறார். தொடர்ந்து, தன்னை தன்னுடைய மாமியார்தான் கீழே பிடித்து தள்ளி கொல்லப் பார்த்ததாக ராதிகாவும் அறுதியிட்டு கூறுகிறார். தொடர்ந்து கோபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் தான் இல்லை என்பதால் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதாக அவர் கூறுகிறார்.

Television Baakiyalakshmi serial Vijay TV

நீதிமன்ற காவலில் ஈஸ்வரி: இதனால் ஈஸ்வரியின் குற்றம் நிரூபணமாவதாகவும் அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிடுகிறார். இதையடுத்து ராமமூர்த்தி, பாக்கியா உள்ளிட்ட அனைவரும் கதறி அழுகின்றனர். ராதிகா மற்றும் கமலாவிடம் செல்லும் பாக்கியா, அவர்களுக்கு மனசாட்சி இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார். அந்தக் கேள்வியைகூட கோபியிடம் கேட்க பிடிக்காமல் குடும்பத்தினர் அனைவரும் விலகி செல்கின்றனர். இதனால் தான் அநாதையாக்கப்பட்டதாக உணர்கிறார் கோபி. இதையடுத்து ஈஸ்வரி, பாக்கியாவை மட்டும் பார்க்க விரும்பிய நிலையில் அவரை சென்று பார்க்கிறார் பாக்கியா.

Television Baakiyalakshmi serial Vijay TV

கண்ணீர் விட்டு கதறிய ஈஸ்வரி: தான் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டுமா என்று கண்ணீருடன் ஈஸ்வரி பாக்கியாவிடம் கேட்கிறார். தொடர்ந்து அவரை அடுத்த ஹியரிங்கிலேயே வெளியில் கொண்டு வருவோம் என்று பாக்கியா நம்பிக்கை கொடுக்கிறார். தொடர்ந்து வீட்டிற்கு அனைவரும் வரும்நிலையில், ஈஸ்வரியை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டு கையாலாகாமல் நின்றுக் கொண்டிருந்ததாகவும் தான் செத்தால் தேவலை என்றும் ராமமூர்த்தி கண்ணீர் வடிக்கிறார். அவரை குடும்பத்தினர் அனைவரும் தேற்றுகின்றனர். பாட்டி மற்றும் தாத்தாவை நினைத்து இனியாவும் கண்ணீருடன் புலம்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay TV

மயூ கொடுத்த ஸ்டேட்மெண்ட்: இதனிடையே அடுத்த இரு தினங்களுக்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாக்கியாவை பார்க்கும் மயூ, பாட்டி தன்னுடைய அம்மா ராதிகாவை தள்ளி விடவில்லை என்று கூறுவதாக காணப்படுகிறது. இதையடுத்து பழனிச்சாமி உதவியுடன் வழக்கறிஞரை சந்தித்து இந்த விஷயத்தை பாக்கியா கூறுகிறார். அந்தப் பெண், இதேபோல நீதிமன்றத்திலும் கூறினால், ஈஸ்வரியை எளிதாக வெளியில் எடுததுவிடலாம் என்று அவர் கூற, சின்னப்பெண்ணை எப்படி நீதிமன்றத்திற்கு அழைத்துவருவது என்பதாக பாக்கியா கேட்பதாக இந்த பிரமோவில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X