Baakiyalakshmi: கோபியை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்.. கங்கணம் கட்டிய செழியன் -எழில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மனைவி ராதிகா கர்ப்பமாக இருப்பது குறித்து சொல்வதற்கு தொடர்ந்து கோபி தயக்கம் காட்டிய சூழலில் அங்கு வரும் பாக்கியா பானையை உடைப்பது போல இந்த விஷயத்தை குடும்பத்தினர் அனைவரிடமும் போட்டுடைக்கிறார். இதனால் செழியன், எழில் என அனைவரும் கோபியை அருவருப்பாக பார்த்துவிட்டு அங்கிருந்து செல்கின்றனர்.
இனியாவோ தன்னுடைய அப்பா இப்படி செய்து விட்டாரே என்று கலக்கத்திலும் அவமானத்திலும் அங்கிருந்து நகர்கிறார். இதனால் கோபிக்கு மிகவும் அவமானமாக போகிறது. இந்த விஷயத்தை குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லி விஷயத்திற்கு தீர்வு கண்ட பாக்கியாவை பார்த்து அவர் தொடர்ந்து முறைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தன்னை குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையிலும் பாக்கியா அவமானப்படுத்தியதாக அவர் நினைக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியல் தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட எபிசோட்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் சூழலில் சீரியலின் கதைக்களத்தை ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் கணவனை மட்டுமே நம்பி படிப்பறிவு இல்லாத சூழலில் எப்படி தன்னை ஒவ்வொரு விஷயமாக பார்த்து முன்னேற்றிக் கொண்டு கனவை எட்டிப் பிடிக்கிறார் என்பதாக இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது.
கணவன் அன்பிற்காக ஏக்கம்: தன்னுடைய குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டு வரும் பாக்கியா, தொடர்ந்து தன்னுடைய கணவனின் அன்பை பெற முடியாமல் மூன்று குழந்தைகளுக்கு தாயாகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் கோபியால் கைவிடப்பட்டு அவரிடம் விவாகரத்தும் பெறுகிறார். ஆனால் அவரது பெற்றோர், தன்னுடைய மகன்கள், மருமகள்கள், மகள் என்று தன்னை சிறப்பான குடும்ப வாழ்க்கையுடன் இணைத்து தன்னுடைய கேரியரையும் எட்டிப் பிடிக்கிறார். தான் எதற்குமே லாயக்கு இல்லை என்று எண்ணும்படியாக குடும்பத்தினரிடம் தனது கணவன் ஏற்படுத்தியிருந்த பிம்பத்தை உடைத்து தன்னை சாதனையாளராக மாற்றுகிறார்.
ராதிகா கர்ப்பம்: சாதாரண மசாலா பிசினஸ் துவங்கி படிப்படியாக முன்னேறி தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கும் அளவிற்கு தன்னை உயர்த்தியுள்ளார் பாக்கியா. ஆயினும் தன்னுடைய அம்மாவின் துணையோடு தன்னுடைய வீட்டில் வந்து உட்கார்ந்து ராஜ்ஜியம் செய்யும் கோபியை வெளியேற்ற வழி தெரியாமல் தொடர்ந்து தவித்து வருகிறார். இந்நிலையில் கோபி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ராதிகா கர்ப்பமாகி உள்ளார். இதனால் இந்த விஷயத்தை அவர் தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து மறைத்து வந்த சூழலில் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உண்மை தெரியும் சூழல் ஏற்படுகிறது.
செழியனின் பிரச்சினை: இதையடுத்து கோபியின் மகன்கள், மகள், அப்பா என அனைவரும் அவரை வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகள் இனியா தன்னுடைய அப்பா இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டாரே என்று மிகப்பெரிய அளவில் மனக்குழப்பம் ஏற்பட்டு தன்னை அனைவரும் கேலி பேசுவார்களா என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்கிறார். ஆனால் கோபியின் சொந்த வாழ்க்கை இனியாவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் பாதிக்க தான் விடமாட்டேன் என்றும் பாக்கியா உறுதி அளிக்கிறார். இந்நிலையில் செழியனுக்கோ வேறுவிதமான பிரச்சனை இதனால் ஏற்படுகிறது. செழியன் சில காலம் மாலினியுடன் தொடர்பில் இருந்த சூழலில், அவருடைய அப்பா போலவே மாலினி கர்ப்பமாக இருப்பதாக திடீரென செழியன் கூறுவாரா என்று ஜெனி குழப்பத்துடன் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
செழியன் & எழில் முடிவு: இதனால் செழியன் மிகுந்த சஞ்சலம் அடைகிறார். தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து குழம்பி, குடிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். இதனிடையே வீட்டை 20 லட்சம் வாங்கிக் கொண்டு எழுதி கொடுத்த கோபி, அங்கேயே இருப்பது குறித்து செழியன் மற்றும் எழில் இருவரும் இன்றைய எபிசோடில் பேசுகின்றனர். மறுநாள் அவரை அந்த வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இருவரும் உறுதியேற்கின்றனர். யார் தடுத்தாலும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று இன்றைய எபிசோடில் இருவரும் பேசுவதாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











