உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போகிறார்.. குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைத்த பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய கர்ப்பம் குறித்து குடும்பத்தினரிடம் கூறுமாறு ராதிகா கோபியை வலியுறுத்துகிறார். ஆனால் அவரோ தன்னுடைய மகன்களிடமும் மகளிடமும் இந்த விஷயத்தை வெளிப்படுத்த அவமானமாக உணர்கிறார்.
இதனால் தொடர்ந்து விஷயத்தை யாரிடமும் கூறாமல் தள்ளி போடுகிறார். நாளை, நாளை மறுநாள் என்று ஒவ்வொரு நாளாக அவர் விஷயத்தை கூறாமல் காலதாமதம் செய்த நிலையில் இன்றைய தினம் அவர் விஷயத்தை குடும்பத்தினர் அனைவரிடமும் கூறும் சூழலுக்கு ராதிகாவால் தள்ளப்படுகிறார். ஆனாலும் அவர் அதிலிருந்து எஸ்கேப் ஆவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. தன்னுடைய இரண்டாவது மனைவி, ராதிகாவின் கர்ப்பத்தை தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரிடமும் மறைத்து வருகிறார் கோபி. ஒரு கட்டத்தில் ராதிகாவின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக தன்னுடைய அம்மாவிடம் மட்டும் அவர் கூறுகிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி, இந்த குழந்தையை பெற்றுக் கொள்வதால் பல சிக்கல்கள் ஏற்படும் என்று கூறி குழந்தையை கலைத்து விடுமாறு ராதிகாவிடமும் கோபியிடம் பேசுகிறார்.
அம்மாவிடம் புலம்பிய கோபி: தான் ராதிகாவிடம் இதையே கூறியதாகவும் ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கோபி தன்னுடைய அம்மாவிடம் புலம்பித் தீர்க்கிறார். தொடர்ந்து ராதிகாவிடம் இது குறித்து ஈஸ்வரி பேசுகிறார். ஆனால் தன்னுடைய குழந்தை குறித்தும் தன்னுடைய கர்ப்பம் குறித்தும் முடிவெடுக்க வேண்டியது தானும் கோபியும்தான் என்றும் மற்றவர்கள் இதில் முடிவு எடுக்க முடியாது என்றும் ஈஸ்வரியின் முகத்தில் அடித்தபடி கூறிவிடுகிறார் ராதிகா. இதனால் அவமானப்படும் ஈஸ்வரி அங்கிருந்து வெளியேறுகிறார். இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய கர்ப்பம் குறித்து குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அங்கிருந்து இருவரும் வெளியேற வேண்டும் என்று ராதிகா கோபியிடம் கூறுகிறார்.
கோபியிடம் ராதிகா கேள்வி: ஆனால் தன்னுடைய மகன்கள் முன்னிலையில் இந்த விஷயத்தை கூறுவதற்கு தொடர்ந்து அவமானமாக உணர்கிறார் கோபி. ஒரு கட்டத்தில் தொடர்ந்து ராதிகா திட்டி தீர்க்கும் சூழலில் அன்றைய தினம் மாலை இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் கூறுவதாக கூறி வேலைக்கு சென்று விடுகிறார். தொடர்ந்து மாலையில் வீட்டிற்கு வரும் கோபி, மேலே அறைக்கு சென்று ராதிகாவை எதிர்கொள்ள தயங்கி ஹாலிலேயே தன்னுடைய அம்மா பக்கத்திலேயே உட்கார்ந்து விடுகிறார். இதையடுத்து தண்ணீர் எடுப்பதற்காக கீழே வரும் ராதிகா, கோபியை பார்த்து ஏன் மேலே வரவில்லை என்று கேட்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.
தீர்க்கமாக செயல்படும் பாக்கியா: தொடர்ந்து தற்போது அனைவரிடமும் இந்த விவகாரத்தை கூறும்படி ராதிகா வலியுறுத்துகிறார். இதைக் கேட்கும் ஈஸ்வரி எந்த விஷயத்தையும் குடும்பத்தினரிடம் கூற முடியாது, உன்னால் இயன்றதை பார்த்துக் கொள் என்று ராதிகாவிடம் கூறுகிறார், இதனால் கோபமடையும் ராதிகா, தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரையும் ஹாலில் ஒன்றிணைக்கிறார். தொடர்ந்து கோபியிடம் தன்னுடைய கர்ப்பம் குறித்து கூறுமாறு அவர் அழுத்தத்துடன் வலியுறுத்துகிறார். ஆனால் கோபி தொடர்ந்து தயங்கிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் இந்த விஷயத்தை மூன்றாம் நபர் போல வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் பாக்கியா. தீர்க்கமான பார்வையுடன் அவரது நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
விஷயத்தை போட்டுடைக்கும் பாக்கியா: இதை பார்க்கும் கோபி மேலும் அவமானமாக ஃபீல் செய்கிறார். இந்நிலையில் தொடர்ந்து ராதிகா விஷயத்தை கூறுமாறு கூற ராமமூர்த்தி, செழியன், எழில் உள்ளிட்ட அனைவரும் என்ன விஷயம் என்று தொடர்ந்து கேட்கின்றனர். ஆனால் ஈஸ்வரியோ ஒன்றும் இல்லை உங்கள் வேலைகளை போய் பாருங்கள் என்று கூறி விடுகிறார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் பாக்கியா. அங்கு வந்து ஒரு சிறிய விஷயத்தை கூறுவதற்கு ஏன் இவ்வளவு தயங்க வேண்டும் என்று கேட்டுவிட்டு கோபியையும் ஈஸ்வரியையும் பார்க்கிறார். அவர்கள் இருவரும் தயக்கத்துடனும் அதிர்ச்சியுடனும் பாக்கியாவை பார்க்க, ஒன்றுமில்லை உங்கள் அப்பா மீண்டும் அப்பாவாக போகிறார் என்று விஷயத்தை போட்டுடைக்கிறார். இதை கேட்கும் ஈஸ்வரி, கோபி உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











