Baakiyalakshmi serial: ஈஸ்வரியுடன் ராதிகா வீட்டிற்கு வரும் கோபி.. இனிமேல் தான் இருக்கு கச்சேரி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. கோபியை வீட்டை விட்டு வெளியேற செழியன், எழில், பாக்கியா உள்ளிட்டவர்கள் உறுதியுடன் கூறுகின்றனர். இதனால் பாக்கியாவிடம் அவமானப்பட்டதாக நினைக்கிறார் கோபி. தொடர்ந்து பாக்கியாவை பழிவாங்கும் வகையில் ஈஸ்வரியை தன்னுடன் ராதிகா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் கோபி.

முன்னதாக ராதிகாவின் அம்மா மற்றும் ஈஸ்வரி இடையில் பல பிரச்சனைகள் உள்ள சூழலில் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் எப்படி தாக்குப் பிடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ராதிகாவிடம் சிக்த் தவிக்கும் கோபி, தற்போது தன்னுடைய அம்மா மற்றும் மாமியாருக்கு இடையில் நடைபெறும் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கவும் தயாராகியுள்ளதாகவே தெரிகிறது.

Vijay TV s Baakiyalakshmi serial today 17th May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களிடையே மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் முக்கியமான காட்சிகளை இன்றைய தினம் ஒளிபரப்பவுள்ளது. கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற செழியன், எழில், பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வலியுறுத்திய சூழலில் இதன் மூலம் தன்னை பாக்கியா பழிவாங்கியதாக நினைக்கிறார் கோபி. இந்நிலையில் பதிலுக்கு பாக்கியாவை பழிவாங்கவும் அவர் கிட்டம் தீட்டுகிறார். இதற்கு தன்னுடைய அம்மா ஈஸ்வரியை அவர் பயன்படுத்துகிறார்.

திகைக்கும் குடும்பத்தினர்: ஈஸ்வரியிடம் சென்டிமென்ட்டாக பேசும் கோபி, அவரை தன்னுடன் ராதிகா வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். கோபி மாரடைப்பு, இறப்பு என அடுத்தடுத்து பேச மனம் இறங்கும் ஈஸ்வரி அவருடன் செல்வதற்கு சம்மதிக்கிறார். இந்நிலையில் ராதிகாவுடன் பெட்டி படுக்கையுடன் கிளம்பும் கோபி தன்னுடைய அம்மாவை அழைக்க, இதனால் செழியன், எழில் மற்றும் இனியா அனைவரும் திகைக்கின்றனர். அவர்கள் மட்டுமில்லாமல் அமிர்தா மற்றும் ஜெனி என அனைவரும் திகைப்பிற்கு உள்ளாகி தொடர்ந்து ஈஸ்வரியை அந்த வீட்டை விட்டு போக வேண்டாம் என்று கேட்கின்றனர்.

ஈஸ்வரியின் உறுதியான முடிவு: ஈஸ்வரி இல்லையென்றால் தன்னுடைய குழந்தை ஏங்கிப் போய்விடும் என்று ஜெனி கூறுகிறார். இந்நிலையில் முன்னதாக தன்னுடைய கணவர் ராமமூர்த்தியிடம் தான் கோபியுடன் செல்ல இருப்பதை கூறுகிறார் ஈஸ்வரி. இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து ஈஸ்வரி உறுதியாக இருப்பதை பார்த்து இங்கிருந்து சென்றால் மட்டுமே பாக்கியாவின் அருமை ஈஸ்வரிக்கு தெரிய வரும் என்று அவர் கூறுவதாகவும் இன்றைய எபிசோட் அமைந்திருந்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது பாக்கியா எதிரில் வருகிறார். தொடர்ந்து ஈஸ்வரி கோபியுடன் செல்லவிருப்பதை குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ஈஸ்வரிக்கு வழிவிட்ட பாக்கியா: இதையடுத்து ஈஸ்வரிக்கு கிளம்பி செல்ல வழி விடுகிறார் பாக்கியா. இதனால் ஈஸ்வரி, கோபி மற்றும் ராதிகா என அனைவரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். பாக்கியா கதற கதற ஈஸ்வரியை அழைத்து செல்ல வேண்டும என்பதே கோபியின் திட்டமாக இருந்தது. இதையடுத்து தன்னுடைய மகனின் நலனுக்காக தான் உடன் செல்வதாக ஈஸ்வரி பாக்கியாவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கும் பாக்கியா, தான் எதுவும் சொல்லவில்லையே என்று பதிலளிக்கிறார். தொடர்ந்து தான் எப்போது செல்வேன் என்று எதிர்பார்த்து காத்திருந்தாயா என்று பாக்கியாவை கேள்வி கேட்கிறார் ஈஸ்வரி. இதையடுத்து ராமமூர்த்தி ஈஸ்வரியை கண்டிக்கிறார்.

சண்டைக்கு தயாராகும் கோபி: தொடர்ந்து ஈஸ்வரி, கோபியுடன் கிளம்பி போகிறார். அங்கு ராதிகாவின் அம்மா இவர்களை அதிர்ச்சியுடன் பார்க்கிறார். ராதிகாவின் அம்மா மற்றும் ஈஸ்வரி இருவருக்கும் இடையில் கோபி மற்றும் ராதிகா குறித்து அடுத்தடுத்து முன்னதாக பல சண்டைகள் வந்த சூழலில் போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் ஒரு பிரச்சனையை ராதிகாவின் அம்மா எடுத்து சென்றது நடந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X