Baakiyalakshmi serial: 72வது முறையாக ஜெனியை பார்த்த செழியன்.. கணக்கிட்டு கலாய்த்த இனியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னை ஏமாற்றி விவாகரத்து பெற நினைத்த கோபிக்கு தானே முன்வந்து விவாகரத்து கொடுக்கிறார் பாக்கியா. தொடர்ந்து பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார் கோபி. இருந்தபோதிலும் பாக்கியாவின் அடுத்தடுத்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொடர்ந்து சதி செய்து குலைத்து வருகிறார் கோபி. இந்நிலையில் மசாலா பிசினசில் ஆரம்பித்து தற்போது ரெஸ்டாரன்ட் திறப்பு வரை முன்னேற்றம் கண்டுள்ளார் பாக்கியா.

அவரது ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு வர இருந்த அமைச்சரை சதி திட்டம் தீட்டி வரவிடாமல் செய்கிறார் கோபி. ஆனால் இறுதி நேரத்தில் அமைச்சருக்கு உண்மை தெரியவர, பாக்கியா ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் கோபி மூக்கறுப்படுகிறார். இதனிடையே, ரெஸ்டாரெண்ட் திறப்பிற்கு அவர் ஏன் சென்றார் என்று ராதிகாவும் சண்டையிட்டு கோபியை உதைக்கிறார்.. முன்னதாக ரெஸ்டாரெண்ட் திறப்பிற்கு ஜெனி வந்த நிலையில் அவரையும் அவரது குழந்தையையும் பாக்கியா மற்றும் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்பதை பார்க்க முடிந்தது.

Vijay TV s Baakiyalakshmi serial today 11th March 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக முன்னணி இடத்தில் உள்ளது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் தொடர்ந்து பல மாதங்களாக சேனலின் இரண்டாவது இடத்தை பெற்று வருகிறது. முன்னதாக இந்த சீரியல் முதலிஇடத்திலும் சில மாதங்கள் இருந்ததை காண முடிந்தது. கணவனால் நயவஞ்சகமாக விவாகரத்துக்கு அப்ளை செய்யப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து தானே முன்வந்து விவாகரத்து கொடுக்கிறார் பாக்கியா. இதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு தற்போது அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

வளர்ச்சி காணும் பாக்கியா: ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்த போதிலும் பாக்கியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அடுத்தடுத்து அவரை மனதளவில் காயப்படுத்தும் கோபியின் செயலை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்க முடிகிறது. தொடர்ந்து பாக்கியாவின் மீது கவனம் செலுத்தி வந்த கோபிக்கு ஒரு கட்டத்தில் அவரது பிசினசை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பாக்கியா அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி காண்கிறார். மசாலா பிசினஸில் துவங்கிய அவரது பயணம் தொடர்ந்து கேன்டீன் காண்ட்ராக்ட், சமையல் கான்ட்ராக்ட் என படிப்படியாக முன்னேறி தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கும் அளவிற்கு அவர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 11th March 2024 episode

சதித்திட்டம் தீட்டும் கோபி: இதை பொறுக்க முடியாத கோபி, ரெஸ்டாரண்ட் திறப்பிற்கு அமைச்சர் வருவதை சதி செய்து நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் இறுதி நேரத்தில் இந்த உண்மை தெரிய வந்து அமைச்சர் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனால் சமூக வலைதளங்களில் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெறுகிறது. இந்நிலையில் இந்த விஷயத்தை நேரடியாக பார்க்கும் கோபி மன உளைச்சலுக்கு உள்ளாகி குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் அவர் பாக்கியாவின் ரெஸ்டாரண்ட் திறப்பிற்கு சென்ற விஷயத்தை அறிந்து ராதிகா கோபியை திட்டி அடித்து உதைக்கிறார்.

சண்டை பிடிக்கும் ஈஸ்வரி: இது குறித்து தெரிந்த கோபியின் அம்மா ஈஸ்வரி ராதிகாவிடம் சண்டை பிடிக்கிறார். ஆனால் ஈஸ்வரி அவருடைய கணவரிடம் போடும் சண்டைகளை விட தான் கோபியிடம் குறைவாகவே சண்டை போடுவதாக பதிலடி கொடுக்கிறார் ராதிகா. தன்னை எதிர்த்து ராதிகா தொடர்ந்து பேசி வரும் சூழலில் ஈஸ்வரி அடுத்த கட்டமாக என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே ரெஸ்டாரண்ட் திறப்பிற்கு வந்த ஜெனி மற்றும் அவரது குழந்தையை குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக எதிர்கொள்கின்றனர்.

மகளை கொஞ்சிய செழியன்: தன்னுடைய மகளை கையில் ஏந்தி கொஞ்சி மகிழ்கிறார் செழியன். இதனிடையே அனைவரும் ஒரே டேபிளில் அமர்ந்து உணவருந்துகின்றனர். அப்போது இனியா நம்பரை வைத்து கணக்கிடுகிறார். 72 என்று அவர் கூற, இது என்ன கணக்கு என்று எழில் கேட்கிறார். அப்போது ஜெனியை செழியன் அண்ணா 72 முறை அடுத்தடுத்து பார்த்ததாகவும் ஆனால் ஜெனி, செழியினை கண்டு கொள்ளவே இல்லை என்றும் இனியா கூறுகிறார். இதைக் கேட்கும் ஜெனி சாப்பிடுவதில் கவனம் செலுத்துமாறு இனியாவிடம் கூறுகிறார். இந்நிலையில் ஜெனி சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 11th March 2024 episode

ஜெனியை டிராப் செய்யப்போகும் செழியன்: அப்போது அவருக்கு வண்டி கிடைக்காததால் ஜெனியை அவரது வீட்டில் டிராப் செய்யுமாறு செழியனிடம் அவரது தாத்தா கூறுகிறார். ஜெனி இதை மறுக்கும் நிலையில் தான் சொன்னால் கேட்க மாட்டாயா என்று சமாதானப்படுத்துகிறார். தன்னுடைய அப்பா ஏதாவது சொல்வார் என்று ஜெனி கூறியபோதும் அதனால் பரவாயில்லை என்று செழியனுடன் ஜெனியை அனுப்பி வைப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்ட சூழலில் எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் கணேசால் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்துள்ளது. அடுத்ததாக செழியன் வாழ்க்கையில் மீண்டும் ஜெனி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X