Baakiyalakshmi: தட்டி வச்சிருக்கனும்.. பாக்கியாவிற்கு ராதிகா கொடுத்த அட்வைஸ்.. கொந்தளித்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்வதாக அமைந்திருந்தது. பாக்கியலட்சுமி ரெஸ்டாரெண்டில் கெட்டுப்போன சிக்கனை கலந்தது தொடர்பாக முன்னதாக பாக்கியா கோபி மீது வழக்கு பதிவு செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்த நிலையில், இதையடுத்து பாக்கியாவை ஈஸ்வரி திட்டுவதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இந்நிலையில் ஈஸ்வரி தொடர்ந்து திட்டினாலும் பாக்கியா மௌனம் சாதிப்பது ஏன் என்று ராதிகா கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. திருமணமாகி வந்த புதிதிலேயே ஈஸ்வரியை பாக்கியா தட்டி வைத்திருக்க வேண்டும் என்று ராதிகா கூறுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது.

television baakiyalakshmi serial vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்து எபிசோடுகள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கட்டிப் போடும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளை கொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பிஐ பெற்று வரும் சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இதுவரை 1300க்கும் மேற்பட்ட எபிசோட்களை வெற்றிகரமாக கடந்துள்ள பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி இறந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது

television baakiyalakshmi serial vijay tv

கோபியின் மாற்றம்: இதையடுத்து சீரியல் நிறைவடைய உள்ளதாகவும் அதற்காகவே அந்த கேரக்டர் நிறைவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இத்தனை மாதங்களை கடந்தும் சீரியல் இன்னும் நிறைவு கட்டத்தை எட்டவில்லை. சேனலின் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பியை பெற்று வருவதால் இந்த சீரியலை முடிக்க சேனல் தரப்பு தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாக்கியாவிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த கோபி, இக்கட்டான சூழலில் பாக்கியாவால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைக்கிறார். இதனால் பாக்கியா மீது அவர் கொண்ட வஞ்சம் முற்றிலும் விலகுகிறது.

television baakiyalakshmi serial vijay tv

வழக்கை வாபஸ் வாங்கும் பாக்கியா: இதையடுத்து பாக்கியாவின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவராக கோபி மாறுகிறார். இதையடுத்து பாக்கியாவையும் கோபியையும் மீண்டும் இணைத்து வைக்க அவரது அம்மா விருப்பம் கொள்வதாக அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருந்தன. ஆனால் இதில் சிறிதும் விருப்பமில்லாமல் பாக்கியா காணப்படுகிறார். பிரிந்திருந்த ராதிகா மற்றும் கோபியை மீண்டும் பாக்கியாவே சேர்த்து வைப்பதாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக கோபி மீது பாக்கியா கொடுத்திருந்த புகாரின் விசாரணை நீதிமன்றத்திற்கு வருகிறது. இதுகுறித்த பிரமோ நேற்றைய தினம் வெளியான சூழலில் இந்த வழக்கை பாக்கியா வாபஸ் வாங்குவதாகவும் இதனால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாவதாகவும் காணப்படுகிறது.

television baakiyalakshmi serial vijay tv

ராதிகாவின் கேள்வி: அவர் நல்லதே செய்த நிலையிலும் ஈஸ்வரி அவரை திட்டுவதாக ப்ரோமோவில் காணப்பட்டது. கோபியை தேவையில்லாமல் அலைகழித்ததாக பாக்யாவை ஈஸ்வரி திட்டுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா எவ்வளவுதான் நல்லது செய்தாலும் அவரது மாமியார் அவரை தொடர்ந்து திட்டுவது குறித்து ராதிகா கேள்வி எழுப்புவதாக காணப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் பாக்கியா, தன்னுடைய மகன் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ற பயத்தாலேயே ஈஸ்வரி தன்னைத் திட்டியதாக கூறுகிறார். இதை ஏற்காத ராதிகா, தான் மட்டும் பாக்கியா போல திருமணம் செய்து கொண்டு வந்திருந்தால் அப்போதே ஈஸ்வரியை தட்டி வைத்திருப்பேன் என்றும் இவ்வளவு தூரம் வளர விட்டிருக்க மாட்டேன் என்றும் கூறுகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

கோபத்தில் கொந்தளித்த ஈஸ்வரி: இதை மறைந்திருந்து கேட்கும் ஈஸ்வரி கடுமையான கோபத்திற்கு உள்ளாகிறார். தொடர்ந்து பாக்கியா வீட்டை விட்டு ரெஸ்டாரண்டிற்கு கிளம்பியவுடன் ராதிகாவிடம் ஈஸ்வரி இது குறித்து சண்டையிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஆனால் அவரை அடக்கும் ராதிகா அவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டி காட்டுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X