Baakiyalakshmi serial: ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடல.. மயூவின் சாட்சி.. கமலாவிற்கு எதிராக திரும்பிய வழக்கு!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மீது கமலா கொடுத்த கொலைக் குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையை மையமாக கொண்டு காணப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்கிறார். ஈஸ்வரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
இதனால் அதிகமான கவலை மற்றும் அதிர்ச்சியில் ராமமூர்த்தி நீதிமன்றத்தில் எழுந்து தன்னுடைய மனைவி அப்படிப்பட்டவள் இல்லை என்று உணர்ச்சிவசப்பட்டு கத்துகிறார். இதனால் அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிடும் நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேநீர் இடைவேளைக்கு பிறகு தள்ளி வைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் நீதிமன்ற காட்சிகளுடன் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. முன்னதாக மயூவை சாட்சியளிக்க அழைத்து வருவதற்காக அவருடைய பள்ளிக்கு பழனிச்சாமியுடன் செல்லும் பாக்கியா, தொடர்ந்து மயூவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல தயக்கத்துடன் நிற்கிறார். மயூ மிகவும் சின்ன பெண் என்றும், நீதிமன்றத்தை பார்த்து அவள் பயந்து விடுவாள் என்றும் பழனிச்சாமியிடம் பாக்கியா கூறுகிறார். இதையடுத்து ஈஸ்வரியை வெளியில் எடுக்க வேண்டுமென்றால் மயூவின் சாட்சி மிகவும் முக்கியம் என்று கூறும் பழனிச்சாமி பாக்கியாவை சமாதானப்படுத்தி மயூவை அழைத்து வர வைக்கிறார்.
கதறிய ராமமூர்த்தி: இதனிடையே இருதரப்பு வாதங்களையும் கேட்டதில் ஈஸ்வரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறுகிறார். இதை கேட்கும் ராமமூர்த்தி அதிர்ச்சியடைகிறார். தன்னுடைய மனைவி அப்படி செய்யக் கூடியவள் இல்லை என்று அவர் கதறியபடி அவளை விட்டு விடும்படி கேட்கிறார். இதுபோல நீதிமன்றத்தில் நடந்துக் கொள்ளக்கூடாது என்று கூறும் நீதிபதி, ராமமூர்த்தியை அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிடுகிறார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேநீர் இடைவேளைக்கு பிறகு ஒத்தி வைக்கிறார். இதனால் வெளியில் வரும் எழில், செழியன் உள்ளிட்டவர்களிடம் ராமமூர்த்தி கதறுகிறார்.
தீர்ப்பை வாசிக்கும் நீதிபதி: இதனிடையே அங்குவரும் பாக்கியா, பரிதவிப்புடன் என்ன நடந்தது என்று கேட்கிறார். நடந்ததை அறிந்து நிம்மதியடைகிறார். தொடர்ந்து ஈஸ்வரியை வெளியே கொண்டுவந்து விடலாம் என்று ராமமூர்த்திக்கு சமாதானம் கூறி அனைவரையும் உள்ளே அழைத்து செல்கிறார். இதையடுத்து வழக்கறிஞரிடம் சென்று மயூ குறித்து பாக்கியா பேசுகிறார். தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசிக்க முயல்கிறார். ஈஸ்வரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை என்று அவர் தீர்ப்பை வழஙகப்போக, வழக்கறிஞர் குறிக்கிட்டு மயூவின் சாட்சி குறித்து பேசி அனுமதி வாங்குகிறார்.
மயூவின் சாட்சி: இதையடுத்து மயூவின் பெயரை கேட்டதும் ராதிகா, கோபி, கமலா என அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ராதிகா இதை அனுமதிக்க முடியாது என்று கத்துகிறார். ஆனாலும் தொடர்ந்து சாட்சி கூண்டில் ஏறி, மயூ தன்னுடைய அம்மா ராதிகா பிளவர் வாஸ் தடுக்கித்தான் கீழே விழுந்ததாகவும் அவரை பிடிக்கவே ஈஸ்வரி முயன்றதாகவும் ஈஸ்வரி பாட்டி ராதிகாவை தள்ளி விடவில்லை என்றும் சாட்சி கூறுகிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் ராதிகா, தன்னுடைய அம்மாவை கோபத்துடன் பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து தன்னுடைய சொந்த பகையை மனதில் வைத்துக் கொண்டு இதுபோன்ற புகாரை அளிப்பதா என்று கமலாவிடம் கடுமையாக கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











