Baakiyalakshmi:பாக்கியாவை பழிவாங்க கோபி செய்த செயல்.. ஈஸ்வரி சந்திக்கப்போகும் பிரச்சினைகள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மற்றும் ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இன்றைய எபிசோடில் தன்னுடைய அம்மாவை சமாதானப்படுத்தி அவரை தன்னுடன் ராதிகா வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தி அதற்கு சம்மதிக்க வைக்கிறார் கோபி.
தொடர்ந்து பாக்கியாவை இதன் மூலம் தான் பழி வாங்கி விட்டதாக ராதிகாவிடம் சந்தோஷப்படுகிறார். ஆனால் அடுத்ததாக வெளியாகி உள்ள பிரமோவில் பாக்கியா இதற்கு எதிர்மாறாக நடப்பதாக காணப்படுகிறது. இதனால் கோபி, ராதிகா மட்டுமில்லாமல் ஈஸ்வரியும் அதிர்ச்சிக்குள்ளாவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைந்துள்ளது. கோபியை வீட்டைவிட்டு வெளியேறுமாறு குடும்பத்தினர் அனைவரும் கூறிய சூழலில், அவர் இது குறித்து ராதிகாவிடம் தொடர்ந்து புலம்புகிறார். இதையடுத்து அவர் தன்னுடைய அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக ராதிகாவிடம் சொல்லிவிட்டு ஈஸ்வரியை போய் பார்க்கிறார். அங்கு ஈஸ்வரியிடம் சென்டிமெண்டாக பேசி அவரை தன்னுடன் கிளம்பி ராதிகா வீட்டிற்கு வருமாறு கோபி கூறுகிறார். ஆனால் ராதிகா, அவருடைய அம்மா, அண்ணா, அண்ணி என அனைவரும் இருக்கும் இடத்தில் தான் எப்படி இருக்க முடியும் என்று ஈஸ்வரி கேள்வி எழுப்புகிறார்.
ஈஸ்வரியின் அதிரடி முடிவு: ஆனால் தனக்காக தன்னுடைய அம்மா தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் தான் மீண்டும் மாரடைப்பு வந்து இறந்து விடுவேன் என்றும் கோபி சென்டிமெண்டாக பேசுகிறார். இதனால் வருத்தப்படும் ஈஸ்வரி, கோபியுடன் வருவதற்கு சம்மதிக்கிறார். தொடர்ந்து பாக்கியா மற்றும் எழிலிடம் சென்று பேசும் கோபி, அவர்கள் சந்தோஷமாக இருப்பதை சுட்டிக்காட்டி அவர்களின் சந்தோஷம் நீடிக்காது என்றும் இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களுக்கு அது தெரிய வரும் என்றும் கூறுகிறார். இந்நிலையில் தொடர்ந்து ராதிகாவிடம் சென்று தான் தன்னுடைய அம்மாவை தன்னுடன் அழைத்து வரப்போவதாக கோபி கூறுகிறார்.
கோபியின் திட்டம்.. அதிர்ச்சியில் ராதிகா: இதைக் கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். தன்னுடைய அம்மா, தான், மயூ இவர்களெல்லாம் கோபிக்கு சொந்தங்களாக தெரியவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார். அவருடைய அம்மா மட்டுமே சொந்தமாக தெரிகிறதா என்றும் ராதிகா கேட்கும் கேள்விக்கு கோபியால் பதில் சொல்ல முடியவில்லை. தன்னுடைய அம்மா, அப்பாவை தனக்கு சப்போர்ட்டாக தொடர்ந்து பாக்கியா நினைப்பதாகவும் ஈஸ்வரியை அங்கிருந்து தான் அழைத்து செல்வதால் பாக்கியாவை பழிவாங்கிவிட்டதாகவும் கோபி கூறுகிறார். இதைக் கேட்கும் ராதிகா, பாக்கியாவை பழிவாங்குவதற்காக இப்படி ஒரு விஷயத்தை கோபி செய்துள்ளாரா என்று கேள்வி எழுப்புகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
ஈஸ்வரிக்கு வழிவிட்ட பாக்கியா: இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியலின் பிரமோவில் கோபியுடன் ஈஸ்வரி பெட்டியுடன் கிளம்பி போவதாக காணப்படுகிறது. இதையடுத்து பாக்கியா அழுது, ஆர்ப்பாட்டம் செய்வார் என்று ஈஸ்வரி, கோபி, ராதிகா எதிர்பார்க்கின்றனர். ஆனால் பாக்கியாவோ, ஈஸ்வரி செல்வதற்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பதாக இந்த ப்ரமோவில் காணப்படுகிறது. இதனால் பாக்கியாவை பழிவாங்குவதாக நினைத்து தன்னுடைய அம்மாவை கூட அழைத்து செல்லும் கோபி ஏமாற்றம் அடைகிறார். இந்நிலையில் ராதிகாவின் வீட்டிற்கு ஈஸ்வரி செல்வதாகவும் ராதிகாவின் அம்மா முழிப்பதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது. இவர்கள் இருவரும் எப்போதும் சண்டை போடும் சூழல்கள் அமைந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வாழ்வது எத்தகைய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை அடுத்தடுத்து எபிசோட்களில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











