Baakiyalakshmi: நல்லா தூங்கு மாலினி.. ஜெனியிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட செழியன்.. அப்புறம்?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டிவரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியலில் செழியன் மற்றும் ஜெனிக்கு இடையில் மாலினியால் ஏற்பட்ட பிரச்சினையை பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் தீர்த்து வைத்துள்ளனர். தற்போது அவர்கள் வாழ்க்கையில் சலசலப்புகள் காணப்பட்டாலும் நிம்மதியாக காணப்படுகின்றனர்.

இதையடுத்து எழில் -அமிர்தா பிரச்சினையையும் பழனிச்சாமி உதவியுடன் தீர்த்து வைத்துள்ளார் பாக்கியா. தொடர்ந்து அவரது ரெஸ்டாரெண்டில் பார்க்கிங் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனிச்சாமியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் சமையல் கான்டிராக்டை ஏற்று சிறப்பாக முடித்துள்ளார் பாக்கியா. இந்த நிகழ்ச்சியில் பாக்கியா மீது பழனிச்சாமிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

Vijay TV s baakiyalakshmi serial today 15th of April 2024 episode

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர், ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக தொடர்ந்து இருந்து வருகிறது. 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை இந்த சீரியல் கடந்த சூழலிலும் சேனனின் முன்னணி சீரியலாக தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் கணவனால் ஏமாற்றப்பட்டு, விவாகரத்திற்கு அப்ளை செய்ய வைக்கப்பட்ட பாக்கியா, ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து அவரே முன்வந்து விவாகரத்து கொடுக்கிறார். தொடர்ந்து தன்னுடைய மசாலா பிசினசை மேலும் விரிவுப்படுத்தி, கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட் என்று முன்னேறுகிறார். தற்போது ரெஸ்டாரெண்டையும் ஓபன் செய்கிறார்.

பழனிச்சாமியின் நட்பு: ஒரு கட்டத்தில் தனக்கு ஆங்கிலத்திற்கான அவசியம் இருப்பதை அறிந்து, அதற்கும் செல்கிறார் பாக்கியா. அங்கு பழனிச்சாமி மற்றும் லோபிகா ஆகியோரின் நட்பு கிடைக்கிறது. பாக்கியா அடுத்தக்கட்டத்திற்கு செல்ல பழனிச்சாமியின் நட்பு முக்கிய காரணமாக அமைகிறது. பாக்கியாவின் சொந்த வாழ்க்கையிலும், அவரின் மகன்களின் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர பழனிச்சாமியும் காரணமாக அமைய, பாக்கியாவின் கேரியரில் அடுத்தடுத்த முன்னேற்றங்களுக்கும் அவர் கைகொடுக்கிறார். இதனால் இவர்களது நட்பு மிகப்பெரிய அளவில் வளர்கிறது.

பாக்கியா மீது ஏற்படும் ஈர்ப்பு: இந்த நட்பை கோபி உள்ளிட்ட பலரும் பலவிதமாக பேச, தங்களது நட்பில் உறுதியாக இருந்தனர் பழனிச்சாமி -பாக்கியா. ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கிணங்க, பழனிச்சாமிக்கு பாக்கியா மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவரது பிறந்தநாளில் சமையல் கான்டிராக்டை எடுத்து சிறப்பாக முடிக்கிறார் பாக்கியா. அப்போது, தன்னுடைய வருங்கால மனைவி குறித்த தன்னுடைய அபிப்ராயங்களை பழனிச்சாமி அடுக்க, அவை ஒவ்வொன்றும் பாக்கியாவிற்கு பொருந்துவதை அவர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பாக்கியாவின் சமையலுக்கான பணத்தை அவரிடம் கொடுக்க இன்றைய தினம் பழனிச்சாமி அவரது ரெஸ்டாரெண்டிற்கு வருகிறார்.

அன்பிற்கு விலைபேச வேண்டாம்: ஆனால் அவர் கொடுக்கும் பணத்தை ஏற்க மறுக்கும் பாக்கியா, அன்பிற்கு விலை பேச வேண்டாம் என்று கூறுகிறார். இந்த வார்த்தைகள் பழனிச்சாமியை நெகிழ செய்கிறது. ஏற்கனவே பாக்கியாவிடம் நெருங்கிவரும் அவருக்கு இந்த வார்த்தைகள் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. முன்னதாக ரூமிற்குள் வருவதற்கு முன்பு, இன்று ஜெனி என்ன ஏழரையை கூட்டப் போகிறாளோ என்ற பயத்துடன் வரும் செழியன், அவரது அச்சத்தை போக்கும் வகையில் பேசுகிறார். மாலினி குறித்து இவர்களின் உரையாடல் போகும் நிலையில், ஒரு கட்டத்தில் ஜெனியை பார்த்து, நல்லா தூங்கு மாலினி என்று செழியன் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. செழியன் வாய்தவறி பேசியிருந்தாலும் ஜெனியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X