Baakiyalakshmi serial: பாக்கியாவிற்கு எதிராக ஃபுட் பிசினசில் நுழையும் கோபி.. ஜெயிப்பாரா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து வெற்றிநடை போட்டு வரும் இந்த சீரியல் அதிகமான டிஆர்பியை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியல் ஆண்டுகள் கடந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. தன்னுடைய குடும்பத்தினரே உலகம் என்று வாழ்ந்து வந்த பாக்கியா, ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவனால் ஏமாற்றப்பட்டு விவாகரத்திற்கு அப்ளை செய்யும் நிலைக்கு உட்படுகிறார். இதையடுத்து கோபி மற்றும் ராதிகாவின் உறவு குறித்து தெரிந்து தானே முன்வந்து கோபிக்கு விவாகரத்து கொடுக்கிறார்.

இதையடுத்து அவரது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றம் கோபிக்கு எரிச்சலை கொடுக்கிறது. பாக்கியாவின் வளர்ச்சியை குலைக்கும் செயல்களிலேயே அவர் அதிக கவனம் செலுத்திய நிலையில், நன்றாக செயல்பட்டு வந்த தன்னுடைய பிசினசையும் கோட்டை விடுகிறார். தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவிடமும் இதற்காக அடிஉதை படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இருந்தபோதிலும் புதிதாக பிசினஸ் துவங்க கோபி முற்படும்போது, ராதிகா அவருக்கு தேவையான பணத்தை கொடுத்து அவரை கைத்தூக்கி விடுகிறார். இதனால் கோபியின் அம்மா ஈஸ்வரி மிகுந்த உற்சாகமடைகிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 14th March 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் புதிதாக ரெஸ்டாரெண்ட் துவங்கியுள்ளார் பாக்கியா. அவரது ரெஸ்டாரெண்ட் திறப்பில் பெரிய அளவில் சதி செய்து அவரை அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்பட வைக்க கோபி முயன்ற நிலையில் அது நடக்காமல் போனது. பாக்யாவின் ரெஸ்டாரெண்ட் திறப்பிற்கு அமைச்சர் வருவதாக கூறிய நிலையில் அவரை வரவிடாமல் செய்வதற்காக அவரது பிஏ மூலமாக சதி திட்டத்தில் கோபி ஈடுபடுகிறார்.

ரெஸ்டாரெண்ட் துவங்கிய பாக்கியா: ஆனால் கடைசி நேரத்தில் உண்மை தெரிந்து அமைச்சர் பாக்யா ரெஸ்டாரெண்ட் திறப்பிற்கு வந்து அனைவரையும் உற்சாகப்படுத்துகிறார். இதனால் கோபி மூக்கறுபட்ட நிலையில் அவருடைய நண்பர் செந்தில் உள்ளிட்டவர்களின் கடுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார். இந்நிலையில் தான் க்ளவுட் கிச்சன் பிசினஸில் ஈடுபட உள்ளதாக கோபி கூறுகிறார். எப்படி செய்ய முடியும் என்று ராதிகா மற்றும் குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இந்த பிசினஸை செய்வதற்கு ஆட்கள் இருந்தால் போதும் என்று கோபி அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்துகிறார்.

கிளவுட் கிட்சென் துவங்கும் கோபி: தன்னுடைய பிசினஸ் துவங்க ஒரு இடத்தையும் பார்த்து பிக்ஸ் செய்கிறார் கோபி. இதை குடும்பத்தினரிடம் அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். முன்னதாக அம்மாவிற்கு போட்டியாக நீங்களும் புட் பிசினஸில் இறங்குகிறீர்களா என்று எழில் கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் அளித்த கோபி அவளெல்லாம் எனக்கு சமமே கிடையாது, அவளை ஒரு போட்டியாக தான் எப்போதுமே கருதுவது கிடையாது என்று பாக்கியாவை அசிங்கப்படுத்துகிறார். இதையடுத்து எழில் அம்மாவை அப்படி பேச வேண்டாம் என்று அவரிடம் கோபப்படுகிறார். ஆனால் பாக்கியா எழிலை சமாதானப்படுத்துவதுடன் தன்னால் உத்வேகம் அடைந்து இந்த பிசினஸை கோபி துவங்கியுள்ளதாக கூறுகிறார்.

கோபிக்கு உதவிய ராதிகா: இதனால் கோபி கடுப்பானதுடன் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என்று பாக்கியாவை கோபத்துடன் பேசுகிறார். இதனுடைய கிளவுட் கிச்சன் துவங்குவதற்கான இடத்தை பார்த்து அதற்கான அட்வான்சையும் கொடுக்கிறார். தனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இந்த தொழிலில் அவர் ஈடுபடுவதால் இதில் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை அடுத்தடுத்து எபிசோடுகளில் பார்க்கலாம். இதனிடையே இந்த தொழில் துவங்க அவருக்கு நிதியுதவி செய்து ராதிகா உதவுகிறார். கோபிக்கு ஏதாவது உதவி தேவையா என்று ஈஸ்வரி கேள்வி கேட்க தான் பார்த்துக் கொள்வதாகவும் ராதிகா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X