Baakiyalakshmi serial: ஒரு கண்ணில் வெண்ணெய்.. ஒரு கண்ணில் சுண்ணாம்பு.. ஈஸ்வரியை வறுத்தெடுத்த செல்வி!
சென்னை: விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 1000 எபிசோட்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சேனலின் முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் கடந்த லிச மாதங்களாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இருந்தபோதிலும் அதிகமான டிஆர்பிகளை தொடர்ந்து பெற்று வருகிறது. ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் மசாலா பிசினஸ் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கிய பாக்கியா, தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கி தன்னுடைய முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினரும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே பெரிய அளவில் பிசினசை நடத்திவந்த கோபி, தற்போது தன்னுடைய பிசினஸ் நஷ்டத்தில் போனதால் அதை மூடிவிட்டு தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவின் உதவியுடன் புதிய பிசினசை துவங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். பாக்கியா ரெஸ்டாரெண்ட் துவங்கிய நிலையில், அவருக்கு போட்டியாக கோபி தற்போது கிளவுட் கிட்செனை துவங்கியுள்ளார். இதற்கான இடமும் பார்த்து அட்வான்சும் கொடுத்துள்ளார். இது அவருக்கு பழக்கமில்லாத வேலை என்றபோதிலும் சமையல் பிசினஸ் என்றாலே சிறப்பாகத்தான் வரும் என்று அவர் மனக்கணக்கு போட்டுள்ளார். அவரது கணக்கு சரியாக வருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக அதிக டிஆர்பி புள்ளிகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். சரியான படிப்பு இல்லாமல் தன்னுடைய கணவன், குடும்பம் என்று தன்னுடைய உலகத்தை சுருக்கிக் கொண்டு வாழ்ந்துவந்த பாக்கியா, பிசினசாக முதலில் தனக்கு கைவந்த கலையாக இருக்கும் உணவை பிரதானமாக்கி மசாலா பிசினசை துவங்கினார். அது கொடுத்த தன்னம்பிக்கையில் தொடர்ந்து அவர் நடைபோட்டு வந்த நிலையில், அவருக்கே தெரியாமல் அவரை விவாகரத்துக்கு அப்ளை செய்ய வைத்தார் கோபி. தொடர்ந்து ராதிகாவுடனான அவரது உறவு குறித்து தெரிந்துக் கொண்ட பாக்கியா, தானே முன்வந்து அவருக்கு விவாகரத்து கொடுத்தார்.

பாக்கியாவின் வளர்ச்சி: இந்நிலையில் தனக்கு பிடித்த ராதிகாவை கோபி இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ள தன்னுடைய மகன்கள், மாமனார் -மாமியார் என அனைவரையும் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார் பாக்கியா. தொடர்ந்து தன்னுடைய வருமானத்திற்காக தனக்கு பிடித்தமான சமையலையே தன்னுடைய கேரியராக தேர்வு செய்து அடுத்தடுத்து கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட் என அசத்தினார். தற்போது அவரது வளர்ச்சி ரெஸ்டாரெண்ட் திறப்பில் வந்து நின்றுள்ளது. அமைச்சர் திறந்து வைக்க அவரது ரெஸ்டாரெண்ட் மிகச்சிறப்பாக திறக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமி -பாக்கியா ஜோடி: ஆனால் மெயின் ரோடில் இருந்தும் அதிகமானோர் ரெஸ்டாரெண்ட்டுக்கு வராத நிலை காணப்படுகிறது. இதனால் ஏமாற்றம் இருந்தாலும் தன்னுடைய தன்னம்பிக்கையை கைவிடவில்லை பாக்கியா. இதனிடையே பாக்கியாவின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பிரச்சினைகளிலும் உடனிருந்து அவருக்கு ஆதரவாக செயல்படும் பழனிச்சாமி, ரெஸ்டாரெண்ட்டிற்கு வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ரெஸ்டாரெண்ட்டில் வந்து சுற்றிப் பார்க்கும் பழனிச்சாமியுடன் பாக்கியா அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்களை பார்க்கும் வேலையாட்கள், அவர்களது ஜோடி சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.

வெண்ணெய். சுண்ணாம்பு: முன்னதாக பாக்கியாவிடம் பேசும் செல்வி, கோபியின் புதிய பிசினஸ் குறித்து அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார். ராதிகாதான் இதற்கு பணம் கொடுக்கிறாரா என்றும் கேட்கிறார். இதனிடையே, ராதிகா பணம் கொடுக்கவுள்ளதாக கோபி கூறியதும், ஈஸ்வரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை பார்த்ததையும் சுட்டிக் காட்டுகிறார். முன்னதாக கோபிக்கு பல சந்தர்ப்பங்களில் பாக்கியா இதுபோன்ற பல உதவிகளை செய்தபோது எதுவும் சொல்லாமல் இருந்த ஈஸ்வரி, தற்போது ராதிகாவின் உதவியை மட்டும் மிகப்பெரிதாக பார்ப்பதாகவும் ஒரு கண்ணில் வெண்ணையையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து அவர் செயல்படுவதாகவும் செல்வி குற்றம் சாட்டுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











