Baakiyalakshmi serial: அமிர்தாவை தேடி பொருட்காட்சிக்கே வந்த கணேஷ்.. மிரட்சியில் பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தன்னுடைய முதலிடத்தை விட்டு கீழிறங்கியிருந்த பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தில் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது.

இந்நிலையில் சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial today (14th december 2023) episode released

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மீண்டும் தன்னுடைய முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளது பாக்கியலட்சுமி சீரியல். கடந்த வாரத்தின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல், தொடர்ந்து மாஸ் காட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது பொருட்காட்சியில் கேன்டீன் அமைத்துள்ள பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கி வருகிறார்.

விட்டுக் கொடுக்காத பாக்கியா: இருந்தாலும் கேன்டீனை மற்றவர்களுக்கு கொடுத்துவிட தன்னுடைய மாமியார் கூறுவதை ஏற்காமல் எந்த பிரச்சினை வந்தாலும் தொடர்ந்து நடத்துவேன் என்று பாக்கியா தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். பாக்கியாவின் பொருட்காட்சி கேன்டீனில் உணவு முறையாக இல்லை என்று சக கான்டிராக்டர் புகார் அளித்த நிலையில், அதிலிருந்து மீண்டு, மீண்டும் கேன்டீனை திறம்பட நடத்துகிறார் பாக்கியா.

பாக்கியா அறிமுகப்படுத்திய புதிய ஸ்வீட்: புதிதாக ஒரு ஸ்வீட்டை அறிமுகம் செய்து அதற்கு தன்னுடைய மாமனார், மாமியார் பெயர்களை இணைத்து ராமேஸ்வரி என்று பெயரிடுகிறார். அந்த ஸ்வீட்டிற்கு அதிகப்படியான வரவேற்பு காணப்படுகிறது. அவர் அடுத்தடுத்த இனிப்புகளை கண்டுபிடித்து அதை வீட்டிலுள்ளவர்களின் பெயரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தன்னுடைய பெயரிலும் புதிய இனிப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் செல்வி கோரிக்கை வைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

செழியனை அடித்த ஜெனி அப்பா: இதனிடையே ஜெனியின் அப்பா ஜோசப், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புகிறார். தன்னுடைய மகளின் வாழ்க்கை கேள்விக்குறியானதை எண்ணி மிகுந்த ஆத்திரமும் வருத்தமும் படுகிறார். இந்நிலையில், தன்னுடைய குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் அதற்கான கார்ட்டை கொடுக்கவும் ஜெனி வீட்டிற்கு செல்கிறார் செழியன். அங்கு செழியனை பார்க்கும், ஜெனியின் அப்பா மிகுந்த கோபத்துடன் அவரை அடிக்கிறார்.

கணேஷை பார்த்து அதிர்ந்த பாக்கியா: ஆனாலும் தான் செய்த தப்பை நினைத்து பொறுமையாக செயல்படுகிறார் செழியன். இதனிடையே, ஜெனியால் செழியனை மறக்க முடியாது என்பதை கண்டுபிடித்து தன்னுடைய கணவருடன் விவாதிக்கிறார் ஜெனியின் அம்மா மரியம். கோபம் தணிந்த நிலையில் இதை ஏற்றுக் கொள்ளும் ஜெனியின் அப்பா, செழியனுடன் தனியாக பேச முற்படுகிறார். இதனிடையே, அமிர்தாவை தேடி பொருட்காட்சிக்கே வருகிறார் அவரது முன்னாள் கணவர் கணேஷ். அவரை அங்கு பார்த்து பாக்கியா அதிர்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X