Baakiyalakshmi serial: கோபி சுட்ட தோசை.. கதிகலங்கிய ஈஸ்வரி.. புலம்பிய ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி தன்னை கொலையாளியை பார்ப்பது போல பார்த்ததை நினைத்து வேதனைப்படுகிறார் ராதிகா. தன்னை அப்படி கொலையாளியை போல பார்த்துவிட்டு பாக்கியாவிடம் கோபி சிரித்து பேசியதை நினைத்தும் அவருக்கு வருத்தம் ஏற்படுகிறது. இது குறித்து தன்னுடைய அம்மாவிடம் புலம்பி தீர்க்கிறார்.
கோபியின் மாற்றத்திற்கு அவரது அம்மா தான் காரணம் என்று கமலா குற்றம் சாட்டி பேசுகிறார். இந்நிலையில் அங்கு வரும் ஈஸ்வரி, ராதிகா மீது கோபியின் கோபம் தொடரும் என்றும் ஒரு கட்டத்தில் தன்னுடன் ராதிகாவை விட்டுவிட்டு பாக்கியா வீட்டிற்கு கோபி வந்து விடுவான் என்றும் கூறுகிறார். அவரது இந்த பேச்சால் ராதிகா மற்றும் கமலா இருவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் ரசிகர்களை கவர்ந்த சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்துள்ளது, இன்றைய தினம் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு பக்கத்தில் பழனிச்சாமி துவங்கியுள்ள கபே துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக காண்பிக்கப்பட்டது. மிகவும் எளிமையாக வீட்டில் உள்ளவர்களை மட்டுமே அழைத்து தன்னுடைய கபேவை துவங்கும் முடிவில் பழனிச்சாமி எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காணப்படுகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய அம்மா மற்றும் அக்காவை அழைத்து வருவதற்காக செல்கிறார்.
கபே திறந்த பழனிச்சாமி: அப்போது அங்கு கடையை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியா திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் அலங்காரங்களை சிறப்பாக செய்து முடிக்கிறார். இதையடுத்து தன்னுடைய அம்மா மற்றும் அக்காவுடன் அங்கு வரும் பழனிச்சாமி, மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. இதனிடையே பாக்யா, வீட்டில் உள்ள மற்றவர்கள் யாரையும் அழைத்து வரவில்லையா என்று இனியா குறித்து சூசகமாக விமல் கேட்கிறார். பழனிச்சாமி யாரையும் கூப்பிடவில்லை என்று பாக்கியா கூற, தான் எளிமையாக இந்த கஃபேவை துவங்க நினைத்ததாகவும் அதனால் தான் யாரையும் அழைக்கவில்லை என்றும் பழனிச்சாமி சமாதானம் சொல்கிறார்.
பாக்கியா குறித்து கோபி ஆச்சர்யம்: முன்னதாக வீட்டிற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு ரெஸ்டாரெண்டில் சிறிய பிரச்சினை இருந்ததால் சீக்கிரமாகவே வருகிறார் பாக்கியா. கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் வாக்கிங் வரும்போது இதை பார்க்கின்றனர். இவ்வளவு சீக்கிரமாக ரெஸ்டாரெண்ட் கிளம்பினால் வீட்டில் உள்ள வேலைகளை யார் செய்வார்கள் என்று கோபி ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி, பாக்கியா ஒரு மெஷின் போல வேலை செய்வதாகவும் காலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து வீட்டிற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து விடுவாள் என்றும் பம்பரமாக சுழன்று கடையையும் பார்த்துக் கொண்டு வீட்டையும் பார்த்துக் கொள்வாள் என்றும் பாராட்டு தெரிவிக்கிறார் ஈஸ்வரி.
கோபி சுட்ட தோசை: இதை பார்க்கும் கோபி மிகவும் ஆச்சரியமடைகிறார். தன்னையும் பாக்கியாவுடன் பொருத்திப் பார்ப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. வீட்டிற்கு வரும் கோபி தன்னுடைய அம்மாவிற்கு தான் தோசை சுட்டு கொடுப்பதாக கூறுகிறார். முன்னதாக அவர் போட்டுக் கொடுத்த காபியால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளான ஈஸ்வரி, கோபி சுடப்போகும் தோசை குறித்து பயப்படுகிறார். இருந்தபோதிலும் அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இதனிடையே முதலில் பீய்ந்து போன தோசையை சுடும் கோபி, பின்னர் தன்னுடைய அம்மாவிடம் அட்வைஸ் கேட்டு சிறப்பாக செய்து முடிக்கிறார்.
ராதிகா மனஉளைச்சல்: இதனிடையே கோபி தன்னை கொலையாளியை போல பார்த்ததை நினைத்து இரவெல்லாம் தூக்கம் வராமல் ராதிகா மனம் புழுங்குவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது. தன்னுடைய அம்மாவிடம் கோபி தன்னை கண்டு கொள்வதே இல்லை என்று கூறி ராதிகா புலம்புகிறார். இந்நிலையில் அங்கு வரும் ஈஸ்வரி உன்னை கோபி கண்டுக் கொள்ளவில்லை என்று தானே நினைக்கிறாய், இது தொடரும் என்றும் ஒரு கட்டத்தில் அம்மா தாயே என்னை விட்டுவிடு என்று கூறிவிட்டு கோபி என்னுடன் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுவான் என்றும் ஈஸ்வரி கூறுகிறார். இதை கேட்கும் ராதிகா மற்றும் கமலா இருவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











