Baakiyalakshmi serial: பாட்டி வெளிய வருவாங்கன்னு நம்புவோம்.. கண்டிப்பா நடக்கும்.. பாக்கியா உறுதி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா மற்றும் கமலா இருவரும் வெளியில் சென்ற நிலையில் பள்ளியில் இருந்து சீக்கிரத்திலேயே வீட்டிற்கு வரும் மயூ வீட்டு வாசலில் நின்றபடி அவர்களுக்காக காத்திருக்கிறார். இதனிடையே அவரை பார்க்கும் பாக்கியா வீட்டிற்கு வந்து காத்திருக்குமாறு கூறுகிறார்.

ஆனால் இதை மறுக்கும் மயூ பார்க்கிற்கு செல்வதாக கூறுகிறார். அங்கு மயூவிற்கு ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு வரும் பாக்கியா, அவருக்கு பாதுகாப்பாக உடன் இருக்கிறார். இதனிடையே, தன்னுடைய அம்மா ராதிகாவை ஈஸ்வரி பாட்டி தள்ளி விடவில்லை என்று மயூ கூற, இதனால் பாக்கியா மிகுந்த அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்பட்டது. இன்றைய எபிசோடில் ராதிகா மற்றும் அவரது அம்மா கமலா இருவரும் வெளியில் சென்றிருந்த நிலையில் பள்ளியிலிருந்து மீட்டிங் காரணமாக வீட்டிற்கு மயூ சீக்கிரமே வந்து அவர்களுக்காக வீட்டு வாசலில் காத்திருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத சூழலில் சாவியும் இல்லாமல் அவர் வாசலில் காத்திருப்பதை பார்க்கும் பாக்கியா, தன்னுடைய வீட்டிற்கு வந்து காத்திருக்குமாறு அழைக்கிறார். ஆனால் வீட்டுக்கு வர மறுத்து தான் பார்க்கில் சென்று காத்திருப்பதாக மயூ கூறிவிட்டு செல்கிறார்.

மயூ கூறிய உண்மை: இதையடுத்து மயூ பார்க்கில் தனியாக இருப்பார் என்ற கரிசனத்தில் பாக்கியா அவரது வீட்டுக்கு சென்று ஸ்நாக்ஸ் எடுத்துக்கொண்டு பார்க்கிற்கு வருகிறார். அங்கு மயுவிற்கு ஸ்நாக்ஸை கொடுக்கிறார். தொடர்ந்து பாக்கியா கலக்கத்துடன் இருப்பதை பார்க்கும் மயூ, நீங்கள் ஈஸ்வரி பாட்டியை நினைத்து கவலையில் இருக்கிறீர்களா என்று கேட்கிறார். தொடர்ந்து ஈஸ்வரி பாட்டி இப்படி எல்லாம் செய்யக்கூடியவர் இல்லை என்று பாக்கியா கண்கலங்கியபடி கூறுகிறார். இதை பார்க்கும் மயூ, நான் உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்று பாக்கியாவிடம் ஈஸ்வரி பாட்டி தன்னுடைய அம்மா ராதிகாவை தள்ளிவிடவில்லை என்றும் பிளவர் வாஸ் தடுக்கிதான் அம்மா கீழே விழுந்தார் என்றும் கூறுகிறார்.

பாக்கியாவை திட்டிய கமலா: இதைத்தான் பார்த்ததாகவும் ஆனால் அனைவரும் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்ததால் தான் இதை வெளியில் கூறவில்லை என்றும் பாக்கியாவிடம் மயூ கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் பாக்கியா, மயூவை கட்டி அணைத்து நன்றி கூறுகிறார். தொடர்ந்து மயூவை தேடி பார்க்கிற்கு வரும் கமலா மற்றும் ராதிகா, அவர் பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபமடைகின்றனர். கமலா மயூவை திட்டுகிறார். தொடர்ந்து மயூவை கடத்திக் கொண்டு செல்வதற்காக வந்தாயா என்று பாக்கியாவை பார்த்து திட்டுகிறார். மயூ கையில் இருந்த ஸ்நாக்சையும் தட்டி விடுகிறார். பாக்கியா அதில் எதையாவது கலந்து இருப்பார் என்று கண்டபடி பேசுகிறார்.

மயூவின் சாட்சி: இதனால் பாக்கியா ஆத்திரமடைந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். இதனிடையே மயூ கூறிய விஷயத்தை பழனிச்சாமி உதவியுடன் தங்களின் வழக்கறிஞரிடம் சென்று சொல்கிறார். தொடர்ந்து மயூ இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் அப்படியே கூறிவிட்டால் ஈஸ்வரியை வெளியில் எடுப்பது மிகவும் எளிது என்று வழக்கறிஞர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அதற்கு பாக்கியா சின்ன குழந்தையை எப்படி நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியும் என்று கேட்கிறார். மயூவின் சாட்சி மிகவும் முக்கியமானனது என்று வழக்கறிஞர் கூறுகிறார்.

ராமமூர்த்தி வேதனை: இதையடுத்து வீட்டிற்கு வரும் பாக்கியாவிடம் ராமமூர்த்தி மிகவும் வேதனையுடன் பேசுகிறார். தன்னுடைய மனைவிக்காக தான் எதையும் செய்வேன் என்றும் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்துவிடலாம் என்று கூறும் ராமமூர்த்தி, தான் ராதிகாவிடமே சென்று கேசை வாபஸ் வாங்க கேட்கிறேன் என்று கிளம்புகிறார். அவரை தடுக்கும் பாக்கியா நாளைய தினம் அத்தை கண்டிப்பாக ரிலீசாவார் என்று கூறுகிறார். தொடர்ந்து எழிலிடமும் பாட்டி கண்டிப்பாக வீட்டுக்கு வந்து விடுவார் என்று பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X