Baakiyalakshmi serial: அமிர்தாவை அழவைத்த ஈஸ்வரி.. ஆத்திரத்தில் கேள்வி கேட்ட எழில்!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவை திட்டிய ஈஸ்வரியிடம் எழில் கோபத்துடன் கேள்வி கேட்பதாக காணப்பட்டது. ஜெனி மீண்டும் கர்ப்பமான நிலையில், அமிர்தாவிடம் குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து தொடர்ந்து வார்த்தைகளால் வதைக்கிறார் ஈஸ்வரி.

அமிர்தாவின் முந்தைய வாழ்க்கை, முன்னாள் கணவன் கணேஷ் உள்ளிட்டவை குறித்தும் ஈஸ்வரி சுட்டிக்காட்டி பேசுகிறார். இதனால் அமிர்தா உடைந்துப்போய் அழுகிறார். இதையடுத்து பாக்கியா அமிர்தாவை தேற்றுவதாக அமைகிறது. இதனிடையே, எழில் வாழ்க்கையில் தான் வந்திருக்கவே கூடாது என்று அமிர்தா கண்ணீர் விட்டு அழுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவை குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பி குத்திக் காட்டி பேசுகிறார் ஈஸ்வரி. தன்னுடைய முதல் கணவன் இறந்ததாக நினைத்துக் கொண்டு எழிலை அமிர்தா திருமணம் செய்தநிலையில், முன்னாள் கணவன் கணேஷ் மீண்டும் வந்து பிரச்சினை செய்ததை சுட்டிக் காட்டுகிறார். மீண்டும் கணேஷ் வந்து பிரச்சினை செய்தால் என்ன செய்வாய், எழிலுடன் வாழ்வதற்கு தேவையான காரணம் வேண்டாமா, குழந்தை பெற்றுக் கொள்வதுதான் அதற்கு ஒரே வழி என்றெல்லாம் அமிர்தாவை காயப்படுத்தும் வகையில் திட்டுகிறார் ஈஸ்வரி.

மனமுடைந்து அழுத அமிர்தா: இதனால் அமிர்தா மனமுடைந்து அழுகிறார். இதையடுத்து பாக்கியா மற்றும் ராமமூர்த்தி இருவரும் அமிர்தாவை தேற்றி அங்கிருந்து அனுப்பி வைக்கின்றனர். இதையடுத்து தன்னுடைய அறையில் சென்று அமிர்தா அழுதுக் கொண்டிருக்கிறார். அவரை தேற்றும்வகையில் பாக்கியா சமாதானப்படுத்துகிறார். இதையடுத்து தான் எழில் வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது என்றும், தன்னால் அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தானும் தன்னுடைய மகளும் இந்த வீட்டை விட்டு, எழிலைவிட்டு சென்றுவிட்டால் அவரது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் அமிர்தா அழுகையினூடே கூறுகிறார்.

அமிர்தாவை தேற்றிய பாக்கியா: இதையடுத்து அவரை தேற்றும் பாக்கியா, இனிமேல் பாட்டி இதுபோல பேசாத வகையில் தான் அவரிடம் கண்டிப்புடன் பேசுவதாக கூறுகிறார். இதனிடையே, கோயிலுக்கு செல்லும் அமிர்தா, அங்கு எழிலை வரவழைத்து தானும் நிலாவும் தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறுகிறார். இதனால் சந்தேகம் கொள்ளும் எழில், என்ன நடந்தது என்று அடுத்தடுத்து கேள்வி எழுப்ப, தயக்கத்துடன் நடந்ததை கூறுகிறார் அமிர்தா. தொடர்ந்து இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று உறுதியளிக்கக் கேட்கிறார். எழிலும் தான் எதையும் கோபத்துடன் கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டு அமிர்தாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

பாட்டியிடம் எழில் ஆத்திரம்: வீட்டிற்கு வரும் எழில் தன்னுடைய பாட்டியை அழைத்து அமிர்தாவிடம் என்ன பேசினீர்கள் என்று கோபத்துடன் கேட்கிறார். இதையடுத்து அமிர்தா எழிலிடம் அனைத்தையும் பற்ற வைத்து விட்டாளா என்று ஈஸ்வரி கேள்வி எழுப்புகிறார். தான் அப்படித்தான் கேட்பேன் என்றும் உறுதியுடன் கூறுகிறார். ஏன் பழைய கதையை சொல்லி அமிர்தாவை குத்திக் காட்டினீர்கள் என்று எழில் கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து தான் அத்தையிடம் பேசுவதாக பாக்கியா சமாதானப்படுத்துகிறார். ஆனாலும் விடாப்பிடியாக ஈஸ்வரி சண்டையை தொடர்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து எழிலின் குழந்தை குறித்து கேள்வி கேட்பதாக ஈஸ்வரி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X