Baakiyalakshmi: பாயாசம் சமைச்ச கைக்கு வைரத்தில் வளையல்.. பாக்கியாவை பாராட்டித் தள்ளிய பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக அமைந்து வருகிறது. இந்த சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படும் சூழலில் தற்போது பழனிச்சாமிக்கும் பாக்யாவிற்கும் திருமணம் செய்து வைக்க பழனிசாமியின் அம்மா முடிவெடுத்து அதற்கான அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பழனிச்சாமியை விட பாக்கியா, இரு வயது இளையவர் என்பதை கேட்டு தெரிந்து கொள்கிறார் பழனிச்சாமியின் அம்மா. மேலும் தன்னுடைய மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வீட்டிற்கு வரும் மகள்களிடம் இது குறித்து பேசுகிறார். மூத்த மகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்த சூழலில், இரண்டாவது மகள் பேத்தி இருக்கும் பாக்கியலட்சுமிக்கு எப்படி தன்னுடைய அண்ணனை திருமணம் செய்து வைப்பது என்று கேள்வி எழுப்புகிறார். ஆனாலும் தன்னுடைய முடிவில் பழனிச்சாமியின் அம்மா உறுதியாக இருப்பதை பார்க்க முடிகிறது.

Vijay TV s Baakiyalakshmi serial today 12th April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பழனிச்சாமியின் பிறந்தநாள் கொண்டாட்டமாக அமைந்தது. பழனிசாமியின் 45வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அவரது அம்மா முடிவெடுத்து தன்னுடைய மகள்கள், உறவினர்கள் என அனைவரையும் அழைக்கிறார். இந்த பிறந்த நாளில் சமையல் கான்ட்ராக்டை பாக்கியா மேற்கொண்ட நிலையில் அவரும் அவரது குடும்பத்தினர்களும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பழனிச்சாமி தான் முக்கியமான நபர் என்றாலும் அவரது அக்கா மகன் விமல் நிகழ்ச்சியின் சென்டர் ஆஃப் அட்ரக்ஷனாக அமைகிறார்.

இனியா -விமல் காதல்?: இனியாவின் விருப்பத்திற்கு இணங்க நிகழ்ச்சியில் ஸ்பீக்கரில் பாட்டு போடப்படுகிறது. இந்த பாட்டிற்கு விமல் சிறப்பாக டான்ஸ் போடுகிறார். இதனால் இனியா உள்ளிட்ட அனைவரும் இம்ப்ரஸ் ஆகின்றனர். இனியாவிற்கு விமல் மீது ஒரு சாப்ட் கார்னர் உருவாகிறது. இதே போல இனியாவை முதல் முறையாக பார்க்கும் விமலுக்கும் அவர் மீது லைட் எரிகிறது. இந்நிலையில் அவர் தானே தேடிச் சென்று இனியாவிடம் பேசுகிறார். அவரது நம்பரை கேட்கிறார். ஆனால் இனியாவோ நம்பரை கொடுக்க மறுத்து விடுகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மா கூறிய விஷயத்தை பாக்கியாவிடம் பேசலாமா என்று பழனிச்சாமியின் மூத்த சகோதரி கேட்கிறார்.

கேக் வெட்ட கூச்சம்: ஆனால் இளைய சகோதரி தற்போது வேண்டாம் என்று மறுத்து விடுகிறார். இந்நிலையில் விருந்தினர்கள் அனைவரையும் ஓடி ஓடி உபசரிக்கிறார் பாக்கியா. அவரது சமையல் மிகப் பெரிய பாராட்டுக்களை பெறுகிறது. பழனிச்சாமிக்கு பிடித்தமான ஃபிளேவரில் கேக் ஆர்டர் செய்து அதையும் அழகாக காட்சிப்படுத்துகிறார். தன்னுடைய பிறந்தநாளை இந்த வயதில் கொண்டாடுவது தனக்கு கூச்சத்தை ஏற்படுத்துவதாக பழனிச்சாமி கூறியநிலையில், அதைப் போகும் வகையில் பாக்கியா அவரை சமாதானப்படுத்தி கேக்கை வெட்ட வைக்கிறார். இது பழனிச்சாமியின் அம்மாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

பாயாசம் செய்த கைக்கு வைரவளையல்: அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அனைவருக்கும் பாயாசம் பறிமாறுகிறார் பாக்கியா. அதை அனைவரும் சப்புக்கொட்டி சாப்பிடுகின்றனர். பழனிச்சாமி இதை செய்த கைகளுக்கு தங்கத்தால் இல்லை வைரத்தால் வளையல் போட வேண்டும் என்று பாராட்டுகிறார். இதை அனைவரும் உற்சாகமாக மற்றும் மகிழ்ச்சியாக பார்க்கின்றனர். இந்நிலையில் அனைவரும் இணைந்து அடுத்தடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். அப்போது பாக்கியா இதை தூரமாக நின்றபடி பார்க்கிறார். அவரை அழைக்கும் பழனிச்சாமி, தன் அருகில் நிற்கவைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

என்ன முடிவெடுப்பார் ஈஸ்வரி?: இவர்களின் ஜோடி பொருத்தம் மிகப் பிரமாதமாக இருப்பதாக பழனிச்சாமியின் அம்மா மகள்களிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. பழனிச்சாமி மற்றும் பாக்கியாவிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள அவர், தொடர்ந்து இதை எப்படி ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியிடம் பேசுவார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தன்னுடைய மகன் கோபிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் ஈஸ்வரி, இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான முடிவை தெரிவிப்பார் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X