Baakiyalakshmi: பழனிச்சாமிக்கு விருப்பம் இருக்கு.. பாக்கியாவிடம் விஷயத்தை போட்டுடைத்த சுந்தரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்றைய எபிசோடில் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பழனிச்சாமியின் விவகாரம் வெடித்து கிளம்பியுள்ளது. பாக்கியாவை பழனிச்சாமிக்காக பெண் பார்க்கப் போவதாக பழனிச்சாமியின் அக்கா கூறுவதை கேட்டு ஆத்திரமடைகிறார் கோபி.

தொடர்ந்து பாக்கியாவின் ரெஸ்டாரெண்டிற்கு சென்று கேவலமாக பேசுகிறார். இதைத்தொடர்ந்து மிகுந்த ஆத்திரப்படும் பாக்கியா, இது குறித்து நேரடியாக கேட்க பழனிச்சாமியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு பழனிச்சாமியின் அக்கா, அம்மா இருவரும் மட்டுமே காணப்படுகின்றனர். பழனிச்சாமியின் அக்கா சுந்தரி, பாக்யாவிடம் நேரடியாகவே அவர்களது திருமணம் குறித்து பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. நீண்ட நாட்களாக பாக்கியலட்சுமியை திருமணம் செய்யும் விருப்பத்துடன் பழனிச்சாமி காணப்பட்டு வந்தார். அவரது விருப்பத்தை அவரது அம்மாவும் அக்கா சுந்தரியும் பார்த்து புரிந்து கொள்கின்றனர். பழனிச்சாமி இதை மறுத்தாலும் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இருவரும் இதை தெரிந்து கொள்கின்றனர். பாக்கியா தன்னுடைய மகனுக்கு மிகவும் ஏற்றவர் என்பதில் பழனிச்சாமியின் அம்மா மிகவும் உறுதியாக இருக்கிறார். அவருக்கு சுந்தரியும் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கிறார்.

சண்டே ஸ்பெஷல்: நேற்றைய தினம் பாக்கியலட்சுமி சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பானது. அதில் இனியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பழனிச்சாமி, அவர் அம்மா, அக்கா மற்றும் விமல் என அனைவரும் கலந்து கொள்கின்றனர். அப்போது வாசலில் வைத்து பழனிசாமியின் அக்கா மற்றும் அம்மா இருவரும் தேங்காய், பூ, பழம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கூற இது குறித்து கோபி விசாரிக்கிறார். அப்போது பாக்கியாவை பழனிச்சாமிக்கு பேசி முடிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக சுந்தரி கூறுகிறார். இதனால் மிகவும் அதிர்ச்சிக்கும் கடுப்புக்கும் உள்ளாகும் கோபி இதுகுறித்து மறுநாள் காலை பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட்டிற்கு வந்து நேரடியாக கத்திக் கூப்பாடு போடுகிறார்.

கேவலமாக பேசும் கோபி: நீ எல்லாம் ஒரு அம்மாவா என்று பலவாறாக பாக்கியாவை திட்டுகிறார். இந்த வயதில் மணப்பெண்ணாக நிற்கப் போகிறாயா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பதிலுக்கு பாக்கியாவும் கத்தி தீர்க்கிறார். இந்நிலையில் நீ கெடுவதுடன் மட்டுமில்லாமல் இனியாவையும் பழனிச்சாமியின் அக்கா மகனுடன் கோர்த்து விடுகிறாயா, இதெல்லாம் உன்னுடைய திட்டம் தானா என்றும் கோபி அனைத்து விஷயங்களையும் பாக்கியாவிடம் கேட்கிறார். இதை தொடர்ந்து அவரை வெளியே செல்லுமாறு பாக்கியா கத்துகிறார். இதையடுத்து பாக்கியாவிற்கு ரெஸ்டாரெண்டில் இருப்பு கொள்ளவில்லை.

திருமண விஷயத்தை போட்டுடைக்கும் சுந்தரி: உடனடியாக பழனிச்சாமியின் வீட்டுக்கு செல்கிறார் பாக்கியா. அங்கு அவரது அம்மா மற்றும் அக்காவிடம் இது குறித்து கேட்க தயக்கத்துடன் அவர் உட்கார்ந்து இருக்கும் நிலையில் பழனிச்சாமியின் அக்கா சுந்தரியே, இது குறித்து பாக்கியாவுடன் பேசுகிறார். பழனிச்சாமிக்கு பாக்கியா மீது விருப்பம் இருப்பதாகவும் அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வது குறித்தும் சுந்தரி கேள்வி எழுப்புகிறார். ஆனால் பாக்கியாவோ, தனக்கு இதில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை என்று மறுக்கிறார். மேலும் பழனிச்சாமியிடம் இந்த விஷயத்தை கூறினால் அவரும் இதை மறுக்கவே செய்வார் என்றும் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழகக் கூடாதா உடனே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமா என்றெல்லாம் பலவாறாக கேள்வி கேட்டுவிட்டு அங்கிருந்து பாக்கியா கிளம்புகிறார்.

பழனிச்சாமியிடம் பேசும் பாக்கியா: இதுகுறித்து பழனிச்சாமிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அவரது அம்மா கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து ரெஸ்டாரெண்டுக்கு திரும்பும் பாக்கியா உடனடியாக இதுகுறித்து பழனிச்சாமியிடம் பேச அவரது கபேவிற்கு செல்கிறார். அங்கு அவரும் நின்று கொண்டிருக்க இருவரும் சூப்பர் மார்க்கெட் போக வேண்டும் என்று பேசிக் கொள்கின்றனர். இதையடுத்து தான் காரில் செல்வதாகவும் கூட வரவேண்டும் என்றும் பழனிச்சாமி கேட்கிறார். இதையடுத்து இருவரும் காரில் சூப்பர் மார்க்கெட் செல்கின்றனர். இதையடுத்து இந்த விஷயம் குறித்து பழனிச்சாமிடம் பேச இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பாக்கியா பேச முயல்வதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X