Baakiyalakshmi: அமிர்தாவை வரவைக்க திட்டம் தீட்டும் கணேஷ்.. மீண்டும் சிக்கலில் பாக்கியா குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அதிகமான ஆதரவுடன் சேனலின் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. முன்னதாக இந்த சீரியல் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது டிஆர்பியில் சற்று கீழ் இறங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோட் ஒளிபரப்பாகின. திருச்செந்தூரில் சந்திக்கும் பாக்கியா மற்றும் கோமதி இருவரும் நட்பாகி, சில தினங்களிலேயே ஒருவருக்கு மற்றொருவர் பிரச்சினைகளில் கைக்கொடுப்பதாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்பட்டன.
தற்போது சங்கமம் எபிசோட்கள் நிறைவடைந்து வழக்கமாக இயல்பு எபிசோட்களுக்கு இரு சீரியல்களும் திரும்பியுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை மீண்டும் தன்னிடம் கொண்டு வரும் வகையில் திட்டம் தீட்டுவதாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன. தன்னுடைய அப்பா சாக கிடப்பதாக தன்னுடைய அம்மாவை வைத்து பாக்கியாவிற்கு போன் செய்ய வைக்கிறார் கணேஷ். அமிர்தாவையும் குழந்தையையும் பார்க்க அவர் கடைசியாக விரும்புவதாகவும் அவர் பாக்கியாவிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோடுகளில் இந்த தொடர் இணைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள இந்த சீரியலில் அடுத்தடுத்து பரப்பரப்புக்கான அடித்தளத்தை சீரியல் இயக்குனர் தற்போது கொடுத்து வருகிறார். அந்த வகையில் இறந்ததாக கருதப்படும் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் முன்னதாக வந்து தன்னுடன் மனைவி மற்றும் குழந்தை நிலாவை அனுப்பும்படி கேட்டு தகராறு செய்திருந்தார்.
மீண்டும் சிக்கலை உருவாக்கும் கணேஷ்: அவரை கோபி, செழியன் உள்ளிட்டவர்கள் இணைந்து துரத்தி அனுப்பியிருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தன்னுடைய மனைவி மற்றும் மகளை அடையும்வகையில் அடுத்தடுத்த திட்டங்களை தீட்டி வருகிறார், அந்த வகையில் தற்போது தன்னுடைய பெற்றோரை மிரட்டி தன்னுடைய திட்டங்களுக்கு பணிய செய்து வருகிறார். அந்த வகையில் பாக்யாவிற்கு கால் செய்யும் கணேசன் அம்மா, தன்னுடைய கணவர் இறக்கும் தருவாயில் உள்ளதாகவும் அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை பார்க்க விரும்புவதாகவும் அதற்கு பாக்யா உதவி செய்ய வேண்டும் என்றும் அழுதபடி கேட்கிறார்.
திகைப்பில் பாக்கியா குடும்பத்தினர்: இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினருடன் டிஸ்கஸ் செய்துவிட்டு சொல்வதாக பாக்யா அவருக்கு உறுதி கொடுக்கிறார். கோபி, தன்னுடைய மாமியார் ஈஸ்வரி, மாமனார் உள்ளிட்டவர்களிடம் இது குறித்து பாக்யா பேசுகிறார். ஆனால் அவர்கள் உறுதியாக இதற்கெல்லாம் அனுமதிக்க முடியாது என்று கூறி விடுகின்றனர். இதையே அமிர்தாவின் மாமியாரிடமும் பாக்யா கூறிவிடுகிறார். ஆனால் தன்னுடைய கணவர் இறக்கும் தருவாயில் உள்ளதால் பாக்கியா மீண்டும் குடும்பத்தினரிடம் பேச வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார். இது குறித்து எழில் மற்றும் அமிர்தாவிடமும் பாக்யா கூறும் நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது தெரியாமல் அவர்கள் திகைக்கின்றனர்.
கோபத்தில் கணேஷ்: இந்நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் கணேஷ் மிகவும் ஆத்திரத்துடன் பேசுவதாக காணப்படுகிறது தன்னுடைய மனைவி மற்றும் மகளை தன்னிடம் இருந்து பிரித்த அவர்கள் தான் தற்போது ஒன்று சேர்க்கவும் உதவ வேண்டும் என்று அவர் கோபத்துடன் கூறுகிறார். தங்களை பொய் சொல்ல வைத்து விட்டதற்காக அவர்கள் கோபப்படுகின்றனர். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது கணேஷ் அப்பா உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் பாக்யா இந்த விஷயத்தில் கண்டிப்பாக அமிர்தா மற்றும் குழந்தையை அழைத்துச் செல்வதாக தான் தீர்மானிப்பார் .அதற்கு எழிலும் கண்டிப்பாக சம்மதிப்பார். இந்நிலையில் கணேஷ் அடுத்த கட்டமாக என்ன செய்ய முற்படுவார் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











