Baakiyalakshmi serial: தீயாய் தாக்கிய பாக்கியாவின் வார்த்தைகள்.. எழில் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை:விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் தொடர்ந்து ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. எழில் மற்றும் அமிர்தா கண்டிப்பாக குழந்தை பெற்று தான் ஆக வேண்டும் என்று ஈஸ்வரி கண்டிப்புடன் கூறுகிறார். ஆனால் தான் இயக்குனரான பிறகுதான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என்பதில் எழில் தீவிரமாக இருக்கும் நிலையில், தன்னுடைய பேச்சை கேட்டுக்கொண்டு இருப்பதானால் இந்த வீட்டில் இருக்கலாம் இல்லையென்றால் வெளியில் செல்லலாம் என்று ஈஸ்வரி கூறுகிறார்.

வீட்டை விட்டு வெளியில் சென்றால்தான் இங்கே இருக்கும் சொகுசான வாழ்க்கை குறித்து தெரியும் என்றும் ஈஸ்வரி கூறுகிறார். இதனிடையே எழிலை வீட்டை விட்டு வெளியேறுமாறு பாக்கியா கூறுகிறார். இதையொட்டிய காட்சிகள் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகின. எழிலும் இந்த விஷயத்தில் அதிரடியாக முடிவெடுப்பதாகவும் காட்சிகள் காணப்பட்டன.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளை பார்க்க முடிந்தது. செழியன் மற்றும் ஜெனிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. ஜெனி இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக உள்ள நிலையில் அதேபோல எழில் மற்றும் அமிர்தாவும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி தொடர்ந்து வற்புறுத்துகிறார். அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு ஆதாரம் வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷ் மீண்டும் வந்து அவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடுவார் என்றும் அவர்கள் வாழ்க்கை மீண்டும் சிக்கலில் முடியும் என்றும் ஈஸ்வரி தொடர்ந்து பல விஷயங்களை பேசுகிறார்.

எழிலின் தீர்க்கமான முடிவு: ஆனால் தான் தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று எழில் தீர்க்கமான முடிவுடன் காணப்படுகிறார். தொடர்ந்து தன்னுடைய பாட்டியிடம் அமிர்தாவை இந்த விஷயத்தில் மனதை நோகடிக்கும்வகையில் பேச வேண்டாம் என்றும் எழில் கூறிய நிலையில் தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதங்கள் நீள்கின்றன. அமிர்தா எழில் வாழ்க்கையில் வந்த பிறகுதான் பல கஷ்டங்களை எழில் அனுபவித்ததாகவும் அமிர்தா ராசி இல்லாதவள் என்றும் அடுத்தடுத்து பலவாறு ஈஸ்வரி பேசுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் எழில் தன்னுடைய பாட்டியிடம் தொடர்ந்து இந்த விஷயத்தில் சண்டையிடுகிறார்.

ஈஸ்வரி ஆத்திரம்: இதனிடையே அவர்களை சமாதானப்படுத்தி இந்த சண்டையை முடித்து வைக்க பாக்கியா, செழியன் உள்ளிட்ட பலரும் முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து வம்படியாக பேசிக்கொண்டு இந்த விஷயத்தில் ஒரு முடிவை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று ஈஸ்வரி தொடர்ந்து வற்புறுத்துகிறார். ஆனால் தான் இயக்குனர் ஆன பிறகுதான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என்றும் தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் எழிலும் மிகவும் பிடிவாதமாக காணப்படுகிறார். இதனிடையே தன்னுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு இருப்பதானால் இந்த வீட்டில் இருக்கலாம் என்று ஈஸ்வரி கூறுகிறார்.

எழிலை வீட்டைவிட்டு வெளியேற சொன்ன பாக்கியா: இதையடுத்து ஏழிலை அமிர்தா மற்றும் நிலாவுடன் இந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு பாக்கியா தீர்க்கமாக கூறுகிறார். எழில் பல விஷயங்களை திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும் இந்த வீட்டில் இருந்தால் அதையெல்லாம் அவரால் சாதிக்க முடியாது என்றும் பாக்கியா கூறுகிறார். இதையடுத்து எழிலும் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கிறார். ஆனால் கோபத்தில் எழில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கோபத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்றும் அமிர்தா அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அவர் தன்னுடைய அம்மா கூறிய வார்த்தைகளை கண்டிப்பாக நிறைவேற்றும் எண்ணத்தில் துணிமணிகளை பேக் செய்கிறார்.

எழிலின் அதிரடி முடிவு: இதனிடையே எழிலை சமாதானப்படுத்த செழியன், இனியா உள்ளிட்டவர்கள் முயற்சிக்கின்றனர். பாக்கியா வந்து பேசினால் கண்டிப்பாக ஏழில் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வான் என்று அவர்கள் கூறிய நிலையில் தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறார் பாக்கியா. தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என்றும் அவர் கூறுகிறார். எழில் வீட்டை விட்டு வெளியே செல்லட்டும் என்றும் அவர் கூறிய நிலையில் எழில் பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் இதனால் பாக்கியா அதிர்ச்சியடைவதாகவும் இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.

பரிதவிக்கும் ஈஸ்வரி: முன்னதாக எழிலிடம் கண்டபடி பேசிய ஈஸ்வரியும் தன்னுடைய அறையில் கணவனிடம் எழில் இந்த வீட்டை விட்டு போக மாட்டான் என்று தனக்கு தானே என்று கூறுவதாக காணப்பட்டது. தான் பேசிய விஷயங்கள் கண்டிப்பாக பிற்காலத்தில் யோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான் என்று கூறும் ஈஸ்வரி, ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் எழில் வீட்டை விட்டு வெளியேற மாட்டான் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக் கொள்கிறார். ஆனால் வீட்டை விட்டு எழில் வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவரது வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X