Baakiyalakshmi serial: ரெண்டு பேரும் கெட்அவுட்.. ராதிகா -கமலாவிடம் மல்லுக்கு நின்ற கோபி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கோபி, ராதிகா மற்றும் கமலாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
தொடர்ந்து கோபியிடம் சண்டை பிடிக்கும் கமலா, தாங்கள் வீட்டை விட்டு செல்ல முடியாது என்று உறுதியுடன் கூறுவதாகவும் காணப்பட்டது. இதனிடையே, கொலை குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் ஈஸ்வரிக்கு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அதற்காக பாக்கியா மற்றும் ராதிகா குடும்பத்தினர் நீதிமன்றத்தில் காத்திருப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பாகவே காணப்பட்டது. ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக அவரது அம்மா கமலா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஈஸ்வரியை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அவரது வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்ற காவலில் அவரை வைக்க உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் இன்றைய எபிசோடில் அனைவரும் இதற்காக காத்திருக்கின்றனர்.
கோபி ஆத்திரம்: இன்றைய எபிசோடில் வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கோபி, தன்னுடைய அம்மாவின் நிலைக்காக ராதிகா மற்றும் கமலாவிடம் தொடர்ந்து சண்டை பிடிக்கிறார். தன்னுடைய அம்மா மகாராணி போல இருந்ததாகவும் அவரை இப்படி சிறையில் வைத்து வேதனைப்படுத்துவதாகவும் அவர் ராதிகா மற்றும் கமலாவை குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து பேசும் ராதிகா, தாங்கள் கேசை வாபஸ் வாங்க வேண்டுமா என்று கோபத்துடன் கேட்க, அதற்கு அவசியம் இல்லை என்னுடைய அம்மாவை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன், ஆனால் நீயும் உன்னுடைய அம்மாவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்பதாக கோபி கோபத்துடன் கூறுகிறார்.
ராமமூர்த்தி வருத்தம்: இதையடுத்து வீட்டை விட்டு வெளியேற முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து கமலா அனைவரையும் அழைத்துக் கொண்டு அறைக்கு செல்வதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் மறுநாள் காலையில் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்படும் பாக்கியா, தன்னுடைய மாமியார் வீடு திரும்ப வேண்டும் என மனமுருகி பிரார்த்திக்கிறார். இதனிடையே, கோர்ட்டுக்கு கிளம்ப ராமமூர்த்தி மறுக்கிறார். அங்கு வந்து ஈஸ்வரி தன்னை பார்த்து இப்படி தன்னை கைவிட்டு விட்டீர்களே என்று கேட்டால் தான் அங்கேயே செத்து விடுவேன் என்று ராமமூர்த்தி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
குழப்பத்தில் ராதிகா: ஆனால் அவர் கண்டிப்பாக கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று பாக்கியா கூறுவதாக அமைகிறது. தனக்கு ஒரு சிறிய வேலை இருப்பதாகவும் அதை முடித்துக்கொண்டு தான் வருவதாகவும் கூறிவிட்டு பாக்கியா கிளம்புகிறார். இதனிடையே கோர்ட்டுக்கு கிளம்ப ராதிகாவும் மறுக்கிறார். தனக்கு மிகவும் குழப்பமாக இருப்பதாகவும் ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றியதுடன் தாங்கள் நின்றிருக்க வேண்டும் என்றும் ராதிகா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே இவ்வளவு அப்பாவித்தனமாக இருக்க வேண்டாம் என்று ராதிகாவிடம் கூறும் கமலா, இப்படி இருந்தால் ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் ராதிகாவையும் கொன்று விடுவார்கள் என்று கமலா கூறுவதாகவும் காணப்பட்டது.
நீதிமன்றத்திற்கு வராத பாக்கியா: இதனிடையே, நீதிமன்றத்திற்கு கோபி வந்ததை பார்த்து ராமமூர்த்தி மிகுந்த ஆத்திரப்படுகிறார். அடுத்த கேஸ் ஈஸ்வரியுடையது என்ற நிலையிலும் பாக்கியா, நீதிமன்றத்திற்கு வராதது குறித்து செல்வி கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து அம்மா ஒரு விஷயத்தை செய்கிறார் என்றால் அதற்கு கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும் என்று எழில் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











