Baakiyalakshmi serial: நீயும் பாக்கியாவும் ரொம்ப நெருங்கிட்டீங்க போலருக்கே.. பழனிச்சாமி அக்கா கேள்வி
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதன் இன்றைய எபிசோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இன்றைய தினம் பழனிச்சாமி துவங்கியுள்ள கபேவின் துவக்க விழா நிகழ்ச்சிகள் கலர்ஃபுல்லாக நடந்து முடிந்துள்ளன, இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக்கி இருந்தார் பாக்கியா.
இதனால் பழனிச்சாமி மட்டுமில்லாமல் அவரது அம்மா மற்றும் அக்காவும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் பழனிச்சாமியும் பாக்கியாவும் மிகவும் நெருங்கி விட்டதாக பழனிச்சாமியின் அக்கா கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து கோபி அடுத்தடுத்து கிளவுட் கிச்சன், வீடு என அடுத்தடுத்த வேலைகளை பிசியாக பார்ப்பதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை கொடுத்து வருகிறது. இன்றைய எபிசோடில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு பக்கத்தில் பழனிச்சாமி கபே துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவை அவர் எளிமையாக மேற்கொள்ள நினைத்த நிலையில், அதை தோரணங்கள், பலூன்கள் என கலர்ஃபுல்லாக்கியுள்ளார் பாக்கியா. இதனால் பழனிச்சாமி மட்டுமில்லாமல் அவரது அம்மா மற்றும் அக்காவும் மிகவும் நெகிழ்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் துவக்க விழாவை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் ஸ்வீட்டை செய்து அசத்துகிறார் பாக்கியா.
கபே துவக்கவிழா: பாக்கியா செய்த ஸ்வீட்டை சாப்பிடும் விமல் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுகின்றனர். இந்நிலையில் பாக்கியாவின் ரெஸ்டாரெண்டிற்கு ஒரு எக்ஸ்டென்ஷனாகவே இந்த கபே துவங்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் இணைந்து முன்னேறுவோம் என்றும் பழனிச்சாமி கூறுகிறார். இதையடுத்து பாக்கியாவும் பழனிச்சாமியும் மிகவும் நெருங்கி விட்டதாக அவரது அக்கா கூறுகிறார். அடுத்தடுத்த கடைகளில் வேலை செய்வதை தான் குறிப்பிட்டதாகவும் அவர் கூறுகிறார். இதையடுத்து கோபி தன்னுடைய வீட்டில் அம்மாவிற்கு வேளை வேளைக்கு சாப்பாடு கொடுப்பதுடன் தன்னுடைய கிளவுட் கிச்சனையும் சிறப்பாக மெயின்டெயின் செய்வதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.

புலம்பும் கோபி: இதில் சில சொதப்பல்களும் இருந்த நிலையில் இது குறித்து தன்னுடைய அம்மாவிடம் கோபி புலம்புகிறார். எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றுவதாக கூறுகிறார். இதையடுத்து பேசும் ஈஸ்வரி, எத்தனை காலங்களாக பாக்கியா தொடர்ந்து சமையல் பிசினஸ் செய்து வருவதாகவும் தற்போது ரெஸ்டாரண்டையும் துவங்கியுள்ள நிலையிலும் வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர்தான் செய்கிறார் என்றும் பாராட்டுகிறார். இது குறித்து பாக்கியாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் ஈஸ்வரி கூற. கோபியும் அவரிடம் இது குறித்து கேட்கிறார். எப்படி வீட்டையும் சமாளித்துக் கொண்டு ரெஸ்டாரன்டையும் பார்த்துக் கொள்கிறாய் என்று அவர் கேட்கிறார்.

கோபியை கலாய்க்கும் பாக்கியா: முன்னதாக கோபி தன்னை எதற்கும் லாயக்கில்லை என்று கூறிய நிகழ்வுகள் பாக்யாவிற்கு ஞாபகத்துக்கு வருகின்றன. தொடர்ந்து கோபி மிகப் பெரிய புத்திசாலி என்று கூறும் பாக்கியா, மொத்தஅறிவையும் குத்தகைக்கு எடுத்த கோபி தன்னிடம் வந்து ஐடியா கேட்பதாக அவரை கலாய்த்து விட்டு செல்கிறார். இதையடுத்து கோபி புலம்புவதாகவும் காணப்பட்டது. தொடர்ந்து ஈஸ்வரி பாக்கியா சமையலை மிஸ் செய்வதாக ராமமூர்த்தி பாக்கியாவிடம் கூறுகிறார். இதையடுத்து ஈஸ்வரிகை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று பாக்கியா கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி இன்னும் தன்னுடைய மகனிடம் அனுபவிக்க வேண்டியது அதிகம் இருப்பதாக ராமமூர்த்தி கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











