Baakiyalakshmi serial: மன்னிப்பு கேட்ட ராதிகா.. கண் கலங்கிய ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இடையில் சில காலங்கள் இந்த சீரியல் அதிகமான விமர்சனங்களுக்கு உட்பட்டது அடுத்தடுத்து ஒரே மாதிரியான காட்சிகளை இந்த சீரியல் கொடுத்து வருவதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். விரைவில் சீரியல் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கேட்டனர்.

இந்நிலையில் ஒரே மாதிரியான காட்சிகள் இல்லாமல் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சீரியலின் கதைக்களம் காணப்படுகிறது. ராதிகா மற்றும் கோபிக்கு விவாகரத்தான நிலையில் கடைசியாக பாக்கியா வீட்டிற்கு அவர் வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக 5 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் 1300க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வருகிறது. சாதாரண பெண்ணாக அதிகமான படிப்பும் இல்லாத நிலையில் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும் பாக்கியலட்சுமி, ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவனால் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் நிலையில் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இடையில் சில மாதங்கள் இந்த சீரியல் அடுத்தடுத்த விமர்சனங்களை சந்தித்தது.

Television Baakiyalakshmi serial Vijay TV

ஒரேமாதிரியான காட்சிகள்: சீரியலில் ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள் காணப்படுவதாக கமெண்ட் செய்யப்பட்டது. கோபி விவாகரத்து ஆன நிலையிலும் பாக்கியா வீட்டிற்கு வருவதும் உடனடியாக அவரது இரண்டாவது மனைவி ராதிகாவும் வருவதும் பின்பு ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டை விட்டு துரத்தப்படுவதுமாக இந்த சீரியலின் காட்சி அமைப்புகள் இருந்த நிலையில், விரைவில் சீரியல் எண்ட் கார்டு போட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் டிவியில் அதிகமான டிஆர்பியை பெற்று வரும் இந்த சீரியலை நிறைவு செய்ய விருப்பமில்லாத சேனல் தரப்பு சீரியலில் பரப்பரப்பை உருவாக்கும் வகையில் காட்சி அமைப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்தியது.

Television Baakiyalakshmi serial Vijay TV

கோபி -ராதிகா விவாகரத்து: இதையொட்டி, நன்றாக நடமாடிக் கொண்டிருந்த பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி திடீரென உயிரிழந்தார். இதையடுத்து பாக்கியாவை பரம எதிரியாக பார்த்த கோபியும் ஒரு கட்டத்தில் பாக்கியாவால் உயிர் பிழைக்க, அவரது மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனிடையே கோபி மற்றும் ராதிகா இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு அவர்களும் விவாகரத்தாகி பிரிந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து ஆன நிலையில் நீதிமன்றத்தில் இருந்தபடி இறுதியாக கோபியின் வீட்டினரை பார்க்க வேண்டும் என்று ராதிகா கூறுகிறார். தொடர்ந்து அவரை தன்னுடைய வீட்டிற்கு கோபி அழைத்துச் செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

மன்னிப்பு கேட்ட ராதிகா: வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் பார்க்கும் ராதிகா, பாக்கியாவின் சமையலையும் ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். இதனிடையே அன்பிற்காக யாருடனும் போட்டி போடக்கூடாது என்பதை தான் இந்த எட்டு மாதங்களில் புரிந்து கொண்டுள்ளதாக ஈஸ்வரியிடம் அவர் கூறுகிறார். தொடர்ந்து தான் வேண்டுமென்றே எந்த செயலையும் செய்யவில்லை என்றும் தன்னுடைய செயல்கள் காயப்படுத்தியிருந்தால் தன்னை மன்னிக்கும்படியும் ஈஸ்வரியிடம் அவர் கூற இதை கேட்கும் ஈஸ்வரி கண்கலங்குவதாக இன்றைய எபிசோடில் காட்சிகள் அமைந்திருந்தன. ராதிகாவை பிரிய மனம் இல்லாத கோபியும் கண்கலங்குவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. விரைவில் இந்த சீரியல் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டியே காட்சிகள் ஒளிபரப்பாகி வருவது கண்கூடாக தெரிகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X