Baakiyalakshmi serial: அமிர்தா அம்மா முன்பே முகத்தை காட்டும் ஈஸ்வரி.. வருத்தத்தில் எழில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்வகையில் அமைந்திருந்தது. நெருங்கிய நட்பு, நெருங்கிய தோழி என்று பாக்கியாவை அடையாளப்படுத்திவந்த பழனிச்சாமி தற்போது லவ் மோடுக்கு மாறியுள்ளார்.

சமீபத்தில் பழனிச்சாமிக்கு 45வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தற்போது பாக்கியா மீது காதல் ஏற்பட்டுள்ளது. தயக்கம் ஒருபுறம் இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கைக்கு பொருத்தமானவராக பாக்கியா எல்லாவிதத்திலும் இருப்பார் என்று பழனிச்சாமிக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதையொட்டி அடுத்தடுத்த எபிசோட்களை இந்த சீரியல் ஒளிபரப்பி வருகிறது.

Vijay TV s Baakiyalakshmi serial today 16th April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துவரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் கணேஷ் மற்றும் மாலினியால் ஏற்பட்ட பிரச்சினைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அடுத்தடுத்த பிரச்சினைகளை அவர்களது வாழ்க்கையில் இயக்குநர் ஏற்படுத்தி வருகிறார். செழியனை கண்மூடித்தனமாக நம்பிவந்த ஜெனி, தற்போது எடுத்ததெற்கெல்லாம் சந்தேகப்படுவதை காண முடிகிறது. இதேபோல அமிர்தா மற்றும் எழில் இருவரும் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஈஸ்வரி பாட்டி தொடர்ந்து வற்புறுத்துகிறார்.

குழந்தைக்காக கோபம்: நிலா மட்டுமே தன்னுடைய குழந்தை என்று எழில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் நிலா எப்படி அவரது மகளாக முடியும் என்று அமிர்தாவே கேள்வி கேட்கிறார். அமிர்தா -எழில் குறித்து ஈஸ்வரி பாட்டியின் பேச்சை பொறுக்க முடியாமல் ஒரு நேரத்தில் அமிர்தா கண்கலங்குகிறார். குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று எழிலிடம் கூறுகிறார். ஆனால் அவர் உடன்படாததுடன், ஈஸ்வரியிடம் சென்று சண்டையிடுகிறார். தன்னுடைய மனைவியிடம் இதுகுறித்து இனிமேல் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் கோபப்படும் ஈஸ்வரி, அவர்களிடம் பேசாமல் இருக்கிறார்.

ஈஸ்வரியிடம் அமிர்தா அம்மா மன்னிப்பு: இதனிடையே இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மா, அவரை பார்க்க வருவதாக காணப்படுகிறது. அப்போது அடுத்தடுத்து அமிர்தா மற்றும் எழிலிடம் ஈஸ்வரி, முகம் கொடுத்து பேசாமல் உள்ளார். இதுகுறித்து அமிர்தாவின் அம்மா கேள்வி எழுப்ப, பாட்டியின் கோரிக்கை குறித்து அமிர்தா கூறுகிறார். இது நியாயமான ஆசை தானே, தான் எழிலிடம் பேசட்டுமா என்று அவர் கேட்கிறார். ஆனால் தானே எழிலிடம் பேசுவதாக கூறுகிறார் அமிர்தா. இதையடுத்து ஈஸ்வரியின் கோபம் குறித்து அவரிடமே பேசும் அமிர்தாவின் அம்மா, அவர்களை மன்னிக்க கேட்டுக் கொள்கிறார்.

ஃபைன் கட்டிய பழனிச்சாமி: முன்னதாக, பாக்கியாவிடம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான சமையலுக்கான பணத்தை கொடுக்க செல்கிறார் பழனிச்சாமி. அதற்கு பாக்கியா, அன்பை விலைபேச வேண்டாம் என்று கூறுகிறார். இந்த வார்த்தைகள் பழனிச்சாமியின் காதில் தேனாக பாய்கின்றன. இதே மூடுடன், சாலையில் வண்டியோட்டி, சிக்னலில் நிற்காமல் வந்து ஃபைன் கட்டுகிறார் பழனிச்சாமி. இதனிடையே, ரெஸ்டாரெண்டில் செல்வியின் மொமைபிலிலிருந்து இனியாவின் நம்பரை திருட்டுத்தனமாக பெறும் விமல், அவரை அவரது கல்லூரிக்கே நேரில் வந்து சந்திக்கிறார். இந்த காதல் ட்ராக் இனிமேல் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X