Baakiyalakshmi serial: ஈஸ்வரி கழுத்தில் கைவைத்த ராதிகா.. பதறியடித்து ஓடிவந்த கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் ஈஸ்வரி. அவரை ராமமூர்த்தி, தன்னுடன் பாக்கியா வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். ஆனால் இதை ஏற்காத கோபி, மீண்டும் ராதிகா வீட்டிற்கே ஈஸ்வரியை அழைத்து வருகிறார்.
உடல்நிலை சரியில்லாததால் ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு சென்றுவிடுவார், அதனால் ராதிகாவும் கோபியும் சந்தோஷமாக இருக்கலாம் என கமலா தன் மகளுக்கு ஆலோசனை கூறும் சூழலில், ஈஸ்வரியை மீண்டும் ராதிகா வீட்டிற்கு கோபி அழைத்து வந்ததால் கமலாவும் ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே இடம்பெற்று வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை தொடர்ந்து வசீகரித்து வரும் சூழலில் இந்த வாரமும் டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலேயே நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. சாப்பிடாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த ஈஸ்வரியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார் கோபி. தொடர்ந்து தன்னுடைய அம்மாவின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்றும் வருத்தம் கொள்கிறார்.
மீண்டும் கோபியுடன் வரும் ஈஸ்வரி: இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த பாக்கியா, ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள், ஈஸ்வரியை மீண்டும் தங்களது வீட்டிற்கு அழைத்து செல்ல முயல்கின்றனர். ஆனால் தன்னுடைய அம்மாவை தான் இனிமேல் சரியாக பார்த்துக் கொள்வேன் என்று உறுதி கூறும் கோபி, ஈஸ்வரியிடமும் பலவாறாக பேசி, மீண்டும் ராதிகா வீட்டிற்கே அழைத்து வருகிறார். இதனிடையே, ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு சென்றுவிடுவார் என கமலா ராதிகாவிற்கு ஆறுதல் கூறுகிறார். ஆனால் அதற்கு மாற்றாக அவரை ராதிகா வீட்டிற்கே மீண்டும் அழைத்து வருகிறார் கோபி. இதனால் கமலா மட்டுமில்லாமல் ராதிகாவும் அதிர்ச்சி அடைகிறார்.
ஈஸ்வரி கழுத்தில் கைவைத்த ராதிகா: இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பும் கமலாவிடம், தன்னுடைய அம்மாவை தான்தான் கூட வைத்துக் கொள்வேன் என கோபி உறுதியாக கூறுகிறார். இதனால் பதில் பேச முடியாமல் கமலா செல்கிறார். கோபி ஈஸ்வரிக்கு தன்னுடைய கிளவுட் கிச்சனிலிருந்து சாப்பாடு எடுத்துவரும்போது, ஈஸ்வரியிடம் பேச முயல்கிறார் ராதிகா. அவரது உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று கேட்டு அவரது கழுத்தில் கை வைத்து பார்க்கிறார். இதை பார்க்கும் கோபி, அவர் தன்னுடைய அம்மாவை கொலை செய்ய முயல்வதாக கற்பனை செய்துக் கொண்டு அதிர்ச்சி அடைகிறார். இதுகுறித்து ராதிகா கேள்வி எழுப்ப, மழுப்புகிறார்.
பாக்கியா வருத்தம்: இதனிடையே, தன்னுடைய பாட்டியின் உடல்நிலை குறித்து செழியன் மற்றும் எழில் இருவரும் வருத்தம் கொள்கின்றனர். பாக்கியாவும் இயல்பாக இல்லாத நிலையில், அதுகுறித்து எழில் கேள்வி எழுப்புகிறார். அவரும் தன்னுடைய மாமியார் குறித்து பாராட்டி பேசி, அவர் தன்னுடைய உடல்நிலையை கெடுத்துக் கொள்வதாக கூறுகிறார். இதனிடையே, இதுபோன்ற பொருப்பில்லாத மகனை பெற்றதற்கே ஈஸ்வரி, வானத்திற்கு குதிப்பதாகவும், நல்ல பிள்ளையை பெற்றிருந்தால் அவரை பிடித்திருக்கவே முடியாது என்றும் ராமமூர்த்தி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
புதிய பிசினசில் பழனிச்சாமி: இதனிடையே, பாக்கியாவின் ரெஸ்டாரெண்டிற்கு வரும் பழனிச்சாமி, அவருடைய கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடையை தான் வாங்கியுள்ளதாகவும் அங்கு கபே ஒன்றை ஓபன் செய்யவுள்ளதாகவும் கூறுகிறார். பாக்கியா கடையில் இல்லாததை அங்கு வைத்து விற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார். பக்கத்து கடைகளில் இருந்தால் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். சரியான திட்டத்துடன்தான் அவர் உள்ளதாக செல்வி கலாய்ப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











