Baakiyalakshmi serial: மகளின் மறு திருமணத்திற்கு திட்டமிடும் ஜோசப்.. ஆத்திரப்படும் ஜெனி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் முக்கியமான சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் அடுத்தடுத்து எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அம்மாவாக தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் பாக்கியா. எழில் -அமிர்தா வாழ்க்கையில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளை மிகுந்த போராட்டத்திற்கு பிறகு பாக்கியா, எழில், பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் இணைந்து தீர்த்து வைத்தனர். அமிர்தாவை கடத்திய கணேஷின் முயற்சியை இவர்கள் முறியடித்த நிலையில் தற்போது கணேஷ் சிறையில் உள்ளார்.

இதையடுத்து மாலினியால் செழியன் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து கோபித்துக் கொண்டு தன்னுடைய குழந்தையுடன் அப்பா வீட்டிற்கு சென்றார் ஜெனி. இதையடுத்து அவரது அப்பா ஜோசப்பின் வற்புறுத்தலாலும் குழப்பத்தாலும் ஜெனி விவாகரத்திற்கு அப்ளை செய்துள்ளார். அடுத்தடுத்து இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தி வருகிறது. இதனால் விவாகரத்து தள்ளிப் போகிறது. இதனிடையே பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு குழந்தையுடன் வந்த ஜெனியை, குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர்.

Vijay TV s Baakiyalakshmi serial today 12th March 2024 episode -Joseph planned for Jeni s remarriage

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற்று வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய கனவையும் துரத்திக் கொண்டு தன்னுடைய குடும்பத்தினரையும் பராமரித்துக் கொண்டு வருகிறார் பாக்கியா. தன்னுடைய மகன்கள் எழில் மற்றும் செழியனின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் அவர்களை உடனிருந்து வழிநடத்தி அவர்களை பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கவும் போராடி வருகிறார். இதனிடையே கோபியின் குடைச்சலையும் சமாளித்து அவர் வெற்றிநடை போட்டு வருகிறார். தொடர்ந்து பாக்கியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக உள்ளார் கோபி.

பாக்கியாவின் வளர்ச்சி: மசாலா பிசினசில் துவங்கிய பாக்கியாவின் கேரியர் அடுத்தடுத்து கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட் என வளர்ந்து தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவிலும் அமைச்சரை வரவிடாமல் செய்திருந்தார் கோபி. ஆனால் கடைசி நேரத்தில் அவரது மூக்கறுபடும் வகையில், திறப்பு விழாவிற்கு அமைச்சர் வந்தது பாக்கியாவின் கடைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே தன்னுடைய மாமியார் உள்ளிட்ட அனைவரையும் தன்னுடைய ரெஸ்டாரெண்ட் திறப்பினால் கவர்ந்துள்ளார் பாக்கியா. ஈஸ்வரியின் பெயரை சொல்லி அமைச்சர் பேசியது அவருக்கு மிகப்பெரிய அளவில் கௌரவத்தை கொடுத்துள்ளது.

கோபியிடம் ராதிகா சண்டை: இதனிடையே இந்த திறப்பு விழாவிற்கு கோபி சென்றது குறித்து ராதிகா அவரிடம் கேட்க, அவர் வழக்கம் போல மழுப்ப முன்னதாக இனியா மூலம் கிடைத்த புகைப்படங்களை ஆதாரமாக ராதிகா காட்டுகிறார். தொடர்ந்து பொய் சொல்ல வேண்டாம் என்று கோபியை அடித்து உதைக்கிறார். இதுகுறித்து கேள்வி கேட்கும் மாமியாரிடமும் ராதிகா அதிரடியாக பேசுகிறார். இதனால் ஈஸ்வரியின் கோபம் உச்சத்திற்கு செல்கிறது. இந்த சீரியலின் ப்ரமோ மூலம் இதை அறிய முடிகிறது.

ஜெனி மீது கோபப்படும் ஜோசப்: முன்னதாக ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு குழந்தையுடன் வந்த ஜெனியை பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். குழந்தையை செழியன், பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கொஞ்சி மகிழ்ந்த நிலையில், ஜெனியை செழியனுடன் அவரது வீட்டில் டிராப் செய்ய அனுப்பி வைக்கிறார் தாத்தா. இதை மறுத்தாலும் தாத்தாவை மீற முடியாமல் செழியனுடன் ஜெனி செல்கிறார். வழியில் செழியன் பேச முயல, அதை நிராகரிக்கிறார். இதனிடையே வீட்டில் ஜெனியை அவர் டிராப் செய்ததை அடுத்து ஜெனியின் அப்பா கோபப்படுகிறார்.

ஜெனியின் மறுமணத்திற்கு திட்டம்: உடனடியாக செழியனிடம் இருந்து விவாகரத்து பெற்று ஜெனிக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால் இதை ஜெனி மறுக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் செழியன் ஏற்படுத்திய காயத்தையே தன்னால் மறக்க முடியாத நிலையில் அடுத்தக் கல்யாணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் தான் இல்லை என்று கண்டிப்பாக கூறுகிறார். இதை கேட்டு ஜோசப், அதெல்லாம் காலப்போக்கில் சரியாகி விடும் என்று கூறுகிறார். இதையடுத்து ஆத்திரம் மற்றும் கோபத்துடன் தன்னுடைய அறைக்கு செல்கிறார் ஜெனி. இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X