Baakiyalakshmi: எங்கம்மா வீடு.. நீங்களும் உங்க வொய்ஃபும் இருக்க வேண்டாம்.. கோபியிடம் எழில் காட்டம்!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் சென்டிமெண்டாக காணப்பட்டது. ராதிகாவின் கர்ப்பம் குறித்து குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்த சூழலில், அனைவரும் கோபியை வெறுப்புடன் பார்க்கின்றனர். அவர் தன்னுடைய சந்தோஷத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாக கூறும் எழில், அவரை அந்த வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று செழியனிடம் கூறுகிறார். இதை செழியனும் ஆமோதிக்கிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை வெறுப்புடன் எதிர்கொண்டது குறித்து ராதிகாவிடம் கோபி புலம்பித் தீர்க்கிறார். பாக்கியா முன்னிலையில் தான் அவமானப்பட்டதும் அவருக்கு மிகவும் அவமானமாக இருந்ததாகவும் கூறுகிறார். இதையெல்லாம் முன்னதாகவே கோபி யோசித்திருக்க வேண்டும் என்று ராதிகா கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து முக்கியமான மற்றும் பரபரப்பான கட்டத்தில் அடுத்தடுத்த எபிசோடுகளை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் ராதிகாவின் கர்ப்பத்தை குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து மறைத்து வந்தார் கோபி. ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் அனைவரையும் ஒருங்கிணைத்து அவரை விஷயத்தை கூறும் படி ராதிகா தொடர்ந்து வலியுறுத்துகிறார். ஆயினும் அந்த விஷயத்தை சொல்லாமல் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருந்த கோபியை பார்த்து அங்கே வரும் பாக்கியா. சந்தோஷமான விஷயம் தானே இதை சொல்வதற்கு எதற்கு தயக்கப்பட வேண்டும் என்று கேட்டு ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை குடும்பத்தினர் அனைவரிடமும் கூறிவிடுகிறார்.
கோபியை வெறுக்கும் குடும்பத்தினர்: இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் கோபியை வெறுப்புடன் பார்க்கின்றனர். கோபியின் அப்பா ராமமூர்த்தி, எழில், செழியன், இனியா என அனைவரும் கோபியை வெறுத்து ஒதுக்குகின்றனர். இதனால் செழியன் -ஜெனி இடையிலும் மாலினி விவகாரம் மீண்டும் தலை தூக்குகிறது. இந்நிலையில் கோபியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று செழியனும் எழிலும் உறுதி செய்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் தொடர்ந்து இந்த விஷயம் குறித்து கோபி பேசுகிறார். தற்போது அனைவருக்கும் விஷயம் தெரிந்து விட்டதால் நிம்மதியாக இருக்கலாம் என்று ராதிகா கூற, கோபி முழிக்கிறார்.
கோபியிடம் எழில் காட்டம்: என்னது நிம்மதியா, அனைவரும் என்னை பார்த்த பார்வையை நீ பார்த்துக் கொண்டு தானே இருந்தாய் நான் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்று கோபி ராதிகாவிடம் கேள்வி கேட்கிறார். தொடர்ந்து கோபி ஜாக்கிங் சென்றபோது, அங்கு ஜாகிங் வரும் எழில், கோபியிடம் பேசுகிறார். கோபி இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எழில் கூறுகிறார். தான் ஏன் வெளியேற வேண்டும், உன் அம்மா சொல்லிக் கொடுத்தாளா என்று பலவாறாக கோபி பேச, இது என்னுடைய அம்மாவின் வீடு இதில் நாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் மனைவியுடன் வெளியேற வேண்டும் என்று கோபிக்கு எழில் கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது.
உறுதியுடன் செயல்படும் செழியன் -எழில்: தொடர்ந்து யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்றும் என்னுடைய அம்மா மற்றும் செழியன், இனியா ஆகியோர் கூறினால் மட்டுமே தான் வீட்டை விட்டு போவேன் என்றும் கோபி கூறுவதாக இன்றைய எபிசோடு அமைந்திருந்தது. இந்நிலையில் வீட்டிற்கு அதே கோபத்துடன் வரும் கோபி. ராதிகாவிடம் எழிலின் இந்த பேச்சு குறித்து ஆத்திரத்துடன் கூறுகிறார். இதைத்தான் தான் துவக்கத்திலிருந்து கூறுவதாகவும் அந்த வீட்டில் தாங்கள் இருக்கக் கூடாது என்றும் ராதிகா கூறுவதாக அமைந்திருந்தது. இந்நிலையில் ஜாகிங் போய்விட்டு வீட்டிற்கு வரும் எழில். செழியனிடம் கோபியை வீட்டை விட்டு வெளியேற்றுவது குறித்து மீண்டும் பேசுகிறார். அதற்கு செழியன் தானும் அதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
பாக்கியாவிற்கு மகன்கள் ஆதரவு: முன்னதாக இனியாவிற்கு சமாதானம் கூறிவிட்டு தான் சமாதானம் ஆக முடியாமல் கண்கலங்கி கொண்டிருக்கிறார் பாக்கியா. அவர் தூங்கிவிட்டதாக நினைத்து அறைக்குள் வரும் எழில், தன்னுடைய அம்மாவின் மனநிலையை புரிந்து கொள்கிறார். அவர் பாக்கியாவை ஆதரவுடன் தலையை கோதிவிட்டு கைக்கு முத்தம் கொடுப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கு வரும் செழியனும், ஜெனியை பிரிந்து இக்கட்டான சூழலில் தான் இருந்தபோது தன்னுடைய அம்மா பாக்கியா எப்படி தனக்கு ஆதரவுடன் செயல்பட்டார் என்பது குறித்து நினைத்து கண்கலங்கி அழுகிறார். இதையெல்லாம் கண் மூடியபடி பார்க்கும் பாக்கியா அவர்கள் இருவரும் சென்றவுடன் கண்கலங்கி அழுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











