Baakiyalakshmi: எழில் ஜெயிச்சிட்டு திரும்ப வீட்டுக்கு வரட்டும்.. ஈஸ்வரியை சமாதானப்படுத்திய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை கொடுத்து வருகிறார் இயக்குநர். வீட்டை விட்டு எழில், அமிர்தா மற்றும் நிலாவுடன் வெளியேறிய நிலையில், அது தொடர்பான காட்சிகள் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
எழிலை வீட்டை விட்டு வெளியேறுமாறு பாக்கியா கூறிய நிலையில் தன்னுடைய அம்மாவின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அவரும் வெளியேறுகிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மிகப்பெரிய மன வருத்தத்தில் உள்ளனர். இதனிடையே இந்த விஷயத்தை தன்னுடைய அப்பா கோபியிடம் இனியா கூறுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை காண முடிந்தது. ஈஸ்வரி மற்றும் எழிலுக்கு இடையில் சண்டை மூண்ட நிலையில், அவரை வீட்டைவிட்டு வெளியேறுமாறு பாக்கியா கூறுகிறார். தன்னுடைய அம்மா கூறினால் அதில் கண்டிப்பாக நியாயம் இருக்கும் என்று நினைக்கும் எழில், அமிர்தா மற்றும் நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். இதனால் பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எழிலிடம் மல்லுக்கு நின்ற ஈஸ்வரியும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறார்.
வருத்தத்தில் ஈஸ்வரி: தான் எழிலின் நல்ல வாழ்க்கைக்காக மட்டுமே கடுமையாக பேசியதாகவும் ஆனால் அதை புரிந்துக் கொள்ளாமல் எழில் நடந்துக் கொண்டதாகவும் ஈஸ்வரி வருத்தப்படுகிறார். எழில் இல்லாமல் இந்த வீட்டில் இருப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் அவரை சமாதானப்படுத்தும் பாக்கியா, எழில் கண்டிப்பாக தன்னுடைய சாதனைகளை துரத்தி, சிறப்பான இயக்குநராக மீண்டும் இந்த வீட்டிற்கு வருவான் என்றும், அதன்பின்பு ஈஸ்வரி சொன்ன விஷயங்களை எழில் கண்டிப்பாக செய்வார் என்றும் பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

கோபிக்கு தெரியவரும் உண்மை: இதனிடையே இனியாவிற்கு கோபி கால் செய்கிறார். அவர் எப்படி இருக்கிறார் என்பதாக விசாரிக்கிறார். ஆனால் இனியாவோ, எழில், அமிர்தா மற்றும் நிலாவை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், அம்மாதான் எழிலை வெளியேற சொன்னதாகவும் அழுதுக் கொண்டே சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகும் கோபி, எழிலுக்கு கால் செய்கிறார். அவரை ரீச் செய்ய முடியாத நிலையில், தொடர்ந்து அமிர்தாவிற்கு கால் செய்து அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்துக் கொள்கிறார். அங்கு வந்து அவர்களிடம் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

சமாதானப்படுத்தும் கோபி: அவ்வளவு பெரிய வீட்டைவிட்டு, ஹோட்டலில் வந்து தங்குவதற்கு தலையெழுத்தா என்று எழிலிடம் கேட்கிறார். குடும்பம் என்றால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதற்காக எழிலின் அம்மா எப்படி வீட்டைவிட்டு வெளியேற சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பேசும் எழில், ரொம்பத்தான் அக்கறை என்று கூறுகிறார். பாக்கியா கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் நடந்துக் கொண்டதாகவும் இதை யாரும் கேள்வி கேட்கவில்லையா என்றும் கோபி கேட்கிறார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து, தனக்கும் அம்மாவிற்கும் இடையில் சண்டை மூட்டுகிறீர்களா என்று எழில் கேள்வி எழுப்புவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











