Baakiyalakshmi serial: என் பையன் வீட்டைவிட்டு போயிட்டான்.. கண்ணீர் விட்டு கதறிய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை பார்க்க முடிந்தது. குழந்தை பெற்றுக் கொள்ள எழிலை ஈஸ்வரி வற்புறுத்திய நிலையில், அவர்களுக்குள் இந்த பிரச்சினை பூதாகரமாகிறது. எழிலை தொடர்ந்து பல விஷயங்களை சுட்டிக்காட்டி ஈஸ்வரி திட்டித் தீர்க்கிறார்.
அவர்களின் வாக்குவாதம் முற்றிய நிலையில், இடையில் நுழையும் பாக்கியா, எழிலை அமிர்தா மற்றும் நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறுகிறார். இதையடுத்து எழில் அமிர்தா, நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். இதனால் பாக்கியா மட்டுமில்லாமல் எழிலுடன் மல்லுக்கு நின்ற ஈஸ்வரியும் பரிதவிக்கும் நிலை காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும்வகையில் அமைந்திருந்தது. சினிமா ஆசையை தூக்கி வீசிவிட்டு நல்ல வேலையை தேடிக் கொள்ளுமாறும் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறும் எழிலை தொடர்ந்து ஈஸ்வரி வற்புறுத்துகிறார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இந்த விஷயத்தில் எழிலை தூண்டி விடுவதாக அமிர்தாவையும் ஈஸ்வரி திட்டிய நிலையில், இதுகுறித்து ஈஸ்வரியிடம் எழில் கேள்வி எழுப்புகிறார். தான்தான் குழந்தை தற்போதைக்கு வேண்டாம் என்று கூறியதாக கூறுகிறார்.
முற்றிய வாக்குவாதம்: இதை ஏற்றுக் கொள்ளாத ஈஸ்வரி, எழில் வாழ்க்கையில் அமிர்தா வந்தவுடன் எந்த நல்லதும் நடக்கவில்லை என்றும் இதற்கு அமிர்தாவின் நேரம்தான் காரணம் என்றும் அவர் கூற, இதனால் எழில் கொந்தளிக்கிறார். பாக்கியா, செழியன், ராமமூர்த்தி என அடுத்தடுத்து இவர்கள் இருவரின் சண்டையை சமாதானப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளும் வேலைக்கு ஆகாத சூழலில், தொடர்ந்து எழில் பாட்டியிடம் மிகவும் கோபத்துடன் பேசுகிறார். இதனால் தன்னுடைய பேச்சை கேட்டுக் கொண்டு இந்த வீட்டில் இருப்பதானால் இருக்கலாம் இல்லையென்றால் வீட்டைவிட்டு வெளியேறலாம் என்று ஈஸ்வரி கூறுகிறார்.
வீட்டைவிட்டு வெளியேறிய எழில்: இதையடுத்து எழிலை வீட்டைவிட்டு வெளியேறுமாறு பாக்கியா கூறுகிறார். தன்னுடைய அம்மா பாக்கியா கூறுவதை பொறுப்பாக செய்து முடிக்கும் குணமுடைய எழில், இந்த விஷயத்திலும் அவர் கூறுவதை அப்படியே கேட்கிறார். யார் தடுத்தாலும் கேட்காத எழில், அமிர்தா மற்றும் நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மனமுடைகின்றனர். ஈஸ்வரி, பாக்கியாவிடம் வந்து நியாயம் கேட்கிறார். எழில் நல்வாழ்க்கைக்காக தான் பேசியதாகவும் ஆனால் பாக்கியா, இடையில் நுழைந்து, எழிலை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
கதறி அழுத பாக்கியா: இதையடுத்து பாக்கியா மனமுடைந்து அழுகிறார். அவரை தேற்றும் செழியன் உள்ளிட்டவர்கள், மீண்டும் எழிலை கால் செய்து வீட்டிற்கு அழைக்குமாறும், பாக்கியா அப்படி செய்தால் எழில் கண்டிப்பாக அதை செய்வான் என்றும் கூறுகின்றனர். ஆனால் தன்னுடைய நல்ல வாழ்க்கையை தன்னுடைய சாதனைகளை இந்த வீட்டில் இருந்தால் எழிலால் கண்டிப்பாக செய்ய முடியாது என்றும் அவர் வெளியேறட்டும் என்றும் பாக்கியா கூறுகிறார். மீண்டும் நல்ல இயக்குநராக மாறிவிட்டு எழில் இந்த வீட்டிற்கு வருவான் என்றும் பாக்கியா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
எழில் ஆதங்கம்: இதனிடையே ஹோட்டலில் சென்று தங்கும் எழில், அமிர்தாவிடம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இதுவரை வீட்டில் அதிகமாக சண்டைகள் வந்தபோதும் தன்னை வீட்டைவிட்டு வெளியேறுமாறு அம்மா கூறியதில்லை என்றும் தற்போது அவர் இதுபோல கூறியிருக்கிறார். பார்த்துக் கொள்ளலாம் என்றும் எழில் கூறுகிறார். தான் பாட்டியுடன் ஏற்பட்ட சண்டையை கூறியிருக்கக்கூடாது என்று அமிர்தாவும் எழிலிடம் மன்னிப்பு கேட்கிறார். எழில் தன்னுடைய குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்ததாகவும் தான் அவரது வாழ்க்கையில் வந்தபிறகுதான் அவருக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமிர்தா புலம்ப, அவரை எழில் சமாதானப்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











