Baakiyalakshmi serial: ஈஸ்வரி கிச்சனை துவங்கிய கோபி.. பாக்கியா, எழிலுக்கு அழைப்பில்லை!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக தொடர்ந்து சேனலின் இரண்டாவது இடத்தில் இடம் பெற்று வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய கணவன் கோபியால் கைவிடப்பட்ட நிலையிலும் தனக்கு மிகவும் சிறப்பாக தெரிந்த சமையலையே தன்னுடைய பிசினசுக்கான விஷயமாக எடுத்துக் கொள்ளும் பாக்யா தொடர்ந்து மசாலா பிசினஸ், கேன்டீன் கான்ட்ராக்ட், சமையல் கான்ட்ராக்ட் ஆகியவற்றை செய்து தற்போது ரெஸ்டாரெண்ட் திறப்பையும் செய்து முடித்துள்ளார். அவரது இந்த வளர்ச்சியை பொறுக்க முடியாத கோபி பாக்யாவின் அடுத்தடுத்த செயல்பாடுகளை குலைக்கும் வகையில் சதி செய்து வருகிறார்.
பழனிச்சாமியுடன் பாக்கியாவை தொடர்பு படுத்தி பேசி மனதளவிலும் காயத்தை ஏற்படுத்துகிறார் கோபி. இந்நிலையில் பாக்கியாவிற்கு போட்டியாக அவர் கிளவுட் கிச்சனையும் துவங்கியுள்ளார். மேலும் அதற்கு தன்னுடைய அம்மாவின் பெயரையே வைத்துள்ளார். முன்னதாக பாக்கியாவும் ஈஸ்வரி பெயரிலேயே அடுத்தடுத்த தன்னுடைய சமையல் தொழில்களை துவங்கிய நிலையில் தற்போது கோபியும் அவரது பெயரிலேயே தொடங்கியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று செழியன் கூற, குழப்பத்தை ஏற்படுத்தினால் பாக்கியம் அந்த பெயரை எடுத்துவிட்டு வேறு பெயரை பயன்படுத்தி கொள்ளட்டும், ஈஸ்வரி தன்னுடைய அம்மா என்று கோபி கூறுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் சிறப்பான இடத்தை பெற்று தொடர்ந்து டிஆர்பியிலும் அதிக பள்ளிகளை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடர் தொடர்ந்து விஜய் டிவியின் இரண்டாவது முன்னணி சீரியலாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது, பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்த போதிலும் பாக்கியாவின் தொடர் வளர்ச்சி கோபிக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. அவர் தனியாகவும் ராதிகாவுடன் இணைந்தும் பாக்கியாவிற்கு எதிராக பல சதி செயல்களை செய்து வருகின்ற நிலையில் அவரது பிசினசில் கவனம் செலுத்தாமல் கோட்டை விடுகிறார் இதனால் அவர் தனது பிசினஸை இழுத்து மூடும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்.
கிளவுட் கிச்சனை துவங்கிய கோபி: இதனிடையே மசாலா பிசினஸில் துவங்கிய தன்னுடைய வெற்றி பயணத்தை தற்போது ரெஸ்டாரெண்ட் வரை கொண்டு வந்து உள்ளார் பாக்கியா, தன்னுடைய பிசினஸ் தோல்வி கண்டதை கூட பொருட்படுத்தாத கோபி, பாக்கியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அவரது ரெஸ்டாரெண்ட் திறப்பை குலைக்க சதி செய்கிறார், ஆனால் அதில் எல்லாம் மீண்டு தற்போது ரெஸ்டாரெண்ட்டை நடத்தி வருகிறார் பாக்கியா. இதனிடையே பாக்கியாவிற்கு போட்டியாக தனக்கு சிறிதும் அனுபவம் இல்லாத உணவு தொழிலிலேயே தன்னுடைய புது பிசினஸை துவக்கியுள்ளார் கோபி. கிளவுட் கிச்சன் துவங்கியுள்ள அவருக்கு ராதிகா பண உதவி கொடுத்து கை தூக்கி விடுகிறார்.
கோபி போட்டியில்லை: இதனால் ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி தனது கிளவுட் கிச்சனை ஈஸ்வரி கிச்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் பாக்கியா மற்றும் எழிலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஃபீலிங் இல்லையா என்று செல்வி பாக்கியாவிடம் கேட்க தான் அவரை எப்போதும் ஒரு போட்டியாக கருதுவது இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார் பாக்கியா. அதனால் அவர் எந்த தொழிலை துவங்கினாலும் தனக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பாக்கியா தெரிவிக்கிறார்.
பாக்கியா, எழிலுக்கு அழைப்பில்லை: இதனிடையே தான் அம்மா பிள்ளை என்பதால் தனக்கு இந்த திறப்பு விழாவில் அழைப்பு இல்லை என்று எழிலும் கூறுகிறார், அது உண்மைதானே நான் அம்மா பிள்ளை தான் என்றும் அவர் செல்விக்கு தெளிவுபடுத்துகிறார். முன்னதாக இரவு நேரத்தில் சாலையில் தனியாக நின்று கொண்டிருந்த ராதிகாவின் மகள் மயூவை அழைத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து தன்னுடைய வீட்டிற்கே அழைத்து வரும் பாக்கியா, ஜூஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து மயூவை உபசரிக்கிறார். இதை பார்க்கும் ராதிகா, தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து சிறப்பான காட்சி அமைப்புகள் காணப்பட்டன.


Click it and Unblock the Notifications











