Baakiyalakshmi serial: காருடன் ஜெனியை கடத்திய செழியன்.. முழி பிதுங்கிய பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளது. தன்னுடைய கணவன் கோபியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மாமனார், மாமியார், மகன்கள், மருமகள்கள், மகள் என தன்னுடைய குடும்பத்தினரை கண் போல பாதுகாத்து வருகிறார் பாக்கியா. அடுத்தடுத்து தன்னுடைய கேரியரை சிறப்பாக்கவும் அதன்மூலம் தன்னுடைய வாழ்வாதாரத்தை பெருக்கவும் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில் பாக்கியாவை பிரிந்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்யும் கோபிக்கு அவரது பிசினஸ் பறிபோகிறது.

இதனிடையே பாக்கியாவின் மகன்கள் எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சினைகள் தலை தூக்குவதால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. இதனால் குடும்பமே பறிதவிக்கிறது. செழியனின் வாழ்க்கையில் மாலினியின் வரவால், பிரச்சினை வெடிக்க வீட்டை விட்டு வெளியேறும் ஜெனி, இதனால் தவிக்கும் செழியன் மற்றும் ஜெனியின் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்திற்கு அவரது அப்பா அப்ளை செய்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. இதனிடையே இறந்ததாக நினைக்கப்பட்ட அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷ் உயிருடன வந்ததால் எழில் வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial today (18th January 2024) episode

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. புத்தாண்டு துவங்கியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது வாரத்தின் டிஆர்பி வெளியாகியுள்ளது. இதில் அதிக புள்ளிகள் பெற்று சேனலின் இரண்டாவது தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. தொடர்ந்து இந்த சீரியலில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாக்கியா, அவரது மகன்கள் செழியன், எழில் ஆகியோரின் வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்த தொடரில் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial today (18th January 2024) episode

பிசினசை கோட்டை விடும் கோபி: தன்னுடைய கணவன் கோபியின் காதல் விவகாரம் தெரிந்து அவரை விவாகரத்து செய்கிறார் பாக்கியா. 25 ஆண்டுகள் வாழ்ந்த தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்கிறார். அந்த வகையில் பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்கிறார். ஆனாலும் பாக்கியாவின் செயல்பாடுகளில் தொடர்ந்து மூக்கை நுழைத்து அவரை அலைகழிக்கிறார். இதனால் தன்னுடைய பிசினசை கவனிக்காமல் கோட்டை விடுகிறார். கிரெடிட் கார்ட் கட்டக்கூட வழியில்லாமல் அசிங்கப்படுகிறார்.

பாக்கியாவின் வைராக்கியம்: மறுபக்கம் தன்னுடைய கணவன் தன்னை கைவிட்டாலும் தான் நேசிக்கும் சமையல் கலையை விடாமல் பிடித்து அதன்மூலம் அடுத்தடுத்த பிசினஸ்களை வெற்றிகரமாக செய்கிறார் பாக்கியா. மசாலா பிசினஸ், கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட், பொருட்காட்சி கான்டிராக்ட் என அவர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த பிசினஸ்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கின்றன. தன்னுடைய பிசினசை விரிவுப்படுத்தும்வகையில் அடுத்ததாக ரெஸ்டாரெண்ட் ஒன்றையும் நடத்த பேசி முடிக்கிறார். ஆனால் தன்னுடைய கேரியரை சிறப்பாக்கும் பாக்கியாவிற்கு சொந்த வாழ்க்கை எப்போதும் அச்சுறுத்தலையே தருகிறது.

கேள்விக்குறியாகும் மகன்களின் வாழ்க்கை: தன்னுடைய வாழ்க்கை கோபியின் பிரிவால் கேள்விக்குறியானாலும் தன்னுடைய மகன்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆசைப்படும் பெண்களையே திருமணம் செய்து வைக்கிறார் பாக்கியா. ஆனால் இருவரும் வேறு வேறு பிரச்சினைகளில் தங்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றனர். செழியன் -ஜெனி விவாகரத்திற்காக கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. இதனிடையே எழிலின் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் வருவதால் அவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து மகன்களை மீட்கும் வழி தெரியாமல் முழி பிதுங்குகிறார் பாக்கியா.

செழியன் -ஜெனி விவாகரத்து: இதனிடையே இன்றைய எபிசோடில் செழியன் -ஜெனி விவாகரத்து கோர்ட்டில் நடக்கிறது. இதையொட்டி செழியனிடம் கேள்வி எழுப்புகிறார் நீதிபதி. அப்போது, தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொள்கிறார் செழியன். தொடர்ந்து பகிரங்கமாக ஜெனியிடம் மன்னிப்பும் கேட்கிறார். தொடர்ந்து அவர்கள் இருவரும் கவுன்சிலிங் பெற நீதிபதி அறிவுறுத்துகிறார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும் செழியன், ஜெனியை காருடன் எடுத்து சென்று பேச முயல்கிறார். இதற்காக எழில், செழியனை ஊக்குவிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இதுகுறித்து கேள்விப்படும் பாக்கியா, ஜெனியின் அப்பா என்ன சொல்வாரோ என்று பரிதவிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X