Baakiyalakshmi serial: ஈஸ்வரியை பார்க்க ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்கியா.. முகம்சுளித்த கமலா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து டிஆர்பியில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்துள்ள இந்த சீரியல் தொடர்ந்து சிறப்பான அடுத்தடுத்த காட்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பாக்கியா அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை இந்த சீரியல் காட்சிப்படுத்தியுள்ளது.

தன்னுடைய மாமனார், மாமியார், மகள் இனியா, மருமகள்கள், மகன் எழில் என அனைவரது தேவைகளையும் பார்த்து பார்த்து இன்றைய தினம் பாக்கியா செய்வதாக காணப்பட்டது. முன்னதாக ரெஸ்டாரண்டில் காணப்படும் சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டு சிறப்பாக ரெஸ்டாரண்டையும் நடத்தி வருகிறார். இன்றைய எபிசோடில் ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்த காட்சிகள் ஒளிபரப்பாகின.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த வேலைகளை சிறப்பாக முடிக்கிறார் பாக்கியா. தொடர்ந்து தன்னுடைய மனைவியை பார்க்க ராமமூர்த்தி விரும்பிய நிலையில், அவரை அழைத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அப்படி செல்லும்போது ஈஸ்வரிக்கு இரவு உணவு எடுத்துக் கொண்டு செல்கிறார் பாக்கியா. அவரும் அதை ரசித்து ருசித்து சாப்பிடும் நிலையில் பாக்கியா மற்றும் ராமமூர்த்தியின் வரவை கமலா மற்றும் ராதிகா விரும்பாத நிலை காணப்படுகிறது.

கோபத்தில் ராதிகா: இவர்கள் எதற்காக நம் வீட்டிற்கு வருகிறார்கள் என்று கமலா, ராதிகாவிடம் கடுப்புடன் கூறுவதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் அங்கு தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு கோபி வருகிறார் .வரும்போது கிளவுட் கிச்சனிலிருந்து தன்னுடைய அம்மாவிற்கு சாப்பாடு கொண்டு வருகிறார். ஆனால் அதற்கான தேவை ஏற்படாத சூழல் காணப்படுகிறது. முன்னதாக பாக்கியாவின் சாப்பாட்டை ஈஸ்வரி சாப்பிட்டு முடிக்கிறார். கோபியும் அவர்களுடன் இணைந்து சிரித்து பேசுவதை பார்க்கும் ராதிகாவிற்கு மேலும் கடுப்பு அதிகமாகிறது. முன்னதாக தன்னுடைய மாமியாரை பார்த்து நலம் விசாரிக்கும் ராதிகாவை கோபி சந்தேகத்துடன் பார்ப்பதாக காணப்பட்டது.

ராதிகா புலம்பல்: இதையடுத்து தன்னுடைய அம்மாவிடம் அவர் புலம்புகிறார்.. தான் ஈஸ்வரியை என்ன செய்து விடப் போகிறேன், எதற்காக கோபி அப்படி நடந்து கொண்டார் என்று பலவாறாக கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து கமலாவும் கோபி மிகவும் மாறிவிட்டதாகவும் ஈஸ்வரி அவரை மாற்றி விட்டதாகவும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து இனியாவின் ப்ராஜெக்ட் வேலைகளுக்காக உடனிருந்து உதவி செய்கிறார் பாக்கியா. தொடர்ந்து எழிலும் வருகிறார். தன்னுடைய வேலைகளை தன்னால் சரிவர செய்ய முடியவில்லை என்று அவர் கூறுகிறார். இதற்கு என்ன காரணம் என்று தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஒரு வார காலத்தில் தான் ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார்.

குழப்பத்தில் எழில்: இதற்கு சமாதானமாக பேசும் பாக்கியா, எழிலுக்கு மெண்டல் பிளாக் ஏற்பபட்டு இருப்பதாகவும், அவர் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும்போதும் இதே போன்ற சூழ்நிலையில் அவர் எதிர்கொண்டதாகவும் பலவாறாக கூறுகிறார். அப்போது இதிலிருந்து வெளிவரும் வகையில் தன்னுடைய மனதை ஒருமுகப்படுத்தி எழில் படித்ததாகவும் அந்த செமஸ்டரில் அதிக மார்க்குகளை வாங்கியதையும் பாக்கியா சுட்டிக்காட்டுகிறார். மேலும் எழிலுக்கு அவர் காபி போட்டு கொடுக்கும் நிலையில் தன்னுடைய வேலைகளை மீண்டும் உற்சாகமாக எழில் மேற்கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

அசத்தும் பாக்கியா: இவ்வாறாக தன்னுடைய மாமியார், மாமனார், மகன்கள், மகள், மருமகள்கள் என அனைவரது தேவைகளையும் சரிவர புரிந்து கொண்டு செயல்படும் பெண்ணாக பாக்கியா தொடர்ந்து காட்டப்படுகிறார். மேலும் ரெஸ்டாரண்டிலும் அடுத்தடுத்த சவால்களை சந்திக்கும் பெண்ணாகவும் அவர் சித்தரிக்கப்படுவது ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. பாக்கியாவை திருமணம் செய்துக் கொள்ள பழனிச்சாமி விரும்பும் சூழலில், இதுகுறித்து தெரியவந்தால் பாக்கியா எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X