Baakiyalakshmi serial: பாக்கியா மீது காதல் அரும்பிய தருணம்.. முதல்முறையாக வெட்கப்படும் பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கட்டி போடும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியல் 1100 எபிசோடுகளுக்கு மேல் ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியலாக தொடர்ந்து இருந்து வருகிறது. சீரியலில் பாக்கியாவின் தனியாக நின்று போராடும் உறுதி ரசிகர்களை கவரவே செய்து வருகிறது.

ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்த தொடர் தமிழ் ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைந்துள்ளது. விரைவில் தொடர் நிறைவடைய உள்ளதாக கூறப்படும் சூழலில் இந்த தொடரை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள் என்று கருதப்படுகிறது. இந்த சீரியலில் பாக்கியாவை தொடர்ந்து தோழியாகவே நினைத்து வந்த பழனிச்சாமிக்கு தற்போது அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

Vijay TV s baakiyalakshmi serial today 13th of April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்துவரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இன்றைய தினமும் பழனிச்சாமியின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த காட்சிகளே சீரியலில் இடம் பெற்றது. பாக்கியலட்சுமியை எப்படியாவது பழனிச்சாமிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது அம்மா தொடர்ந்து யோசித்து வருகிறார். இதனிடையே பாக்கியாவை தனியாக அழைத்து அவர் செய்திருந்த சமையல் அனைவரும் பாராட்டும்படி அமைந்திருந்ததாக அவர் பாராட்டுகிறார்.

திருமணத்திற்கு கண்டிஷன்: தொடர்ந்து அவர் பாக்கியாவிற்கு பிறந்தநாள் நிகழ்ச்சியில் சமைத்ததற்கான பணத்தை கொடுக்கிறார். ஆனால் பாக்கியா இதை ஏற்க மறுக்கிறார். பழனிச்சாமி நண்பராக தனக்கு பல வழிகளில் உதவி வருவதாகவும் அதற்கான ஒரு சிறிய கைமாறாக இது இருக்கட்டும் என்றும் பணத்தை கொடுத்து தன்னை அன்னியப்படுத்த வேண்டாம் என்றும் பாக்கியா கூறுகிறார். இந்நிலையில் பாக்கியாவை தோழியாக மட்டுமே பார்த்து வந்த பழனிச்சாமிக்கு அவர் மீது காதல் ஏற்படும் தருணமாக இன்று எபிசோட் காணப்பட்டது. பழனிச்சாமியின் அக்கா மகன் விமல் தன்னுடைய மாமா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. உடன் எழில் உள்ளிட்ட பாக்கியாவின் குடும்பத்தினரும் அவரிடம் இந்தக் கேள்வியை கேட்கின்றனர்.

பழனிச்சாமியை ஈர்க்கும் பாக்கியா: இதற்கு பதிலளிக்கும் பழனிச்சாமி, தான் கேட்காமலேயே தன்னுடைய தேவைகளை புரிந்து கொள்ளும் பெண் வேண்டும் என்று கூறுகிறார். எனக்கு ஸ்வீட் மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே அங்கு வரும் பாக்கியா, தான் புதிதாக ட்ரை செய்த ஸ்வீட்டை பழனிச்சாமியிடம் கொடுக்கிறார். இந்த தருணத்தில் தான் பழனிச்சாமிக்கு முதல் லைட் எரிகிறது. தொடர்ந்து தன்னுடைய அம்மாவை சிறப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பழனிச்சாமி கூற, அதேபோல நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கும் பழனிச்சாமியின் அம்மாவை உட்கார சொல்லி அழைத்துச் சென்று உட்கார வைக்கிறார் பாக்கியா.

பழனிச்சாமிக்குள் லைட்: தொடர்ந்து தன்னுடைய கூடப்பிறந்தவர்களை சொந்த உடன்பிறப்புகளாக தன்னுடைய வருங்கால மனைவி பார்க்க வேண்டும் என்று பழனிச்சாமி கூறுகிறார். இதையடுத்து பழனிச்சாமியின் சகோதரிகளுக்கு ஸ்வீட் கொடுக்க செல்கிறார் பாக்கியா. அங்கு அவரது இளைய சகோதரி சுந்தரி தன்மீது ஸ்வீட்டை கொட்டிக் கொள்கிறார். இதையடுத்து பாக்கியா அவருக்கு துடைத்துவிட்டு நிதானமாக சாப்பிடுமாறு கூறிவிட்டு செல்கிறார். இவ்வாறு பழனிச்சாமிக்கு அடுத்தடுத்து லைட் எரிய காரணங்கள் அமைகின்றன. இந்நிலையில் ஒரு பெண்ணை பார்த்தவுடன் தனக்கு லைட் எரிய வேண்டும் என்று பழனிச்சாமி கூற பாக்கியா நின்று கொண்டிருக்கும் இடத்தில் அணைந்த விளக்குகள் திடீரென பிரகாசமாக எரிகின்றன.

பாக்கியா மீது காதல்: இவை அனைத்தும் பாக்கியா மீது அவருக்கு காதல் அரும்ப காரணமாக அமைகிறது. இதனிடையே பழனிச்சாமியிடம் அவரது அம்மா மற்றும் சகோதரி இருவரும் பாக்கியாவை திருமணம் செய்வது குறித்து கேட்கின்றனர். இதையடுத்து வெட்கத்துடன் அதுபோல ஏதாவது அமைந்தால் கண்டிப்பாக சொல்கிறேன், அதுவரை சும்மா இருங்கள் என்று பழனிச்சாமி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து பழனிச்சாமி பாக்கியாவின் பல்வேறு இடர்பாடுகளில் கை கொடுத்து அவரை தூக்கிவிட்டு இருக்கிறார். சொந்த வாழ்க்கையிலும் பாக்கியாவின் தொழிலிலும் பல்வேறு இக்கட்டுகளின் போது பழனிச்சாமி அங்கு முதல் ஆளாக வந்து துணை நின்று அவரை காப்பாற்றிய பல நிகழ்வுகள் முன்னதாக இந்த சீரியலில் காணப்பட்டன. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்பதே பழனிச்சாமியின் அம்மா உள்ளிட்ட அனைவரின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X